1.சந்தோஷ்
சாரங்கன் வீடு கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது அனைவரது முகமும் மகிழ்ச்சியில் ததும்பி கொண்டுள்ளது.சாரங்கன் பி.எஸ் இம்போர்ட்ஸ் அண்ட் எஸ்போர்ட்ஸின் ஆஸ்தான முதலாளி 1960 யில் அவனது தந்தையால் நிறுவப்பட்ட அந்த நிறுவனம் அவனது தந்தையின் எதிர்பாராத மரணத்தால் இழுத்து மூடும் நிலைக்கு சென்ற பொழுது சாரங்கன் அதை எடுத்து நடத்த ஆரம்பித்தான் இப்பொழுது இந்த நிறுவனத்தின் பெயரை தெரியாத தொழிலதிபர்கள் ஓரிருவர் தான் இருக்க முடியும்.இப்படிப்பட்ட முன்னேற்றத்தால் சாரங்கனுக்கு வீட்டிலும் சரி வெளியிலும் சரி மதிப்பு அதிகம் .சாரங்கன் குடும்பம் சென்னை போன்ற நகரில் யாரும் காண முடியாத (அதனாலே நான் காண விரும்பிய)கூட்டு குடும்பம்.அவனது மனைவி மஹாலக்ஷ்மி பேருக்கு தகுந்தாற் போல குணமுடையவள் அவர்களது ஒரே மகள் மாதங்கிச்செல்வி (மது).சாரங்கனது தம்பி சக்திவேல் அவனது நிறுவனத்திலேயே எக்ஸுகுயுடிவ் மேனேஜர் ஆக வேலை செய்து கொண்டுள்ளான்.அவனது மனைவி கஸ்தூரி.கஸ்தூரி-சக்திவேல் இணைக்கு ஒரே மகள் பூஜா காலேஜ் 2 ஆம் வருடம் படித்துக்கொண்டுள்ளாள்.சாரங்கன் தன் தங்கை சாரதாவை தனது நண்பன் ராகவனுக்கு கரம்பிடுத்து கொடுத்துள்ளான்.ராகவன் ஒரு பிரைவேட் ஹாஸ்பிடலில் வேலை செய்து கொண்டுள்ளான் அவர்களது மகன் சந்தோஸின் இந்தியா வருகை தான் அவர்களது இப்போதைய கோலாகலதிற்க்கு காரணம் .அவர்களது குடும்பம் அந்த கால விக்ரமன் படத்தினை போன்றது அந்த ஒரு வரியில் நான் ஒரு பத்தி சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன் நீங்களே இனி அந்த உறவின் முறைகளை புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு குடும்பமும் பாசம் ஈகோ உரிமை என பல பிரச்சனைகளால் நெய்யப்பட்ட ஒரு கூடை(கதை).அதற்கு நம் குடும்பமும் ஒரு விதிவிலக்கல்ல இதற்கு மேல் தெளிவான முன்னுரை கொடுத்து பொறுமையாக படித்து கொண்டிருக்கும் வாசகர்களை மேலும் சோதனைக்கு உள்ளாக்க விரும்பவில்லை.எனவே கதைக்குள் செல்வோம்.
கருப்பு நிற ஹ்யுண்டாய் கார் சாரங்கன் வீட்டின் உள்ளே நுழைகிறது . ராகவன் முன் சீட்டில் இருந்து இறங்கி பின் கதவை திறக்கிறார் . சந்தோஷ் காரினுள் இருந்து வருகிறான்.கஸ்தூரி கையில் ஆரத்தி தட்டுடன் வருகிறாள். சாரதா சக்திவேல் என எல்லாரும் அவளுக்கு பின்னால் ஆர்வத்துடன் வருகின்றனர் .சந்தோஷ் ஆசையுடன் சாரதாவை கட்டிப்புடிக்கிறான் .சாரதா அவனை உச்சிமுகர்ந்து முத்தம் கொடுக்கிறாள் . அனைவரிடமும் அன்பு பாராட்டி விட்டு சந்தோஷ் வீட்டின் உள் வருகிறான்.பூஜா அவனை பின்னால் இருந்து அடிக்கிறாள் .சந்தோஷ் அவளது ஜடையை பிடித்து இழுக்க வலியில் பூஜா "ஏய்...எரும வலிக்குது டா"அவன் கையில் இருந்து தப்பித்தவாறு கத்துகிறாள் .
கஸ்தூரி "அவன டா போட்டு கூப்டாதனு எத்தன தடவ சொல்லி இருக்கேன்".
"ஏண்டி அவள போட்டு திட்டுற அவ முறை பையன அவ பேர் சொல்லி கூப்டுரா அவ கூப்டாம வேற யார் கூப்பிட போறா"மஹாலக்ஷ்மி அவனை இழுத்து டைனிங் ரூமிற்கு அழைத்து செல்கிறாள். சந்தோஷை உக்கார வைத்து சாப்பாடு போடுகிறாள்.
"ஐயோ போதும் அத்த"சந்தோஷ் மறுக்கிறான்.சக்திவேல் "வந்த புள்ள முதல சாமி கும்பிடட்டும் அடுத்து வந்து சாப்பிட்டுக்களாம்.பூஜா அவன பூஜ ரூம்க்கு கூப்பிட்டு போமா"பூஜா அவனை இழுத்து கொண்டு செல்கிறாள் .
சாரதா பதறி அடித்து வந்து தடுக்கிறாள்."வெண்ணி ரெடி ஆயிருச்சு குளிஸ்டு சாமி கும்பிட்டுக்கலாம் "சாரதா சந்தோஷை பின் பக்க தோட்டத்திற்கு அழைத்து சென்று எண்ணெய் ஊற்றி குளிப்பாட்டுகிறாள்.சந்தோஷ் குளித்து முடித்து வருவதற்குள் நாம் அவனைப்பற்றி பார்த்து விடுவோம்.
சந்தோஷ் குழந்தை இல்லாத வீட்டில் முதல் குழந்தையாக பிறந்ததால் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டவன்.சிறு வயது முதலே மாதங்கியிடம் பாசமும் காதலும் கொண்டவன்.மாதங்கி பிறந்த பொழுது அவளை சந்தோஷிடம் தந்தபொழுது இருந்தே அவன் காதல் வளர தொடங்கிவிட்டது.ஸ்கூலுக்கு செல்ல அழுது கொண்டிருந்தவன் அவள் தன்னுடன் ஸ்கூலுக்கு வர ஆரம்பித்தவுடன் முதல் ஆளாக அவளுடன் கிளம்பலானான்.பள்ளி படிப்பை முடித்தவுடன் காலேஜ் படிப்பதற்கு லண்டன் சென்றான் ராகவனின் வற்புறுத்தலினால்.... இப்பொழுது லண்டன் வாழ்க்கை அவனுக்கு பழகியாகிவிட்டதால் அங்கு வாழ விரும்புகிறான் ஆனால் சாரதாவிற்கு அதில் விருப்பமில்லை எனினும் எப்படியேனும் லண்டனில் செட்டிலாகி விட வேண்டும் என்ற கொள்கையுடனுள்ளான்.அப்படிப்பட்டவன் இப்பொழுது இந்தியா வந்ததிற்கான காரணத்தில் முதன்மையானது மாதங்கி.அங்கு சென்றாலும் 24 மணி நேரமும் மாதங்கியுடன் வீடியோ காலில் பேசப் போகும் அந்த சில நிமிடங்களுக்காகவே காத்துக்கொண்டிருப்பான்.அப்படிப்பட்டவன் இப்பொழுது மாதங்கியை பார்க்க எவ்வளவு ஆசையோடு இருப்பான் என கற்பனை செய்து பாருங்களேன் இல்லை இல்லை கற்பனைக்கு சென்று விடாதீர்கள் ஏன் என்றால் சந்தோஷ் குளித்து முடித்து வந்துவிட்டான்.
சந்தோஷ் குளித்து முடித்துவிட்டு ஸ்லீவ்லெஸ் பனியன் போட்டு கொன்டு வந்து சோஃபாவில் சாரங்கன் பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிறான்.சாரதா இருவருக்கும் டீ கொண்டு வருகிறாள்.
"என்னப்பா உடம்பு எலச்சிட்ட சரியா சாப்பிட்றது இல்லையா"சாரங்கன் வருத்தத்துடன் கேட்கிறார்.
"அப்படிலா இல்ல மாமா"சந்தோஷ் டீ யை வாங்கி குடிக்கிறான்.
"ம்ம்...அடுத்து என்ன பண்ணலானு இருக்க"சாரங்கன்.
சாரதா இருவருக்கும் பின் சுவற்றில் போய் நின்று கொள்கிறாள்.
"லண்டன்ல ஒரு ஜாப்காக இன்டர்வியூ அட்டெண்ட் பண்ணிருக்கேன் கிடைக்கிற மாரி இருக்கு இன்னும் ஒரு 2 மந்த்ஸ்ல கண்ஃபிர்ம் ஆயிரும்"
சாரங்கன் இடைமறுக்கிறார் "இல்லப்பா அது வேண்டாம் படிப்புக்கு அங்க போனது சரி வேலைக்காக அங்க போறதுலா வேண்டாம்.இங்க சொந்த சாதி சனத்தெல்லா விட்டுட்டு அங்க போய் இருந்துகிட்டு சொந்த ஊருக்கே விருந்தாளியா வர்ர வாழ்க்கை வேணாம்பா அதுக்கு நா எப்போதுமே சம்மதிக்க மாட்டேன்.உன்ன அங்க அனுப்பிட்டு உங்க அம்மாவ எங்களால சமாளிக்க முடியாதுப்பா .நம்ம கிட்ட கம்பெனி இருக்கு வந்து நீ ராஜா மாதிரி எடுத்து நடத்து யாரு வேண்டாம்னு சொன்னா"சந்தோஷ் யோசித்து கொண்டிருக்கிறான்.
சாரதா கவலையுடன் நின்று கேட்டுக்கொண்டு இருக்கிறாள்.
"நா என்னோட ஒப்பீனியன் தா சொன்னேன் உன்ன கம்ஃபல் பண்ணல உனக்கு நா சொன்னது சரினு பட்டா செய் இல்லனா உனக்கு என்ன தோணுதோ அத செய்" சாரங்கன் .
"என்ன மாமா நீங்க போய் இப்டிலா பேசிட்டு ....."சந்தோஷ்.
"நீங்க வேற வந்த உடனே புள்ளைய கூப்பிட்டு வச்சு ரம்பம் போட்டுட்டு இருப்பிங்க ....நீ போய் ரெஸ்ட் எடுப்பா முதல"மஹாலக்ஷ்மி சாரங்கன் அருகில் வந்து உட்காருகிறாள்.சந்தோஷ் எழுந்து செல்கிறான்.
சந்தோஷ் ரூமில் பெட்டில் படுத்தவாறு ஏதோ யோசித்து கொண்டே இருக்கிறான்.பூஜா அவன் பேக்கை செக் பண்ணி கொண்டுள்ளாள்.சாரதா அவனது துணிகளை அலமாரியில் அடுக்கி வைத்துக்கொண்டு இருக்கிறாள்.
"ம்மா....மது எங்க ஆளையே காணோம்"சந்தோஷ்.
பூஜா பேக் ஜிப்புகளை ஆராய்ந்தவாறு"அவ காலேஜ் போய்ட்டா ....நா உனக்காக லீவு போட்ருக்கேன் ஆனா அவள பாரேன்"
"நீ முதல பேக்க கிளராத"சந்தோஷ்.
"அவளுக்கு ஏதோ இம்பார்டண்ட் எக்ஸாமாம்பா அவ லீவ் போடுறேன்னு தா சொன்னா நா தா எக்ஸாம் தா முக்கியம்னு அனுப்பி வச்சேன்"சாரதா சந்தோஷ் அருகில் வந்து சொல்கிறாள்.
"சரி நீ டையர்டா இருப்ப ரெஸ்ட் எடு"சாரதா சந்தோஷின் தலையை வருடிவிட்டு செல்கிறாள்.
சந்தோஷ் கண்மூடி தன் கற்பனையால் தன் கனவில் மாதங்கியை கொண்டு வருகிறான்.சிறுவயதில் அவளுடன் வாரந்தோறும் பீச் சென்று விளையாடியதையும் நினைத்து கொண்டுருக்கிறான்.
பூஜா பேக்கில் இருந்து ஸ்வெட்டரை எடுக்கிறாள்."அங்க எப்போவுமே ஸ்வெட்டர் போடனுமோ குளிரா இருக்கும்ல"சந்தோஷ் தூக்கம் கலைந்து எழுகிறான்.
"பூஜா தலை வலிக்குது கொஞ்சம் அமைதியான இடத்துல இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுறையா".
"ஓகே ஓகே புரியுது நீ தூங்கு நா ஈவினிங் காஃபி குடிக்கிறப்ப எழுப்ப வரேன்.ஹவ் எ ஸ்வீட் ட்ரீம்ஸ"சந்தோஷ் மதுவின் வரவிற்காக கண்ணை மூடி காத்துக்கொண்டிருக்கிறான்....கனவுகளுடன்.
2.மாதங்கி
"என்ன லண்டன் மாப்ள வந்தாச்சா...."ரம்யா தன் பக்கத்தில் வல்லியம்மாள் காலேஜ் லைப்ரரியில் உட்கார்ந்திருக்கும் மதுவிடம் கேட்கிறாள்.
"மேள தாளம் கொட்ட மலர் தூவ வரவேத்து வீட்டுல அழைச்சிட்டு வந்துருப்பாங்க.இப்ப துயில் கொண்டுட்டு இருப்பார்னு நினைக்குறேன்"மது லைப்ரரியனிற்கு கேட்கா வண்ணம் மெதுவாக பேசிக்கொண்டிருக்கிறாள்.
"என்னடி பேசிட்டு இருக்கீங்க " கீர்த்தி ஆவலுடன் ரம்யாவிடம் கேட்கிறாள்.லைப்ரரியன் அனுஷா சுற்றி முற்றி பார்க்கிறாள் பேச்சுசத்தம் கேட்பதை கவனித்து.
அனுஷா இந்த கல்லூரியில் கவனிப்பார் இன்றி கிடந்த லைப்ரரியை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து நிறுத்திய பெருமை அவளையே சாரும் .இன்று புத்தக பிரியர்களுக்கு அங்கு அவ்வளவு சௌகரியங்கள் கிடைக்கிறதென்றால் அவளின் விடாமுயற்சியும் நிறுவனம் அவள் மேல் வைத்த நம்பிக்கையுமே காரணம் அவளும் அந்த நம்பிக்கைக்கு ஏற்ப மாணவர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்வாள்.அவள் லைப்ரரிக்கு என தனி செட் ஆஃப் ரூல்ஸ் வைத்து இருக்கிறாள் அவற்றுள் முதல் ஒன்று " டோன்ட் மேக் நாய்ஸ் இன்சைட் ".
"ஏய்...கத்தாத மெதுவா பேசுடி மேடம் பாத்துட்டா பிரச்சனை...நா உன்கிட்ட கிளாஸ்ல வந்து சொல்றேன்''ரம்யா கீர்த்தியிடம் கிசுகிசுக்கிறாள்.
"அந்த ஆத்தாக்கு லா பயந்தா நம்ம புலப்ப ஓட்ட முடியுமா”கீர்த்தி சிரித்துக்கொண்டே ரம்யாவிடம் கூறுகிறாள்.ஆம் அனுஷா எப்போதும் சிடு சிடு வென இருப்பதால் அந்த காலேஜ் இளசுகள் அவளுக்கு வைத்த பெயர் ஆத்தா.
"நம்ம ஊருல ஒரு பொண்ணு பிறந்த உடனே அவ இவனுக்குதாணு முடிவு பன்னிடுறாங்கள ஏதோ பண்டமாற்று முறை மாறி பொண்ண கொடுத்து உறவ புதுப்பிச்சிக்கிறாங்க சிலபேர் தன் பொண்ணுக்கு தான் கணவன தேர்ந்தேடுக்க முடியாதத சோசேட்டில அவமானம்னு நினைக்குறாங்க அதுதா பல காதல்களுக்கு பேரெண்ட்ஸ்ட வர எதிர்போட அடிப்படையில ஒண்ணா இருக்கு".
மது"நீ இத பத்தி ஒரு புக் எழுத வேண்டியதுதான".
"எழுதணும் இப்ப ஒரு புக் எழுதிட்டு இருக்கேன் லவ்வ பத்தி டிஃபிரென்ட் ஒப்பீனியன் இருக்குற பலர் ஒவ்வொரு இடத்துல மீட் பண்ணா அவங்களோட தாட்ஸ் எப்படி அடுத்தவங்கள டிஸ்டர்ப் பண்ணுதுனு அதுல ஒண்ண மாறியும் ஒரு கேரக்டர் இருக்கு"அனுஷா ரம்யாவை பார்த்துவிடுகிறாள்.
"ரம்யா பீ குயைட் ஆர் கெட் அவுட்"அனுஷா கண்டிப்புடன் கத்துகிறாள்.
ரம்யா அமைதியாகிறாள் .இந்த இடத்தில் ரம்யாவை தவிர வேறு யார் இருந்தாலும் சத்தம் போட்டு ஐ.டி வாங்கி வைத்து ஆர்ப்பாட்டம் பண்ணி அனுப்பி இருப்பாள் ஆனால் அங்கு இருப்பது ரம்யா என்பதால் அவ்வாறு நடக்கவில்லை.ரம்யா என்ன அப்படி ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா இரம்யாவிற்கு பிறந்ததில் இருந்தே எழுத்தில் அதிக ஆர்வம் அதனால் நாள் தவறாமல் லைப்ரரிக்கு வந்துவிடுவாள் மாதம் ஒரு கட்டுரை அல்லது கதை எழுதி விடுவாள் அதை அனுஷா திருத்தம் செய்து பிரதிப்பிக்க உதவுவாள் . இப்படி ரம்யா அனுஷாவின் ஆஸ்தான நண்பி ஆனதனால் அவளுக்கு இந்த சலுகை.....நாம் ரம்யா அனுஷாவை பற்றி பேசிக்கொண்டிருந்த சமயத்தில் நம் கோஷ்டி லைப்ரரியில் இருந்து எங்கோ சென்று விட்டது அவர்களை கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு கடினமல்ல ஒன்று க்ளாஸ்ரூமில் இருப்பார்கள் இல்லை என்றால் அன்வர் பாய் கான்டீனில் முதல் பெஞ்சில் உட்கார்ந்து பப்ஸ் தின்றுகொண்டிருப்பார்கள் அல்லது நாம் முந்தி அவர்களை சந்தித்த இடம். அவர்கள் வேறு எங்கும் சென்று பொழுது போக்க மாட்டார்கள்.
ம்ம்.நான் சொன்னது போல் அவர்கள் கிலாஸ்ரூமில்தான் அரட்டையடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.இதற்காக நீங்கள் என்னை பாராட்ட வேண்டாம் மேற்கொண்டு கதையை வாசித்தாலே போதும்.
"அதுதா காரணமா என்னடா டாட்ஸ் லிட்டில் பிரின்சஸ் எப்பவும் சனிக்கிழமை காலேஜ் வர மாட்டாங்கலே இன்னைக்கு என்ன புதுசா வந்திருக்காங்கன்னு பாத்தேன் " கீர்த்தி பெஞ்சில் சாய்ந்து படுத்து இருக்கும் மதுவை கிண்டலடிக்கிறாள்.
"உனக்கு ஏன் அவன சுத்தமா பிடிக்காது"ரம்யா.
"பிடிக்காது நா பிடிக்காது அவ்வளவுதான்" மது.
"அதுதா ஏன்"கீர்த்தி.
"ரீசன் சொல்லணும்னு சொன்னா 2 சொல்லலாம் சின்ன பிள்ளைல இருந்து அவன வீட்டுல ரொம்ப செல்லமா கொஞ்சுவாங்க எதுக்கு எடுத்தாலும் அவன தா கொஞ்சுவாங்க ".
"இது பேர் பொறாமை"ரம்யா குறுக்கிடுகிறாள்.
"தப்பில்லையே நம்ம வீட்டுல நம்ம அப்பா அம்மாக்கு நாம தா பர்ஃஸ்ட் ப்ரியாரிட்டியா இருக்கணும்னு நினைக்குறது ....அது மட்டுமில்லாம சின்ன பிள்ளைல இருந்து எங்க வீட்டுல மது உனக்கு தா அவன் தா உன்ன கல்யாணம் பண்ண போரான்னு சொல்லிகிட்டே இருக்கிறதுனாலையே அவன பாத்தாலே எரிச்சல் தான் வரும்"
"பிறகென்ன இன்னைக்கு வீட்டுக்கு போன உடனே ரொமான்ஸ் தான"கீர்த்தி கலாய்க்க அனைவரும் மதுவை பார்த்து சிரிக்கின்றனர்.
காலேஜ் பெல் அடிக்கிறது அனைவரும் அவர்கள் பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்புகின்றனர்.
மாதங்கி ஸ்கூட்டியை உருட்டிக்கொண்டு வருகிறாள்.வாட்ச்மன் திறந்தவாரு"என்ன பாப்பா ஸ்கூட்டிய தள்ளிகிட்டு வர ..."
மாதங்கி கோவத்தை மறைத்து சிரித்தவாறு "ஈ...வேண்டுதல் அதான்"
சந்தோஷ் வீட்டு வாசலில் நின்று டீ குடித்து கொண்டுள்ளான்.மாதங்கி ஸ்கூட்டியை தள்ளியவாறு கலைந்த கூந்தல் முகத்தில் விழுவதை கைகளால் ஒதுக்கியவாறு பேக்கை சைடில் தொங்கவிட்டவாறு நடந்து வருவதை ரசித்துக்கொண்டிருக்கிறான்.
ஸ்கூட்டியை ஸ்டான்ட் போட்டுவிட்டு மாதங்கி "இருடி பஞ்சரா ஆகுற பஞ்சரு அப்பாட்ட சொல்லி உன் சேப்பையே மாத்த வைக்குறேன்"ஸ்கூட்டியோடு புலம்பிக்கொண்டுருக்கிறாள்.
மாதங்கி ஸ்கூட்டியோடு புலம்பிக்கொண்டிருப்பதை கேட்டு சந்தோஷ் சிரிக்கிறான். சிரிப்பு சத்தம் கேட்டு மாதங்கி திரும்பி பார்க்கிறாள்.சந்தோஷ் அங்கு நின்று கொன்டுருக்கிறான்.மாதங்கி அவனை அதிர்ச்சியுடன் பார்க்கிறாள்......
3.சந்தோஷ் -மாதங்கி
மாதங்கி சந்தோஷை பார்க்கிறாள் .அவளுக்கு அவன் தன்னை பார்த்து சிரித்துக்கொண்டிருப்பது கோபத்தை ஏற்படுத்தினாலும் அதைவிட அவளுக்கு பயம் தான் வருகிறது.தலையை குனிந்தவாறு வீட்டின் உள் செல்ல முயல்கிறாள் .சந்தோஷ் வாசல் கதவில் கையை வைத்து வழியை மறிக்கிறான்.மாதங்கி என்ன சொல்வது என தெரியாமல் பேக்கின் வாரினை இழுத்துக்கொண்டிருக்கிறாள். சந்தோஷ் அவளை பார்த்து சிரித்தவாறு கையை எடுக்கிறான் .மாதங்கி வேகமாக வீட்டின் உள் செல்கிறாள்.
கஸ்தூரி"ஏண்டி இவளோ லேட்டு "
"ஸ்பெஷல் க்ளாஸ் இருந்துச்சு"மாதங்கி வேகமாக சென்று கதவை மூடி கொள்கிறாள்.
மாதங்கி கதவை மூடி அதன் பின்னால் நின்று மூச்சு வாங்குகிறாள்."இவனை பார்த்து நா ஏன் பயந்தே இஎதுக்கு பயபுடனும் பெரிய ராஜா மாறி வாசல்ல நின்னு சீன் போட்டுட்டு இருக்கான் பாப்போம் இது இன்னும் எவ்வளவு நாள் நடக்குதுனு "மாதங்கி தனக்கு தானே சொல்லி கொள்கிறாள் . பேக்கை சுவரில் மாட்டிவிட்டு பெட்டில் விழுகிறாள்.கதவு தட்டும் சத்தம் கேட்கிறது "மது ...சந்தோஷ் வந்துட்டான் உனக்கு ஏதோ கிஃப்ட்லா வாங்கிட்டு வந்துருக்கானாம் வந்ததுல இருந்து உன்னதா தேடிட்டு இருந்தான் கதவ திறமே ஒரு நிமிஷம்"மாதங்கி நகத்தை கடிக்கிறாள் என்ன செய்வது என யோசிக்கிறாள். திடீரென எழுந்து பாத்ரூமில் தண்ணியை திறந்துவிடுகிறாள். "ம்மா....குளிஸ்டு இருக்கேன் குளிச்சு முடிஸ்டு வரேன்" கதவு தட்டும் சத்தம் நின்று விடுகிறது.பெட்டில் வந்து உட்கார்ந்து யோசிக்கிறாள் நான் ஏன் இவ்வளவு பயப்படுகிறேன் என அவள் பயப்படுவது அவனை பார்க்க அல்ல அவனுடன் இவர்கள் இவளை சேர்த்து வைத்து பேசி சிரிப்பார்கள் அதை நினைத்தால் தான் தனக்கு பயம் என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறாள் தண்ணி பக்கெட் நிறைந்து கீழே விழுகிற சத்தம் கேட்டு வேகமாக எழுந்து தண்ணியை ஆஃப் செய்துவிட்டு பெட்டில் வந்து விழுகிறாள். இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே ரூமினுள் கதவை சாத்திக்கொண்டிருப்பது என யோசித்தவாறே உறங்கி விடுகிறாள்.
கதவு தட்டும் சத்தம் கேட்கிறது .மது அலறியடித்து எழுகிறாள் "என்னமா வேணும் உனக்கு" கோபத்துடன் கத்துகிறாள்.
"நா அப்பா வந்துருகேன்மா கொஞ்சம் கதவ திற"மாதங்கி வேகமாக சென்று கதவை திறக்கிறாள்.
சாரங்கன்"என்னமா ஏதும் உடம்பு கெடம்பு சரி இல்லையா"
மாதங்கி இல்லையென தலையாட்டுகிறாள்.
"அம்மா சொன்னா…….அடுத்த வாரம் புது ஸ்கூட்டி வாங்கி தந்துர்ரேன் போதுமா"
"இல்லப்பா அதுலா வேணாம்"மாதங்கி மறுக்கிறாள்.
"பிறகென்னமா ஈவினிங்ல இருந்து ரூம் விட்டு வெளிய வரலையாம் வா சாப்பிட போவோம்இவயசுப்புள்ள கரக்ட் டைம்ல சாப்பிட வேணாமா"
மாதங்கி செல்லமாக தலையாட்டுகிறாள் "சரிப்பா நா ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன்" தலையை சீவி கிளிப்போட்டு கொண்டு செல்கிறாள்.மாதங்கி குனிந்துகொண்டு டைனிங் டேபிலில் பூஜா அருகில் உட்காருகிறாள்.
மாதங்கி தலையை குனிந்தவாறு தன் எதிரில் உட்கார்ந்து இருப்பவர் யாரென பார்க்கிறாள் அது ராகவன் இஅவருக்கு பக்கத்தில் இருப்பவரை பார்க்கிறாள் அவர் சக்திவேல்.
பூஜா"என்ன யாரையோ தேடுற மாறி இருக்கு"மதுவின் காதில் கிசுகிசுக்கிறாள்.
மது இல்லையென தலையாட்டுகிறாள்.பின் டைனிங் டேபிலில் சந்தோஷ் இல்லாததை பார்க்கிறாள்.பூஜாவை மெதுவாக அழைத்து"அவன் எங்க".பூஜா சிரிக்கிறாள் அதனால் அவளுக்கு புரை ஏறுகிறது .
"தண்ணி குடிடி...."கஸ்தூரி.
பூஜா தண்ணி குடிக்கிறாள்."அவன் உன்ன தேடி உன் ரூம்க்கு போனா இகரெக்டா நீ சாப்பிட இந்த வழியா இங்க வந்து அவன தேடிட்டு இருக்க ..."மாதங்கி அவசரமாக எழுகிறாள்.
"என்ன மது எந்திர்ஷ்ட சாப்பிடலையா.."ராகவன்.
"இல்ல மாமா ஒரு முக்கியமான அசைன்மென்ட் சப்மிட் பண்ண மறந்துட்டேன் "மாதங்கி சமாளிக்கிறாள்.
"எதுவா இருந்தாலும் சாப்பிட்டுட்டு போய் பண்ணு.."ராகவன் கையை பிடித்துஉட்கார வைக்கிறார்.மாதங்கி அவசரம் அவசரமாக சாப்பிட ஆரம்பிக்கிறாள்."பாத்து சாப்புடுடி"மஹாலக்ஷ்மி கூறுவதை கவனிக்காமல் மது அரக்க பறக்க சாப்பிடுகிறாள்.
சந்தோஷ் மதுவின் ரூம்குள் வருகிறான்.மதுவின் அறை எங்கு பார்த்தாலும் துணிகளும் பொருள்களாலும் நிறைந்து இருக்கிறது.ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக பெண்கள் அறையில் இருக்கும் காஸ்மெட்டிக்ஸ் வாசனை அங்கு காணப்படவில்லை.சந்தோஷ் பெட்டில் கிடைக்கும் ஜிம்மிசை போர்வையை வைத்து மூடுகிறான் கலைந்து கிடக்கும் துணிகளை எடுத்துவைக்கிறான் டேபில் மேல் இருக்கும் கருப்பு நிற புடவை கட்டிக்கொண்டு தீபாவளி கொண்டாடிக்கொண்டிருக்கும் போட்டோவை பார்க்கிறான்.மேல் ஷெல்ப்பில் இருக்கும் புக்ஸை எடுக்கிறான்.அதில் டால்ஸ்டாயின் "அன்னே கரினினா" புக் ஒன்று இருக்கிறது அதை திறந்து பார்க்கிறான் அதில் ரம்யா என பெயர் போடப்பட்டுள்ளது.சந்தோஷ் சைடில் இருக்கும் ஒரு பேக்கை பார்க்கிறான்.அதில் கவர்களாக இருக்கிறது சந்தோஷ் அதை அவிழ்க்கிறான்.மாதங்கி வேகமாக கதவை திறக்கிறாள்.
"ஹல்ல்லோ...."மாதங்கி மூச்சிறைக்கிறாள்.
சந்தோஷ் "கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கோ ".
மாதங்கி மூச்சு வாங்குகிறாள் ."டால்ஸ்டாய் புக்ஸ் லா படிப்பையா"புக்கை திருப்பிக்கொண்டே கேட்கிறான்.
"அது என்னது இல்ல"மாதங்கி
"நா படிப்பையானு தான கேட்டேன்" சந்தோஷ் மாதங்கியை பார்க்கிறான்.
"கொஞ்சம் கூட மேனர்ஸ்ன்னு ஒண்ணே சொல்லித்தரலையா....அடுத்தவங்க ரூம்ல அவங்க பெர்மிஷன் இல்லாம வரக்கூடாதுன்னு"மாதங்கி அவன் அடுக்கிவைத்த துணிகளை கலைத்தவாறு பேசுகிறாள்.அப்பொழுது டேபில் மேல் இருந்த போட்டோ ஃபிரேம் மட்டும் இருப்பதை பார்க்கிறாள் .
"அங்க இருந்த போட்டோ எங்க" சந்தோஷ் தன் கையில் இருக்கும் போட்டோவை தூக்கி காண்பிக்கிறான்"இதுவா...."
"ஹவ் டேர் யூ டச் மை போட்டோ...ஒரு பொண்ணு ரூமுக்குள்ள வந்ததே தப்பு அதுல அவ போட்டோவ எப்படி நீங்க ...."மாதங்கி கத்துகிறாள்.
"ஓ... நீ மட்டும் எங்க அம்மா ரூம்ல யாருக்கும் தெரியாம வந்து என் போட்டோவ எடுக்கலாம் அதே இது நாங்க பண்ணா இன்டீசன்சியா...."
(இது எப்பொழுது நிகழ்ந்தது என்று வாசகர்கள் என்னிடம் கேட்கவேண்டாம்...இது நிகழ்ந்து 4 வருடங்கள் ஓடிவிட்டன...இதை நான் முன்கூட்டியே கூறி குழப்ப விரும்பவில்லை எனினும் இதனை விளம்பரப்படுத்தி முன்னமே கூறி பின்வரும் அத்தியாயத்தில் முழுவதுமாக விளக்க பிரியப்பட்டதால் இப்பொழுது இதனை மேற்கோளிட்டுள்ளேன்.)
"அது.....அது ....ரெண்டும் ஒன்னா "கீழே குனிந்து கொண்டே ஏதோ சொல்லவந்து சொல்லாமல் நிறுத்தியவாறு நின்றுகொண்டிருக்கிறாள் .
"நாங்களும் சில விஷயத்துல இகுவளிட்டி பேசனும்ல.."சந்தோஷ் மது அருகில் வருகிறான்.
மாதங்கி கையை நீட்டியவாறு"ப்ளீஸ் ....அந்த போட்டோவ ...."அவளால் மேலே சொல்ல முடியாமல் கண் கலங்குகிறாள்.
"ஏய்...சீ நா சும்மா விளையாண்டேன் விட்டா அழுதுருவ போல"சந்தோஷ் போட்டோவை மதுவிடம் தருகிறான்.
"அது என்ன அவ்வளவு இம்பார்டண்டா "சந்தோஷ் அவளது பெட்டில் உட்காருகிறான்.
"கொஞ்சம் பேசலாமா"சந்தோஷ் அமைதியாக இருக்கும் மாதங்கியிடம் கேட்கிறான்.
அவள் மெதுவாக ஏதோ முணுமுணுக்கிறாள்.
"என்னது...."சந்தோஷ் கேட்கிறான்.
"நாளைக்கு எக்ஸாம் இருக்குது படிக்கணும்..."மாதங்கி எங்கோ பார்த்தபடி சொல்கிறாள்.
"ம்...சரி படி"சந்தோஷ் பெட்டில் இருந்து எழுகிறான்...பின் மீண்டும் வந்து "குட் நைட்....ஹவ் எ ஸ்வீட் ட்ரீம்ஸ்"சந்தோஷ் மாதங்கியிடம் பதிலை எதிர்பார்க்கிறான்.அவள் அமைதியாக இருக்கவும் சிரித்துக்கொண்டே கதவை மூடிவிட்டு செல்கிறான்.
மாதங்கி எதையோ யோசித்தப்படி பெட்டில் உக்கார்ந்து அந்த போட்டோவையே பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.
4. சந்தோஷ் - மைக்கேல்
சாரங்கன் சந்தோஷை அவன் ஆஃபீஸிற்கு அழைத்து வருகிறான்.சந்தோஷை அனைவரும் வழியில் நின்று வரவேற்கின்றனர்.சந்தோஷ் சாரங்கன் தன்னிடம் வரும்முன் கூறியதை நினைத்து பார்க்கிறான்."ஒரு இரண்டு மந்த் ஒர்க் பண்ணி தொழில கத்துக்கோ அடுத்து உனக்கு கொஞ்சம் இதுலா பழக்கின பிறகு நா ரிடைர்ட் ஆகிறளானு இருக்கேன்...".சந்தோஷ் எரிச்சலுடன் வந்து உட்கார்ந்திருக்கிறான்இஏதோ 2-3 வாரம் ஆஃபீஸ் வந்து விட்டு சென்றால் பொழுதுபோகும் என்று தான் நினைத்து அவன் சம்மதித்தான் ஆனால் அவன் தலையில் இப்படி ஒரு பொறுப்பை கொடுத்துவிட்டாரே அவன் மாமா என்று.
சந்தோஷ் தன்னை யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டு திரும்பி பார்க்கிறான்.
"சார் உங்கள சாரங்கன் சார் வரச்சொன்னாரு"ஆஃபீஸ்பாய்.
சந்தோஷ் எழுந்து சாரங்கனது கேபினிற்கு செல்கிறான்.சாரங்கன் கேபினில் அவர் அறையில் 28 வயது மதிப்புள்ள வாலிபருடன் உட்கார்ந்து பேசி கொண்டிருக்கிறார்.சந்தோஷ் கதவை திறக்கிறான்."வா சந்தோஷ் "சாரங்கன் அவனை அழைக்கிறார்.அந்த வாலிபர் இவனை திரும்பிப்பார்க்கிறார்.
"சந்தோஷ் இது தான் மைக்கேல்..மைக்கேல் இது தா சந்தோஷ்..."சந்தோஷ் அவருக்கு கை கொடுக்கிறான் அவனும் சிரிப்புடன் கை கொடுக்கிறான் .
"சந்தோஷ் மைக்கேல் தா உனக்கு ட்ரைனர்இமைக் இனி சந்தோஷ பாத்துக்க வேண்டியது உன் பொறுப்பு...."
"இட்ஸ் மை ப்லசர் சார்..."மைக்கேல்.
"தேங்க்ஸ் மைக் நௌவ் யூ கேன் கோ அண்ட் டு யூர் ஒர்க் "சாரங்கன்.
மைக்கேல் எழுந்து வெளியே செல்கிறான்.சந்தோஷும் எழுகிறான் சாரங்கன் அவனை சைகையால் உட்காரச்சொல்கிறார்.சந்தோஷ் உட்காருகிறான்.
"ஜூஸ் எதா சாப்பிட்ரையா "சாரங்கன். சந்தோஷ் வேண்டாம் என தலையாட்டுகிறான்.
"இப்ப இருந்தானே அவ பேர் மைக்கேல் ..."சாரங்கன்.
"இப்பதா சொன்னிங்களே...."
"முழுசா சொல்றத கேளு...."
"ம்ம்...சொல்லுங்க"
"அவன் ரொம்ப திறமசாலி மூணு வருஷம் தா ஆகுது கம்பெனில சேர்ந்து ஆனா அவனால நம்ம கம்பனிக்கு எக்கச்சக்க டீல்சும் அது மூலமா க்ரோர்ஸ்ல ப்ராஃபிட்டும் வந்திருக்கு....சொல்லப்போனா நீ இல்லாட்டி சக்தி போஸ்ட அவனுக்கு தா குடுக்கலானு இருந்தேன் இப்ப நீ வந்துட்ட. அவன்கிட்ட தொழில் சம்பந்தமா என்ன விஷயம் வேணா கேட்டு தெரிஞ்சிக்கோ தொழில் சம்பந்தமா மட்டும்..... மத்தபடி எந்த ப்ரண்ட்ஷிப்பும் அவன்கிட்ட நீ வச்சிக்கவேணாம்."
"ஏன்...."சந்தோஷ்.
"ஏனா அவன்கிட்ட கேரக்டர் கொஞ்சம் சரியா இருக்காது நமக்கு அது பிடிக்காதுஇஅவன் கொஞ்சம் வித்தியாசமான ஆளு..."சாரங்கன் .
சாரங்கனிற்கு போன் வருகிறது .சந்தோஷ் எழுகிறான் .கேபினை விட்டு வெளியே வருகிறான்."நிஜமாவே மைக்கேல் வித்தியசமான கேரக்டர்தா எல்லாரும் ஃபார்ம்ல் போட்டு வெறித்தனமா ஒர்க் பண்ணிட்டு இருந்தப்ப அவன் மட்டும் டி சர்ட் போட்டுட்டு ஜாலியா காம்ப்யூட்டர்ல வேல பாத்திட்டு இருந்தாஇஎனக்கு ஒரு விஷயம் மட்டும் தெரியுது நா அவன்கிட்ட இருந்து லைஃப்ல ஏதோ கத்துக்கப்போறேன் புதுசா..."சந்தோஷ் தனக்குள் சொல்லிக்கொண்டே செல்கிறான்.
சந்தோஷ் வேலைசெய்து கொண்டிருக்கிறான்.மைக்கேல் அவன் அருகே வருகிறான்."என்ன படிச்சிருக்க..."
"ம்.பி.ஏ பண்ணிருக்கேன் சார்..."சந்தோஷ்.
"இந்த சார்ல வேணாம் ....இனி மைக்னு மட்டும் கூப்பிடு போதும் ...நா உன்ன விட ஒரு 2-3 இயர்ஸ் தா டிஃப்பரென்ஸ்னு நினைக்குறேன்"மைக்
சந்தோஷ் சிரித்துக்கொண்டே சரி என சைகை செய்கிறான்.
"நீ என்ன தெரிஞ்சிக்கணுமோ அத கேளு ஆனா நீயா கத்துக்கோ முடிஞ்சளவு அப்ப தா உனக்கு அந்த எக்ஸ்பிரியன்ஸ் கிடைக்கும் உன்னால எதா பிரச்சனை சால்வ் பண்ண முடியலனா மட்டும் வா நா பாத்துக்குறேன்"மைக்கேல் அவன் இடத்திற்கு சென்று வேலை செய்ய தொடங்குகிறான்.
சந்தோஷும் மைக்கும் ஒன்றாக சாப்பிடுகின்றனர்."இன்னு ஒரு 2-3 ம்ந்த்ஸ்ல கம்பெனி ஒரு ஃபிரஸ் ஹேண்ட்ஸ்க்கு மாறப்போதுல"மைக் .
"நீ வேற மைக் எனக்கு இதுல இன்ட்ரஸ்ட்டே இல்ல எனக்கு லண்டன் போகதான் ஆசை அனா இவங்கதா புடிச்சி இப்படி உட்காரவச்சிட்டாங்க "
"லண்டன்ல படிச்சபிள்ளைய இங்க உட்காரச்சொன்னா எப்படி இருப்பாரு அங்க விதவிதமா பாத்துட்டு இங்க இதலா எப்படி பாக்கமுடியும் "அவர்கள் அருகில் வந்து நிற்கும் சந்தியாவை பார்த்து சொல்கிறான்.
சந்தியா மைக்கேலை கிள்ளுகிறாள்."மைக் நாளைக்கு ஈ.சி. ஆர் ல பார்ட்டிக்கு வந்துரு".சொல்லிவிட்டு செல்கிறாள்."சந்தியா மீட் மிஸ்டர் சந்தோஷ் இவரு தா இன்னும் 2 மந்த்ல ...."சந்தோஷ் மைக்கேலின் வாயை பொத்துகிறான்."அதலா இப்ப வேண்டாம்....வெறும் சந்தோஷ் போதும்....நைஸ் டு மீட் யூ"சந்தோஷ் சந்தியாவிடம் கைக்கொடுக்கிறான்.
"சந்தோஷ் ஃப்ரைடே எதா ஒர்க் இருக்கா..."சந்தியா கேட்கிறாள்.சந்தோஷ் இல்லை என தலையாட்டுகிறான்.
"எங்கன்னனுக்கு மேரேஜ் இந்த சண்டே இதுங்களுக்குளா ஃப்ரைடே பார்ட்டி அரைஞ்சு பண்ணிருக்கேன் .நீயும் வந்தா ஆஃபீஸ்ல வேல செய்யுற எல்லார்க்கிட்டையும் கொஞ்சம் பழகிக்கலாம்ல...."சந்தியா.
"பாப்போம் ....முடிஞ்சா கண்டிப்பா வரேன்"சந்தியா நன்றி சொல்லிவிட்டு வேலை செய்ய அரம்பிக்கிறாள்.
சந்தோஷ் முதல் நாள் வேளையில் கவனம் செலுத்த முயல்கிறான் ஆனால் முடியவில்லை சாரங்கன் ஏன் மைக்கேலை பற்றி அப்படி கூறினார்.இவன் கொஞ்சம் இல்லை ரொம்பவே கேசுவல் டைப் ஆனால் அதற்கும் கேரக்டர்க்கும் என்ன சம்மந்தம் என அவர் கூறியதையே யோசித்து கொண்டிருக்கிறான். மாமாவிடம் கேட்டுவிடுவோமா இல்லை நாமே மைக்கேலை பற்றி தெரிந்துகொள்வோமா என யோசித்து கொண்டிருக்கிறான்.அந்த யோசனையிலேயே அந்த நாள் வேலை முடிகிறது.
சந்தோஷ் பார்க்கிங் லாட்டில் காரை எடுக்கிறான் மைக் யாருக்கோ வெயிட் செய்து கொண்டிருப்பதை பார்க்கிறான்.அவனருகே செல்கிறான் .
"மைக் என்ன இங்க நின்னுட்டு இருக்க..."காரை நிறுத்தி கேட்கிறான்.
"கேப் புக் பண்ணிருந்தேன் அதான்.."
"நா ட்ராப் பண்றேன் எங்க போனும்..."சந்தோஷ் கதவை திறக்கிறான்.
"இல்ல உனக்கெதுக்கு...."மைக்.
"ஏய்....நோ ஃபார்மலிட்டிஸ்...."சந்தோஷ் .
"ஓகே"மைக்கேல் காரில் ஏறுகிறான்.சந்தோஷ் தனக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இவனைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்பதே அவன் எண்ணம் . சந்தோஷ் ட்ராப் செய்வதால் எப்படியும் அவனிடம் அவனைப்பற்றி கேட்கும் போது மறுக்கமுடியாது எப்படியும் சொல்லத்தான் ஆக வேண்டும் ஆனால் எப்படி ஆரம்பிக்க என சந்தோஷ் யோசித்துக்கொண்டுள்ளான்.
"ஸ்மோக் பண்ணலாமா..."சந்தோஷ் தலையாட்டுகிறான்.மைக் சந்தோஷிற்கு ஒரு சிகெரெட்டை நீட்டுகிறான்.ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் நட்பு கொள்வதற்கு குறைந்த பட்சம் இரு சிகரெட் ஒரு 10 கிலோமீட்டர் ட்ராவலிங்கும் போதுமானதாக உள்ளது அதுபோலத்தான் இவர்களுக்கும்.
"எனக்கு வேண்டாம்...."மைக் அதை எடுத்து உள்ளே வைக்கிறான்.சிகரெட்டைப்பற்ற வைத்து இருமுறை ஊதி வெளியே புகையை விடுகிறான்.சந்தோஷ் ஏதோ பேச வருகிறான்.மைக்கேலிற்க்கு போன் வருகிறது மைக்கேல் போனை எடுக்கிறான்.
"சொல்லு ஷர்மி..... ஓ ...ஓகே ஓகே வாங்கிட்டு வந்துட்றேன்....ம்ம் ஆமா வந்துட்டுதா இருக்கேன்...இல்ல இல்ல ஒரு ஃப்ரன்ட் கூட வந்துட்டு இருக்கேன்... மீ டூ...."போனில் முத்தம் கொடுக்கிறான் .
"சந்தோஷ் அந்த கார்னர்ல ஒரு கே.ஃப்.சி இருக்கு அங்க நிப்பாட்டேன்.."சந்தோஷ் சரியென தலையாட்டுகிறான்
"யாரு மைக் போன்ல வைஃபா ...."சந்தோஷ் அந்த போன் காலை பயன்படுத்தி பேச ஆரம்பிக்கிறான்.
"கேர்ள் பிரண்ட் ...."
"பேரு"
"ஷர்மிளா"
"என்ன பண்றாங்க....."
"அந்த லெப்ட்தா ...."மைக்கேல் கையால் காமிக்கிறான்.சந்தோஷ் காரை அங்கு சென்று நிறுத்துகிறான்.
மைக் இரண்டு பார்சலுடன் வந்து வண்டியில் ஏறுகிறான்.
"ஏதோ கேட்டியே ...ம்ம் அவ அசிஸ்டண்ட் டைரெக்டரா ஒர்க் பண்ணிட்டு இருக்கா மிதுன் கிட்ட இப்ப கூட அதிதினு ஒன்னு எடுத்தாரே"
"ஒரு நாள் மீட் பண்ணனும் ...."
"அதுக்கென்ன இப்பவே மீட் பண்ணலாம்...."
"இப்பவா.."சந்தோஷ் குழப்பத்துடன் கேட்கிறான்.
"ஆமா என் வீட்டுல தா இருப்பா...."மைக் .சந்தோஷ் புரியாமல் பார்க்கிறான்.
"நாங்க ஒரே வீட்டுல தா இருக்கோம் .....உனக்கு புரியிற மாறி சொல்லனும்னா வி ஆர் லிவிங் டுகதர்.."
"எப்படி மீட் பண்ண அவங்கள ...."
"அதுலா பெரிய கதை ....நா சொன்னா இன்னைக்குள்ள முடியாது ....நீங்க லண்டன்ல பண்ணாத கதையையா நா சொல்லப்போறேன் "
"நீ நினைக்குறமாறிலா லண்டன்ல என் லைஃப்ஸ்ட்டைல் இருந்தது இல்ல "
மைக் "ஏன் யாரையாவது லவ் பண்றியா...."சந்தோஷ் மதுவை காதலிக்கும் கதையை சொல்கிறான்.
"மதுனா....யாரு சாரங்கன் சார் பொண்ணு தான பாத்திருக்கேன் இஸ்லிம்மா இருப்பாலே....அவ தான"
சந்தோஷ் தலையாட்டுகிறான் "ம்ம்ம்....பாத்திருக்கேன் சச்ச பியூட்டிப்புல் கேர்ள்ல கொஞ்ச செக்ஸியாவு இருப்பால..."சந்தோஷின் முகம் மாறுகிறது.
"சினிமால வர மாறி முதலாளி வீட்டு பொண்ண மேனேஜர்க்கு கல்யாணம் பண்ணி கம்பனிய தருவாங்கன்னு நினைச்சேன் ஆனா அதுக்கு வாய்ப்பில்லை போலியே...."சந்தோஷ் மனதிற்குள் கோபமடைகிறான் .காரை சடன் பிரேக் போடுகிறான்.மைக் முன்னாள் இடித்துக்கொள்கிறான்.
"ஆ...."மைக் வலியில் துடிக்கிறான்.
"மைக் .....சாரி நாய் குறுக்க வந்துருச்சு அடி எதுவும் பலமா படலைல "மைக்கேல் மூக்கை தடவுகிறான்.மூக்கில்இருந்து ரத்தம் வருகிறது.சந்ததோஷ் காரை எடுக்கிறான் .மைக் காரில் இருக்கும் பஞ்சை வைத்து மூக்கை துடைக்கிறான்.
"ஏதோ சொல்லிட்டு இருந்தேன் ...உண்மையா லவ்னு ஒன்னு இல்ல தெரியுமா உன்ன மாறி ஆளுங்க தான் லவ்க்கு ஒரு டெஃபனிஷன் கொடுத்து அத நம்பிட்டு இருப்பிங்க....சொல்லப்போனா லவ்வுங்கிறது ஒரு ஃபார்ம் அது நம்ம எண்ணங்களுக்கு தகுந்த மாறி மாறிட்டே இருக்கும் ஒரு 20 வயசு பையன் செக்ஸுவல் எக்சிடேஷன லவ்னு நினைப்பான்.ஒரு 40 வயசாண அவனே ஹெபிசுயேஷன லவ்னு நம்புவான். அவனே ஒரு 60 வயசுல மூச்சுயல் டிபெண்டன்ஸ லவ்னு புரிஞ்சிப்பாங்க.....அந்த லெப்ட்லதா"சந்தோஷ் காரை நிறுத்துகிறான்.மைக்கேல் இறங்குகிறான் "வீட்டுக்கு வா..."
"இல்லப்பா இப்பையே 5 மிஸ்ட் கால் வீட்டுல இருந்து இன்னொரு நாள் வரேன் கண்டிப்பா..."சந்தோஷ் காரை எடுக்கிறான்.
மைக்கேல் வருகிறான் திரும்பி "சந்தோஷ் ஒரு விஷயம் உண்மைய சொல்லேன் வேணும்னு தான இடிக்க வச்ச ".
சந்தோஷ் சிரித்துக்கொண்டே "ஆமா...."
"அவ்வளவு லவ்வு "மைக்.
"இல்ல ரொம்ப பலமா பட்டுருச்சா ...ஹாஸ்பிடல் ஏதாவது"சந்தோஷ் பதட்டமாக கேட்கிறான்.
"இல்ல....இல்ல நா சும்மாதா கேட்டேன் தெரிஞ்சிக்கலாம்னு.... நீ மட்டும் ட்ராப் பண்றேன்னு வண்டில ஏத்திக்கிட்டு வந்த.. ஏன் என்ன பத்தி தெரிஞ்சிக்கத்தான அந்த மாதிரி தான்.... பை இன்னொரு நாள் கண்டிப்பா வா...."சிரிப்புடன் விடைபெறுகிறான் ஆனால் அதே மகிழ்ச்சி சந்தோஷ் முகத்தில் இல்லை சந்தோஷ் இவ்வளவு நேரம் சந்தோஷத்தில் இருந்தான் மைக் பற்றி தான் தெரிந்துகொண்டதாகவும் அவனுக்கே தெரியாமல் அவன் பேசிய பேச்சிற்கு அவனை புத்திசாலித்தனமாக தண்டித்துவிட்டதாகவும் தன்னை பெருமையாக நினைத்துக்கொண்டிருந்தான் ஆனால் மைக் செல்லுமுன் வந்தது அவனிடம் அவன் பிரேக் போட்டது பற்றி கேட்பதற்கு அல்ல நீ எனக்கு தெரியாமல் செய்ததாய் நினைத்துக்கொண்டிருப்பது எனக்கு தெரியும் என சொல்லாமல் சொல்லியிருக்கிறான் .சந்தோஷ் மைக்கேலைப் பற்றி யோசித்தவாறே வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறான்.
5.மைக்கேல் -ஷர்மிளா
மைக்கேல் காலிங் பெல்லை அடிக்கிறான். கதவுதிறந்திருப்பது தெரிந்து வீட்டின் உள்ளே செல்கிறான்.
"ஷர்மி....."ஹாலில் யாரும் இல்லாததால் ஷர்மியை தேடுகிறான்.
ஷர்மிளா வீட்டின் உள்ளே புக் படித்துக்கொண்டிருப்பதை பார்க்கிறான்.ஷர்மிக்கு தான் புத்தகம் படிக்கும் போது யாராவது தொந்தரவு செய்தால் பிடிக்காது இதனால் இவர்கள் இருவருக்கும் பல முறை சண்டை ஏற்பட்டுள்ளது எனவே மைக் அவளை தொந்தரவு செய்யாமல் பார்சலை ஹாலில் வைத்துவிட்டு அவன் ரூமிற்கு சென்று டிரஸ் சேஞ்ச் பண்ணிவிட்டு ஹாலிற்கு வந்து சாப்பிட அரம்பிக்கிறான்.
ஷர்மி புக் படித்துவிட்டு வருகிறாள்.மைக்குடன் உட்கார்ந்து சாப்பிட அரம்பிக்கிறாள் .
"ஹவ் வாஸ் யூர் டே...."சாப்பிட்டு கொண்டே மைக்கிடம் கேட்கிறாள்.
"ப்ரட்டி நைஸ்...."மைக் பேசிக்கொண்டே சாப்பிடுகிறான்.
"அப்பா நாளைக்கு வராராம் இப்ப தா போன் பண்ணாறு."
"அவருக்கு என்னவாம் ஊருல வேற வேலையே இல்லையா...."
"ஏதோ லேண்ட் ரெஜிஸ்திரேஷன் பண்ணுற விஷயமா வராராம்....அப்படியே என்ன பாத்துட்டு ஒரு நாள் இருந்துட்டு போலாம்ணு இருக்காராம்...."
"ஒரு நாள் ஃபுல்லாவா சான்சே இல்ல"
"நா வர சொல்லிட்டேனே ...."பயத்துடன் சொல்கிறாள்.
"என்னடி பேசுற ஒரு நாள் நா.....சரி சரி மூஞ்ச அப்படி வச்சிக்காத....ஒரு நாள் தான நா எங்கையா வெளிய தங்கிக்குறேன்..."
"என் செல்ல பேபி...." ஷர்மி மைக்கை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறாள் கண்ணத்தில்.
"மன்னிச்சுடுடா ......நா அப்பாட்ட எதா சொல்லி இனி வரவேண்டான்னு சொல்லிறேன்....ஆமா எங்க தங்குவ"
"சந்தியா கெஸ்ட்ஹவுஸ்க்கு போய் அவ கூட ஒன்டே ஸ்டே பண்ண வேண்டியதுதா....".ஷர்மி கோபமாக பார்க்கிறாள்.
"ஏய்....சும்மா சொன்னேன்டி என் ப்ரன்ட் வீடு ஒன்னு அண்ணா நகர்ல இருக்கு அவன் கூப்பிட்டிருந்தான் சரி நாளைக்கு போய்ட்டு வந்துர வேண்டிதா....."மைக்கிற்கு விக்கல் எடுக்கிறது ஷர்மி தண்ணி முகர்ந்து கொடுக்கிறாள்.
"திங்க்ஸ் பேக் பண்ணணும் சாப்டுட்டு..."
"இது வேறயா பேசாம உங்கப்பன் சாரி உங்கப்பாட்ட சொல்லிரே நா இப்படிதான்னு இன்னு எவ்வளவு நாள் தா இப்படி மறைச்சுட்டு இருப்ப...."மைக்.
ஆம் ஷர்மி மைக்கேலோடு இருப்பது ஷர்மி வீட்டில் யாருக்கும் தெரியாது அவர்களை பொறுத்தவரை ஷர்மி தனியாக ரூம் எடுத்து தங்கியுள்ளாள்.எப்பொழுதாவது ஷர்மியின் அப்பா ஷர்மியை பார்க்க வந்தால் மைக் தனது பொருள்களை ஸ்டோர் ரூமில் வைத்து பூட்டிவிட்டு வெளியில் எங்காவது சென்று தங்கிக்கொள்வான் . அவர் சென்ற பின்தான் வருவான்.
ஷர்மி கிச்சனில் டீ போட்டுக்கொண்டிருக்கிறாள்.மைக் பின்னாலிருந்து அவளை கட்டிபிடிக்கிறான்.ஷர்மிக்கு அது பிடித்திரிந்தும் அவள் மைக்கேலை அலைய விடுவதற்காக அவனிடம் இருந்து நெளிந்து விலகுகிறாள்.
மைக் அவளை இழுத்து வைத்து காதுமடலில் முத்தம் கொடுக்கிறான்.
"டேய்....டிஸ்டர்ப் பண்ணாத...." அவனை தடுக்கிறாள் கையால் .
"ஆமா இப்ப இப்படி சொல்லு நா அமைதியா இருந்தா என் மேல இருக்குற இண்ட்ரெஸ்ட் குறைஞ்சிருச்சானு சண்டைக்கு வா..."அவள் இடையில் வைத்திருக்கும் கையில் முத்தம் கொடுக்கிறான்.
"நா அப்படியும் சொல்லுவேன் இப்படியும் சொல்லுவேன்...நீ தா என்ன சமாளிக்கணும்...போடா போய் பேக் பண்ணு..."ஷர்மி .
"முடியாது...."மைக் ஷர்மியை கட்டிப்பிடித்து தடவிக்கொடுக்கிறான்.ஷர்மியும் அவன் செய்வதை ரசிக்கிறாள்."சார் ...ரொமான்டிக் மூட்ல இருக்கிங்க போல..."மைக் அவன் வேலையில் தீவிரமாக உள்ளான் ஷர்மியின் முகத்திலிருந்து கழுத்துப்பகுதிக்கு வருகிறான்.ஷர்மி அவனை தள்ளி விடுகிறாள்.
"போ....முதல பேக் பண்ணு .... மிச்சத்த இன்னைக்கு நைட் வச்சிக்கலாம்.."ஷர்மி .
"சும்மா சொல்ற....நிஜமா"மைக்.
ஷர்மி வெட்கப்பட்டவாறு ஆம் என தலையாட்டுகிறாள்.
மைக்கேல் ஒரு சூட்கேஸை எடுத்து கட்டிலில் போடுகிறான்.பெட்டில் தனது துணிகள் அனைத்தையும் எறிகிறான்.தனது பைல்கள் அனைத்தையும் அந்த பெட்டில் போடுகிறான்.கப்போர்டில் இருக்கும் தனது போட்டோக்களை எடுக்கிறான் அப்பொழுது அவன் என்றோ ஒரு நாள் உள்ளே வைத்த சேம்பைன் பாட்டில் உருண்டு வருகிறது.
மைக்கேல் அதை எடுத்து மகிழ்ச்சியுடன் பார்க்கிறான்.
"ஷர்மி...."மைக் சந்தோஷத்தில் கத்துகிறான்.
ஷர்மி கிச்சனிலிருந்து வெளியே எட்டிப்பார்க்கிறாள்.மைக் மகிழ்ச்சியுடன் வெற்றிக்கோப்பையை வைத்திருப்பது போல் அதை கையில் தூக்கிக்காண்பிக்கிறான்.ஷர்மி அந்த பாட்டிலைப்பார்த்ததும் சந்தோஷத்தில் குதிக்கிறாள்.
மைக் சேம்பைனைக் க்ளாஸில் ஊத்துகிறான் ஷர்மி பாட்டிலோடு குடிக்கிறாள்.
மைக்கேல் சேம்பைன் காலியாகியிருப்பதைப் பார்க்கிறான்.ஷர்மியும் தனது பாட்டில் காலியாக இருப்பதைக் காண்பித்து மைக்கை பார்க்கிறாள்.
இருவரும் பெட்டில் மாற்றி மாற்றி முத்தம் கொடுத்து கொண்டு விழுகின்றனர்.மைக் முதுகில் சூட்கேஸ் குத்துகிறது அதை அவன் கீழே தள்ளிவிடுகிறான்.
ஷர்மி தனது ட்ரெஸ்ஸை கழட்டி எறிகிறாள்.மைக் தனது டி சர்டை கழட்டுகிறான்.பெட்டில் இருவரும் மாற்றி மாற்றி தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றனர்.மைக் இன்டெர்கோஸ் செய்ய ஆரம்பிக்கிறான்.ஷர்மி உணர்ச்சி தாங்க முடியாமல் கத்துகிறாள்.மைக் வேகமாக செய்ய ஆரம்பிக்கிறான்.
"யா....லவ் யூ....யா....."ஷர்மி உணர்ச்சி வசத்தால் கத்துகிறாள்.
" ஷர்மி ஐ லைக் யூ வெரி மச்...ஐ லைக் திஸ் ப்ரேட்டி அஷ்ஹோல் வெரி மச்"உச்சகட்ட இன்பத்தில் பினத்துகிறான்
"ஸ்..ஆ....சே லவ் யூ...."ஷர்மி முனங்குகிறாள்.மைக் அவள் சொல்வதை கேட்காமல் செய்துகொண்டிருக்கிறான்.ஷர்மி அவனைத் தள்ளிவிடுகிறாள்
"சே லவ் யூ...."ஷர்மி
மைக்கேல் வெறியோடு ஷர்மிமேல் பாய்கிறான்.ஷர்மி அவனை கீழே தள்ளுகிறாள்.
"ஐ சே லவ் யூ...."ஷர்மி கத்துகிறாள்.
"ஐ லவ் திஸ்.. யூ ஆர் சச் எ லவபில் ஃபக்கிங் பிட்ச்.."மைக் அவளை உதட்டில் முத்தமிடுகிறான்.ஷர்மி அவனை கட்டிப்பிடித்து அவன் மீது தனது ஆதிக்கத்தை காண்பிக்கிறாள்.இருவரும் செக்ஸ்முடித்துவிட்டு பெட்டில் படுத்திருக்கின்றனர்.
"ஏன் சந்தியா கெஸ்ட் ஹவுஸ்க்கு போறனு சொன்ன உடனே கோபப்பட்ட...."மைக்
"அப்டிலா இல்லையே..."ஷர்மி
"பொய் சொல்லாத ....என்ன பொசஸிவ்நெஸ்ஸா"ஷர்மி மூக்கினை மைக் கிள்ளுகிறான்.
"அய்ய .... குழந்தைக்கு ஆசையப்பாரேன்"ஷர்மி சிரிக்கிறாள்.மைக் அவள் சிரிப்பதை ரசிக்கிறான்.
"அப்பாட்ட என்ன சொல்லப்போற ...."மைக்
"தெரியல ஆனா ...ஒரு தைரியம் மனசுக்குள்ள வந்திருக்கு மனசு கொஞ்சம் ஃப்ரெஸ் ஆயிருக்கு.."ஷர்மி எழுந்து ட்ரெஸ்ஸை போடுகிறாள்.
"ஒரு விஷயம் தெரியுமா...இட்ஸ் ஒன் ஆஃப் தோஸ் திங்க்ஸ் விச் கனெக்ட் பீப்பில் வித் டிப்பரெண்ட் இகல்ச்சர்ஸ்இரிலிஜியன்இலாங்குவேஜ் அக்ராஸ் தி யுனிவர்ஸ்.செக்ஸ் ஐஸ் ஒன் ஆஃப் தோஸ் யுனிவர்சல் லாங்குவேஜ்."ஷர்மி குளிக்க கிளம்புகிறாள்.
மைக்கேலை ஷர்மி எழுப்புகிறாள்.
ஷர்மி குளித்து புடவை கட்டி மைக்கேலிற்கு முன் காஃபியுடன் நிற்கிறாள்.மைக் அவளை பார்த்து சிரிக்கிறான்.
"எதுக்கு சிரிக்கிற..."ஷர்மி புரியாமல் கேட்கிறாள்.
"ஒண்ணுமில்ல".சிரித்துக்கொண்டே காஃபி எடுத்து
குடித்துவிட்டு குளிக்கச்செல்கிறான் .ஷர்மி மைக்கேலின் போனை எடுத்துப்பார்க்கிறாள்.அதில் அவளும் மைக்கேலும் சேர்ந்து இருக்கும் பிரைவேட் விடியோக்கள் இருக்கிறது .
"எத்தன தடவ சொன்னாலும் கேக்கமாட்டான்"ஷர்மி தனக்குத்தானே திட்டிக்கொண்டு அனைத்தையும் டெலிட் செய்கிறாள்.மைக் குளித்து முடித்து வருகிறான் ஷர்மி கையில் மொபைல் இருப்பதை பார்க்கிறான்.
"டெலிட் பண்ணிட்டையா...."மைக் அவள் பக்கத்தில் உட்காருகிறான்.
"வழக்கம்போலதா...."
"ஏண்டி....ஒரு மெமரீஸா இருக்கும்ல அது..."
"வேண்டாமே....அப்படி ஒன்னு "
"முதல பாஸ்வர்ட் மாத்தனும்...."தலையை துவட்டியபடி செல்கிறான்.
ஷர்மி ப்ளோரை துடைக்கிறாள்.
மைக் தன் பொருள்களை பேக் பண்ணிகிறான்.
ஸ்டோர் ரூமில் போடுகிறான்.
மைக் ஷர்மிக்கு பை சொல்லிவிட்டு கிளம்புகிறான்.
6.சந்தோஷ் -மாதங்கி
சாரங்கனது வீட்டில் வருடம் வருடம் மஹா சிவராத்திரியை மிகவும் பிரமம்மாண்டமாக கொண்டாடுவார்கள்.இந்தவருடம் சந்தோஷும் வந்துள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இன்னும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.அவர்கள் சமூகத்தை சேர்ந்த அனைவரும் வந்திருக்கின்றனர்.வீடே எங்கு பார்த்தாலும் மனிதத்தலைகளாக உள்ளது.சந்தோஷ் கூட்டத்தில் ஒரு ஓரமாக நின்றுகொண்டிருக்கிறான்.மாதங்கியை தேடுகிறான்.பூஜா அவன் அருகில் வருகிறாள்.
"சந்தோஷ் எப்படி இருக்கேன்னு சொல்லேன்..."ஆசையுடன் சேலை கட்டிவந்து கேட்கிறாள் பூஜா.
சந்தோஷ் சிரிக்கிறான்"ஏன் இந்த விபரீத ஆச"
"நல்லா இல்லயா...."பூஜா வருத்தத்துடன் கேட்கிறாள்
"இந்த கலர் உன் ஸ்கின்டோன்க்கு செட் ஆகல....நீ வேணா லைட் கலர்..."சந்தோஷ் தூரத்தில் நடந்துவரும் மாதங்கியைப்பார்க்கிறான்.
மாதங்கி பட்டுப்புடவையில் கையில் பூஜைத்தட்டுடன் நடந்து வருகிறாள்.சந்தோஷ் வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
"லைட் கலர்ல...."பூஜா குறுகிக்கிடுகிறாள்.சந்தோஷ் பூஜாவை கவனிக்காமல் மதுவைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
"சந்தோஷ்....."பூஜா மாதங்கியை மறைக்கிறாள்.
"ஒன்னுமில்ல கிளம்பு...."பூஜாவை விட்டு நகர்ந்து மதுவை நோக்கி செல்கிறான்.பூஜா சந்தோஷைப்பிடிக்கிறாள்."ப்ளீஸ் ஃபுல்லா சொல்லிட்டுப்போ..."
"அடிச்சிறப்போறேன் விடுடி கைய....சும்மா தொனதொனனு "பூஜா நின்றுவிடுகிறாள்.சந்தோஷ் மாதங்கியை ஃபாலோ பண்ணிச்செல்கிறான்.
"சாரி சூப்பர்ப் ....ஏஞ்சல் மாறி இருக்க உங்கம்மாட்ட சொல்லி சுத்திப்போடசொல்லு..."மாதங்கி அவனை கவனிக்காது பூஜை தட்டை எல்லாரிடமும் நீட்டிக் கொண்டுள்ளாள்.
"ஒரு தங்க்ஸ் கூட சொல்லக்கூடாதா..."சந்தோஷ்.
மது அமைதியாக இருக்கிறாள்.
"இந்த அமைதிய நா என்னவா எடுத்துக்க...."சந்தோஷ் .
"இப்படி பின்னாடி வர்றது பிடிக்கலன்னு...."மாதங்கி .
"பரவாயில்ல மேடம் பேச கூட செய்விங்க போல....அப்ப அப்ப கொஞ்சம் வாய திறந்து பேசுங்க இல்ல ஊமைனு நினைச்சுற போறாங்க"
"கண்டவன் கூடலா பல்ல இழிச்சு பேசிட்டு இருக்க முடியுமா..."மது.
சந்தோஷ் "கொஞ்சம் எக்ஸ்பிலைன் பண்ண முடியுமா...."மாதங்கி பதில் பேசாமல் வேகமாக நடக்கிறாள்.
"சரி அப்படியே வச்சிக்கோ கல்லானாலும் புருஷன் மாறி கண்டவனா இருந்தாலும் வருங்கால புருஷன்னு ஏத்துகிட்டு பேசக்கூடாதா....."
மாதங்கி பூஜை அறையில் சென்று கண்ணை மூடி சாமி கும்பிட ஆரம்பிக்கிறாள்.
"போன்ல தா லவ்லா பண்ணுவிங்களோ நேர்ல பண்ணக்கூடாதோ...."சந்தோஷ் பின்னாலே வருகிறான்.மாதங்கியை சக்திவேல் கூப்பிடுகிறான்.அவள் இதுதான் வாய்ப்பு என சந்தோஷிடம் இருந்து தப்பித்து ஓடுகிறாள் .
"சும்மா தொனதொனன்னு ....சேய்..."மாதங்கி வாய்க்குள் முணங்கியவாறு செல்கிறாள்.
சந்தோஷ் ஓரமாக நின்று சுவரில் இருக்கும் போட்டோக்களைப் பார்த்துக்கொண்டுருக்கிறான். 1999 ல் இருந்து இப்பொழுது வரை ஒவ்வொரு வருடமும் எடுத்த புகைப்படங்கள் அதில் தொங்கவிடப்பட்டுள்ளன.
சாரங்கனது குடும்பத்தினர் வருடம் வருடம் சிவராத்திரி அன்று ஃபேமிலி போட்டோ எடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள் அது அவரது தந்தை காலத்தில் இருந்து தொடரப்பட்ட ஒரு பழக்கம் ..... ம் சரி நாம் கதைக்குள் செல்வோம்.
சந்தோஷ் அந்த போட்டோக்களை பார்த்துக்கொண்டுருக்கிறான். கஸ்தூரி அவனைக்கூப்பிடுகிறாள். சந்தோஷ் ஓடி சென்று ஃபிரேம்குள் நின்று கொள்கிறான்.வலது ஓரத்தில் இருக்கும் மாதங்கியை போடோக்ராஃபர் இடது ஓரத்தில் இருக்கும் சந்தோஷ் பக்கத்தில் சென்று நிற்க சொல்கிறார்.மாதங்கி தயக்கத்துடன் சென்று நிற்கிறாள்.
"கொஞ்சம் ஃபிரேம் உள்ள வாங்களேன்...."போட்டோக்ராஃபர்.
மாதங்கி உள்ளே தள்ளி சந்தோஷ் அருகையே வருகிறாள்.சந்தோஷ் அவள் கையை பிடிக்கிறான்.அவள் தட்டி விடுகிறாள் தனது கையை இறுக்கமாக மூடிக்கொள்கிறாள்.
சந்தோஷ் அவன் கையால் அவளது கையை மெல்ல வருடுகிறான் .மாதங்கி கையை கீழே விடுகிறாள்...
"ஸ்மைல் ப்ளீஸ்...."போட்டோக்ராஃபர்.
சந்தோஷ் மாதங்கி கையை பிடிக்கிறான்.மாதங்கி கண்கலங்கியவாறு கீழே பார்க்கிறாள்.போட்டோ கிளிக் செய்யப்படுகிறது.சுவரில் 2020 என போட்டோ தொங்கவிடப்படுகிறது.அதில் மாதங்கி கீழே குனிந்து எதையோ பார்த்துக்கொண்டுள்ளாள்.
சந்தோஷ் சுவற்றில் இருக்கும் அந்த போட்டோவைப்பார்த்துக்கொண்டுருக்கிறான்.
மஹாலக்ஷ்மி பார்க்கிறாள் மாதங்கி பால்கனியில் கையில் புத்தகத்தை வைத்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்....மஹாலக்ஷ்மி சென்று விடுகிறாள் அவள் படிக்கிறாள் என நினைத்துக்கொண்டு ஆனால் அவள் புத்தகத்தை வைத்து படிப்பது போல் பால்கனியில் சாய்ந்து தேம்பி தேம்பி அழுதுக்கொண்டுள்ளாள்....சில விஷயங்கள் சிறிது தூரம் சென்ற பின் தான் அதன் மதிப்பு புரியும்....அதுபோலவே அவள் அழுவதிற்கான காரணமாகிய பதிலை நான் இப்பொழுது கூறினால் அவள் உணர்வு நமக்கு புரியாது எனவே அதற்கான பதில் சிறிது தூரத்தில் நம் கதையிலே வரும் அதுவரை நீங்கள் யோசித்துக்கொண்டிருங்கள் (படித்துக்கொண்டே) அதற்கான பதிலை.....
7.ஷர்மிளா
ஷர்மிளா பஸ்ஸ்டாப்பில் வெயிட் செய்துக்கொண்டுள்ளாள் அவளது அப்பாவிற்காக. பஸ் வருகிறது வெள்ளைக்கோடுபோட்ட சட்டை கருப்பு பண்ட் போட்டு ஒருவர் வருகிறார்.அவர் பண்ட் ஷர்ட் அணிந்திருப்பதை பார்த்தே சொல்லிவிடலாம் இந்த மனிதன் பண்ட் சர்ட் அணியும் நபரல்ல என்று இவர் நகரத்து வாசியல்ல என்பதற்கான உரித்தான நடை 10 வயது குறைத்து காண்பிப்பதற்கு அவர் அடித்திருக்கும் ஹேர்டை மூக்குகண்ணாடி கையில் விநாயகா அரிசிக்கடையின் மஞ்சப்பை ஆம் அவர்தான் ஷர்மியின் அப்பா வேதநாராயணன்.வேதநாராயணன் ஷர்மியை நோக்கி வருகிறார்."இதப்புடிமா...."கையில் இருக்கும் மஞ்சப்பையை எடுத்து ஷர்மியிடம் கொடுக்கிறார்.
"சத்த நாழி உக்காந்துக்குறேன்..."பஸ் ஸ்டாப் சீட்டில் உக்காருகிறார்.ஷர்மியும் பக்கத்தில் உக்காருகிறாள்.
"இருங்கப்பா கேப் புக் பண்ணிருக்கேன் இப்ப வந்துரும்..."ஷர்மி.
"பயந்துட்டே இருந்தேன் இங்க இருந்து எப்படி வர்ரதுன்னு....நல்ல வேலை நீயே வந்துட்ட..."
"ஏம்பா.....வாலிபம் திரும்புதோ வீட்டுல இருக்கவேண்டிதான ஏன் இப்படி அலைஞ்சிட்டு இருக்கேள்"
"என்னமா செய்யிறது ...மூணு பொம்பள புல்லையாண்டால பெத்துருக்கேன் அப்படி இருக்க முடியுமோ....குட்டி நீ நல்லாயிருக்கேல்லயா"
ஷர்மி தலையாட்டுகிறாள்.
"ஏதும் பிரச்சனை இல்லையே ...."
"இல்லப்பா..."
"அங்க பாரேன் எப்படி அவா உரசினு இருக்கானு....கருமம்"நாராயணன் பஸ்ஸ்டாப் எதிரில் உள்ள பார்க்கிங்லாட்டில் பைக்கில் இருக்கும் கபில்ஸை பார்த்து முகம் சுளிக்கிறார்.ஷர்மிக்கு அவர் முக பாவனையை பார்த்து சிரிப்பு வருகிறது ஆனால் கட்டுப்படுத்திக்கொள்கிறாள்.நல்லவேளை அதற்குள் கேப் வந்துவிடுகிறது ஷர்மியும் நாராயணனும் கேபில் ஏறி கொள்கின்றனர்.
நாராயணன் "அவா வீட்டுலலா இதுகள தண்ணி தெளிச்சுவிட்டுருப்பா போல.....என்னமா"ஷர்மி அமைதியாக இருக்கிறாள்.
"கல்யாணமானவாளே இப்படி இருக்கமாட்டா நம்மூர்ல இவா பாத்தா படிக்கிற புள்ளைங்க மாதிரி இருக்கு இதுலா எங்க உருப்படபோது...."ஆதிநாராயணன் பேச கேப் டிரைவர் திரும்பிப்பார்க்கிறார் அவரை.
"வர்ரப்ப ஒரு பொண்ணு வண்டில பஸ்ஸ ஓவர்டர்ன் பண்ணிட்டு போறப்ப பாத்தேன் கையெல்லாம் கிழிச்சு விட்டுனு வண்டி ஓட்டிகுட்டு பின்னாடி உக்கார்ந்துருக்குற பொண்ணு என்னனா புகைய வாய்ல வச்சி ஊதின்னு இருக்கா கலி முத்திடுத்துடி இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ சிவ சிவா நீ தா எல்லாரையும் காப்பாத்தனும்..."டிரைவர் சிரிக்கிறார்.
ஷர்மி அப்பா அருகில் சென்று காதோரமாக "ப்பா....கொஞ்சம் அமைதியா வரேல்லா...மானம் போறது எவா எப்படி போன உமக்கு என்ன..."கண்டிக்கிறாள் . நாராயணன் வீடு வரை அமைதியாக வருகிறார் .ஷர்மிக்கு புரிந்துவிட்டது ஒன்று எப்போதும் வீட்டுக்கு வந்து ஆரம்பிப்பவர் இன்று பஸ் ஸ்டாப்பில் இருந்தே தொடங்கிவிட்டார் என்றால் ஏதோ மனதில் வைத்துள்ளார் அதை சமயம் பார்த்து சொல்லவே இப்படி அடிக்களிட்டுள்ளார் என்று.நாராயணன் வீட்டிற்குள் வருகிறார் வீட்டினைச்சுற்றி பார்க்கிறார் ..... "காப்பி குடிக்ரேலா இல்ல பூஸ்ட் எதாவது போடட்டா..."
"அதல்லா வேணாம் கொஞ்சோண்டி ஜலம் குடக்குறையா....."ஷர்மி தண்ணிக் கொண்டுவருகிறாள் அவர் குடிக்கிறார்.அனால் அவள் எதிர்பார்த்தது போல் அவர் எதுவும் பேசவில்லை க்லைமேட் பத்தி ஹெல்த் பற்றி பேசுகிறார்.மதியம் உணவிற்கு அவருக்கு பிடித்த கொண்டைக்கடலை செய்கிறாள் மதியம் இருவரும் சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர்.
"உங்கக்கா உனக்கு பிடிச்ச முறுக்கு செஞ்சு அனுப்பிச்சிருக்கால் அந்த மஞ்சப்பைல இருக்குது மறக்காம சாப்டுடு ...."
"சரிப்பா...அக்கா அக்கா வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா.."
"அவாளுக்கென்ன பேஷா இருக்கா....காலைல வீட்டுல பூஜைலா பண்றியா..."
"நேரம் கிடைக்கிறதில்லப்பா..."
"ஒரு பொம்பநாட்டி இப்படி சொல்லலாமோ பூஜ பண்ண ஆவுரதில்லனு....இப்படியா நா வளர்த்தேன் காலைல எந்திரிச்சு காயத்ரி மந்திரம் சொல்லி ஆரம்பிச்சனா அந்த நாளே சுபிக்ஷ்மா இருக்கும் பாரேன்..."
"சரிப்பா...."
"பரவாயில்லையே நல்லா சமைக்க கத்துக்குண்ட போலியே....பிரமாதமா பண்ணிருக்க உங்கம்மாவ மாறியே .."
ஷர்மி உணர்ந்துகொள்கிறாள் அடுத்து ஏதோ ஒரு முக்கியமான விஷயம் பற்றி பேசப்போகிறார் அதற்காகவே இப்படி இவளை புகழ்கிறார் என்று என்ன இருந்தாலும் அவர் மகள் அல்லவா
"போன வாரம் ரங்கராஜன் பெரியப்பாவ பாக்க போயிருந்தேன் ...உனக்கு கூட சைக்கிள் வாங்கித்தந்தாரே "ஷர்மிக்கு ஒருபுறம் அவள் தான் நினைத்தது நடக்கிறது என சந்தோஷப்பட்டாலும் ரங்கராஜன் போல் ஒரு கிறுக்கன் அப்பாவிடம் என்ன சொல்லி இருக்கிறானோ என பயமும் கலந்து உள்ளுக்குள் போர் செய்துகொண்டுள்ளது இருந்தாலும் அதை மறைத்தப்டி
"ஆமா...."
"அவர்ட்ட உன்ன பத்தி பேசுனேன் ....அவரு என்ன சொல்றாருனா...."இந்த இடத்தில் அவர் ஷர்மியிடம் என்ன என்ற கேள்வியை எதிர்ப்பார்க்கிறாள் அதை உணர்ந்த ஷர்மி "என்ன..."
"அவர் கொஞ்ச நாளும் தெரிஞ்சவர் இல்லையோ அதான் கேட்டேன் அவர் என்ன சொல்றாருணா...சினிமாலாம் நம்மள மாறி ஆளுங்களுக்கு சரிவராது ...அது பணங்காசு இருக்கிறவங்களுக்கு ...நம்ம கிருஷ்ணன் தங்கச்சி ஹீரோயின் ஆக போறேன்னு போச்சு கடைசில சான்ஸ் எதுவும் கிடைக்காம வயசாகி இரண்டாந்தாரமா கட்டிகிட்டாங்க...புரிஞ்சிக்கோமா" நிஜமாவே இவ்வளவு நேரம் அவர்போட்ட தூரிகைக்கு ஏற்ற பிரச்சனையையே இந்த முறை கிளப்பிக்கொண்டு வந்துள்ளார் என்று ஷர்மி உணர்ந்துகொள்கிறாள்.
"இல்லப்பா இவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இப்ப விட்டுடுனா எப்படிப்பா...."
"சினிமால குறுக்குவழில போய் எல்லாரையும் அட்ஜஸ்ட் பண்ணிரச்ச மட்டும் தா ஜெயிக்கமுடியும்".
"அப்டிலா இல்லப்பா எதுவுமே இல்லாம திறமை மட்டு உள்ளவங்க ரொம்ப பேர் ஜெய்ச்சிருக்காங்கப்பா..ஆனா கொஞ்ச காத்திட்டிருக்கனும் "
"அதே தான் நானும் சொல்றேன் இவ்வளவு வருஷம் உன்னால எதுவும் பண்ணமுடியலையே ...இனி எவ்வளவு வருஷம் காத்திருப்ப..பொம்பலாண்டா புருசங்கூட நல்லா குடும்பநடத்துரானு கேக்குறது தான் அவங்கப்பனுக்கு பெரும...இதுலா வேணா விட்டுறேன் ....ஊர்ல எல்லா உன்னால உங்க தோப்பன்னார பாத்து சிரிக்குறா....அம்மா இருந்துருந்தா அந்த பொண்ண அவ அம்மா அப்டி விட்டுருப்பாலானு கேக்குறாள்"
ஷர்மி அமைதியாக இருக்கிறாள்.அவள் கணித்துவிட்டால் இவர் பேசவந்த விஷயம் வேறு இதுவும் ஒருவகையான பீடிகையே என எனவே அதை அவரே கூறட்டும் என அமைதியாக இருக்கிறாள்.
"நீ என்னம்மா சொல்ற...."
"மன்னிச்ருங்கப்பா நேக்கு இப்போதைக்கு சினிமாதாப்பா முக்கியம்"
"ரெண்டு மாசம் முன்னாடி ஸ்ரீமன் மாமா மூலம் ஒரு வரன் வந்துருச்சு பெங்களூர்ல இருந்து உன் போட்டோ பாத்து ரொம்ப புடிச்சுபோயிருச்சுன்னு சொன்னாங்க ....நா கேட்டு சொல்றேன்னு சொன்னேன் ஆனா அவா ரொம்ப வற்புறுத்துறச்ச உண்ட இப்ப கேக்க வந்துருக்குறேன் ....என்ன சொல்ற அவா உன் சினிமாக்கனவுக்கு ஊடா நிக்கமாட்டா அந்த பையனுக்கும் சினிமானா ரொம்ப புடிக்குமாம் என்ன சொல்ற..."
ஷர்மி மிகவும் யோசிக்கிறாள்.நாராயணன் ஆர்வமுடன் அவள் பதிலை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்.
"அப்பா....நா கொஞ்சம் யோசிச்சு சொல்லட்டா"
"என் சமத்துக்குட்டி நல்ல முடிவா சொல்லுமா ....இன்னைக்கு நா போறதுக்குள்ள யோசிச்சு சொல்லுமா...கொஞ்சம் போர்வை எடுத்து போட்றியா தூக்கம் வர்ரது ட்ராவல் பண்ணத்துனால...."
"வாப்பா வந்து பெட்ல படு ஏன் கீழ படுக்கணும்...."ஷர்மி பெட்டைக்காமிக்கிறாள். நாராயணன் அதில் சென்று படுத்துக்கொள்கிறான்.
ஷர்மி ஸ்டடி டேபிலில் உக்கார்ந்து ஹெட்செட்டை கழுத்தில்மாட்டிக்கொண்டு தனக்கு பிடித்த பாடல்களை கேட்டுக்கொண்டே யோசிக்க ஆரம்பிக்கிறாள்.
ஷர்மி தன் வாழ்வை மாற்றப்போகும் முடிவை எடுப்பதற்கு முன் நாம் ஷர்மியைப் பற்றி கொஞ்சம் பார்த்துவிடுவோம்.ஷர்மி நாராயணனின் மூன்றாவது மட்டும் கடைசி மகள் .சினிமாவில் டைரக்டர் ஆகவேண்டும் என்பது அவள் வாழ்நாள் லட்சியம்.அது ஏதோ இரண்டு மூன்று டைரக்டர்களைப் பார்த்து இன்ஸ்பைர் ஆகி வந்ததில்லை அந்த சினிமாவின் மீது அவளுக்கு இயற்கையாய் இருந்த காதல் அது .வீட்டின் எல்லார் எதிர்ப்பையம் மீறி தனது முயற்சியால் பி.எஸ். சி விஸ்காம் படித்துமுடித்தாள்.நண்பர்கள் ஓர் ஐந்து பேருடன் சேர்ந்து முதலில் ஒரு வீட்டின மேல் போர்சனை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்கள். அங்கு தங்கி ஷாட் ஃபிலிம் எடுக்க ஆரம்பித்தாள்.இரண்டு ஷாட்ஃபில்ம்களும் எடுத்தாள்.அந்த வீட்டின் ஓனர் மிகவும் ஸ்ட்ரிக்ட் 9 மணிக்கு மேல் கதவைப்பூட்டிவிடுவார். இந்த ஷாட்ஃபில்ம் மூலமாக அப்பொழுது இவளுக்கு ஒரு சிறு இயக்குனரிடம் ஆஸிஸ்டன்ட் சான்ஸ் கிடைத்தது.அசிஸ்டன்ட் டைரக்டரை பொறுத்தவரை டைம்க்கு வர முடியாது போ முடியாது முதல் ஆளாக செட்டுக்கு வர வேண்டும் கடைசி ஆளாக கிளம்பவேண்டும்.அப்படியிருக்க லேட்டாக வீட்டிற்க்கு சென்று ஹவுஸ் ஓனரிடமும் வேகமாக வீட்டிற்க்கு செல்ல பெர்மிஸன் கேட்டு டைரக்டரிடமும் திட்டு வாங்கியிருக்கிறாள்.அவள் கூட தங்கியிருந்த அனைவரும் ஒவ்வொருவராக கல்யாணம் செய்து செல்ல ஆரம்பித்தனர்.கண்ட நேரத்தில் ஷூட்டிங்கிள் இருந்து திரும்பி வருவதால் இரவில் சில முறை சில அயோக்கிய புருஷர்களிடம் இருந்தும் தப்பிக்க வேண்டியதாயிருந்தது.ஒரு சமயம் வந்தது இவள் மட்டும் தனியாக தங்கும் நிலை இவள் ஃப்ரன்ட்ஸ் அனைவரும் ட்ரான்ஸ்ஃபெர் கல்யாணம் என விட்டு சென்றுவிட்டனர்.அப்பொழுது இவள் தான் முழுவாடகை செலுத்த வேண்டிய சூழ்நிலை வந்தது .அசிஸ்டன்ட் டைரக்டர் சம்பளத்தைப்பற்றி சொல்லவா வேண்டும் இபணத்திற்காக ஆன்லைன் ப்லாக்கில் நாவல் இகவிதைஇகதை எழுத ஆரம்பித்தாள்.அப்பொழுதுதான் அவள் முதல் முதலாக மைக்கை சந்தித்தாள்.அவளும் மைக்கும் முதல் முதலாக சந்தித்தது ஒரு பார்ட்டி கிளப்பில். ஷர்மியின் க்லோஸ் ஃப்ரன்ட் சம்யுக்தாவின் பார்ட்டி அது .அவள் சினிமாவில் காஸ்ட்யூம் டிசைனரும் கூட அவள் மைக்கேலின் பார் மேட்டும் கூட அவர்களை ஒருவொருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தது சம்யூக்தாதான். அவர்களின் முதல் விவாதமே அந்த வாரம் ரிலீஸ் ஆன ஷர்மி அசிஸ்டன்டாக வேலைபார்த்த படம் .....மைக் அந்த படத்தை கிண்டலும் விமர்சனமும் செய்துக்கொண்டிருந்தான். ஒரளவுக்கு மேல் பொறுமை இழந்த ஷர்மி கோபப்பட்டு மைக்குடன் சண்டைப்போட்டுக்கொண்டு பாதி பார்ட்டியில் சென்று விட்டாள் .மைக் ஷர்மி அந்த படத்தின் அசிஸ்டண்ட் என தெரியவந்ததும்அடுத்த நாள் அவளை வீடு தேடிச்சென்று மன்னிப்பு கோரினான். இப்படித்தான் ஆரம்பித்தது அவர்கள் நட்பு அப்படியே அடுத்தடுத்த பார்ட்டிகளில் நம்பர் எக்ஸ்சேஞ்ச் இமணிக்கணக்கிலான சாட்டிங்இவாய்ஸ் கால்இவீடியோ கால் இடேட்டிங் இருந்து கிளம்பும் போது முதல் கிஸ் மைக் வீட்டில் வைத்து ஃபர்ஸ்ட் செக்ஸ் என வரிசையாக முன்னேற தொடங்கியது. ஷ்ரமியை மைக் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பிக்கப் செய்தான் அவளுக்கு இப்பொழுது எல்லாம் லேட்நைட் ஸ்கெடுல் பார்த்து பயமில்லை. ஒரு நாள் லேட் நைட் ஷூட்டிங் முடிந்து மைக்குடன் காரில் வந்து இறங்கிய ஷர்மியைப்பார்த்த ஹவுஸ் ஒனர் அவளை அசிங்கமாக வீட்டிற்கு வெளியே வைத்து பேச ஷர்மி கோபத்தில் அவரை அறைந்துவிட்டாள் .பிரச்சனை பெரிதாகி ஷ்ரமியை அவன் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டான்.ஷர்மி என்ன செய்வது என தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறாள் மைக்கிடம் சென்று அழுகிறாள்.
"நா ஒரு ஐடியா சொல்லவா இவை வி ஹாட் டு ஸ்டே டோகதேர்.....எப்படியும் உன்ன பிக்கப் பண்ணி ட்ராப் பண்ண நான் தா வரேன்.எனக்கும் தனியா இருக்க ஒரு மாறியா இருக்கு....நம்ம செக்ஸும் வச்சாச்சு....நா அதுக்காக மட்டும் உன்ன கூப்புடுரேனு நினைக்காத உன் பெர்மிஸன் இல்லாம நா உன்ன தொடமாட்டேன்....என்ன சொல்ற...."
ஷர்மிக்கு அப்ப இருந்த சூழலில் அவளுக்கும் வேறு வழி இல்லை.ஆனால் ஷர்மி அதற்காக மட்டும் சம்மதிக்கவில்லை அவள் மைக்குடன் இருப்பதை விரும்பினாள்.இருவரும் அவர் அவர் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சமைக்க வேண்டும் எனவும் எல்லாவற்றிலும் பாதி பாதி செலவினை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவரவர் வேலையை அவரவர் செய்துக்கொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்து கொண்டனர். ஆனாலும் ஷர்மிக்கு பீரியட்ஸ் வந்திருந்த பொழுது அவள் வேலையும் எடுத்து செய்து அவளைக்குழந்தைப்போல் பார்த்துக்கொண்டான் மைக். அவர்கள் இருவருக்கும் வேறுபாடுகள் அதிகம் இருந்தன ஷர்மி புத்தகம் அதிகம் படிப்பாள் அவள் படிக்கும் போது அமைதியான சூழலை விரும்புவாள் ஆனால் மைக்கோ சின்ன வேலையாக இருந்தாலும் சவுண்ட் சிஸ்டமில் மியூசிக் போட்டுக்கொண்டு தான் செய்வான்.ஷர்மி சுத்த சைவம்இமைக் நான் வெஜ் வாரத்தில் 4 நாள் சாப்பிடுவான்.ஆரம்பத்தில் இந்த மாறி விஷயங்களாள் அவர்களுக்கு சண்டைகள் அதிகமாக வந்தன எவ்வளவு பெரிய சண்டையாக இருந்தாலும் அன்று நடக்கும் செக்ஸில் அந்த சண்டை முடிந்துவிடும்.போத் ஆஃப் தெம் கினோவ் ஹவ் டூ சேட்டிஸ்ஃபை ஈச் அதர் இன் செக்ஸ்.ஒரு கப்பில்ஸ்க்கு செக்ஸ் வாழ்க்கை நன்றாக போனால் அவர்கள் வாழ்வில் எவ்வளவு குறையிருந்தாலும் பெரிதாக தெரியாது.....அதே செக்ஸ் வாழ்க்கையில் பிரச்சனை என்றால் வாழ்க்கையில் உள்ள சின்ன சின்ன பிரச்சன்னையும் டைவர்ஸிற்கு அழைத்து சென்று விடும் அதுபோலதான் ஷர்மி மைக் வாழ்க்கையிலும் .....அவர்களது செக்ஸ் வாழ்க்கை ஒருவருக்காக ஒருவரை சிறு சிறு அட்ஜஸ்ட்மண்ட் செய்ய வைத்தது ஷர்மி மைக்கிற்காக நான் வெஜ் சாப்பிட பழகிக்கொண்டால் மைக் ஷர்மிக்கு தொந்தரவு தராமல் ஹெட்செட்டில் பாட்டுக்கேக்க ஆரம்பித்துவிட்டான்.முதலில் சில மாதம் காண்டம் உபயோகப்படுத்தினர் அது உபயோகப்படுத்த மைக்கிற்கு பிடிக்காததால் ஷர்மி பைல்ஸ் எடுக்க ஆரம்பித்தாள்.ஆனால் இடையில் ஷர்மி பைல்ஸ் எடுக்க மறந்து அவள் பிரக்னென்ட் ஆகி விட்டதால்.மைக்கிற்கு ஷர்மிக்கும் அதில் பெரிய பிரச்சனையாகி விட்டது கடைசியில் ஒரு பெரிய ஹாஸ்பிட்டலில் 50000 செலவு பண்ணி அபார்சன் செய்தார்கள்.ஷர்மிக்கும் மைக்குடன் வந்த பிறகு மிதுனிடம் சான்ஸ் கிடைத்தது.இருவரும் இளமைக்கடலில் நீந்தி மகிழ்ச்சியுடன் வாழ ஆரம்பித்தார்கள்.கடிகாரம் அலாரம் அடிக்கிறது மணி 5 ஆகிறது நாராயணன் எழுகிறார் .ஷர்மி அவருக்கு காஃபி கொண்டுவருகிறாள்.அவள் யோசித்துமுடித்திருப்பாள் என அவளை நம்பி கதையை நிகழ்காலத்திற்கு நகர்த்துகிறேன்.
"என்னம்மா என்ன முடிவு பண்ணிருக்க...."நாராயனன்.
ஷர்மி தயக்கத்துடன் "இல்லப்பா ஒரு 3 மாசம் கழிச்சு எதுவானாலும் வச்சுக்கலாமே ....நா கொஞ்சம் யோசிக்கணும் நீங்க போங்க நா போன் போட்டு சொல்றேன்..."
"அவா கேப்பாளே என்ன சொல்ல...."
"நா நாளைக்குள்ள சொல்லிடறேன்பா...."
"நோக்கு என்ன பிரச்சன்னைன்னு சுத்தமா புரியலை....சினிமா முக்கியம்னு சொன்ன அவா அதுக்கும் சம்மதம் சொல்லுவாள்னு சொல்லிட்டேன்....இன்னும் 3 மாசம்னு ஏதோ நாள்கடத்துற என்ன யாரையா லவ் பண்ணி தொலைச்சுண்டு இருக்கியாடி வாய திறந்து தொலையேன்..."
"சீ... சீ....அதெல்லாம் இல்லப்பா நேக்கு இப்போ சினிமால கவனம் செலுத்தனும் இன்னும் ஒரு 3 மாசம் அதுக்கப்புறம் அதுல என்னால எதுவும் முடியலனா அதுக்கு தகுந்தாப்ல நா முடிவு எடுத்துக்குறேன்னு சொல்லுறேன்...."
"சரி....ஏதோ சொல்லுற....நாராயண பிள்ளைங்கோ சொக்கதங்கங்கன்னு ஊர்ல எல்லாரும் பேசிக்கிறா ...நம்புறேன் நீயும் அத காப்பாத்துவன்னு.."
ஷர்மி அப்பாவை அழைத்துக்கொண்டு வாசல் வரை வருகிறாள்.
"பணம் ஏதா தேவைப்பட்டுச்சுனா போன் போடு....பணம் இருக்குல்ல..."
"அதெல்லாம் இருக்குதுப்பா...."
"ஒரு 5000 ரூபா குடுவேன் அக்கா புள்ளைங்களுக்கு ஏதா வாங்கிட்டு போலாம்."
"ஒரு நிமிஷம் இருங்கோப்பா..."ஷர்மி பணம் எனக்கு வேண்டும் என்று கேட்கவேண்டியதை எப்படி சுற்றி வளைத்து கேட்டு வாங்குகிறார் என அவள் தந்தையை அவள் மனதினுள் மெச்சிக்கொள்கிறாள்.இதை அக்கா பிள்ளைகளுக்கா வாங்குகிறார் கிச்சா மாமாவுடன் சேர்ந்து சீட்டாட தானே வாங்குகிறார்.அக்காவிடம் காசு கொடுப்பதை சொல்லிவிடவேண்டும் இல்லையென்றால் சீட்டாடியே மொத்தக்காசையும் காலி பண்ணி விடுவார் என்று எண்ணிக்கொண்டே ஷர்மி காசு தருகிறாள்.அதை வாங்கிக்கொண்டு நாராயணன் சந்தோஷத்துடன் கேபில் கிளம்புகிறார்.
8.சந்தோஷ்-மைக்கேல்-ஷர்மி
சந்தோஷ் மைக்கேலும் அனைவருடனும் உக்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர்.சந்தோஷ் வந்த ஒரே வாரத்தில் அனைவரிடமும் நல்ல நட்பை சம்பாரித்துவிட்டான் .
"ஏ...நீ வேற மைக் எரிச்சல் ஏத்தாத...வெட்கப்பட்டு போறாளா இல்ல வேண்டாம்னு போறாளா ஈகோ வா இல்ல என்ன சுத்தமா பிடிக்கலையா எதுவும் தெரியலையே....."
"பேசாம அவகிட்டையே கேட்டுற வேண்டிதான ...."
" அதுக்கு முதல அவ என்கிட்ட பேசனும்ல.."
"வீட்டுல ஆளுங்க இருக்கிறதுனாலதான ஒரு வேல எங்கையா தனியா கூப்பிட்டு போய் கேட்டு பாரு....நா வேணா ஒரு ஐடியா சொல்லவா ..."
"ம்ம்...சொல்லு"
"இரண்டு நாள்ள வேலன்டைன்ஸ் டே வருதுல அதுக்கு எங்கையா தனியா கூப்பிட்டு போய் கிஃப்ட் கொடுத்து ப்ரொபோஸ் பண்ணு அப்ப எதாவது பதில் சொல்லித்தான ஆகணும்...."
சந்தோஷ் யோசிக்கிறான்.
"மறக்காம நாளைக்கு வந்துருங்க...பிறக தனியா யாருக்கும் ஞாபக படுத்தலனு சண்டைக்கு வரக்கூடாது...."சந்தியா அனைவரிடனும் பொதுவாக கூறுகிறாள்.
"மைக் நாளைக்கு போறப்ப என்னையும் கூப்பிடு சேர்ந்து போவோம்..."
"அதான் நானும் சொல்றேன் நீயும் வா... ஷர்மிய பாக்கணும்னு சொன்னைல அப்டியே வீட்டுக்கு வா மூணு பேரும் சேர்ந்து போவோம்...."சந்தோஷ் தலையாட்டுகிறான்
சந்தோஷ் ரூமில் உக்கார்ந்து நியூஸ் படித்துக்கொண்டிருக்கிறான்.
பூஜா அவனிடம் ஏதோ டிபன் பாக்ஸை கொண்டு வந்து தருகிறாள்.சந்தோஷ் அதை திறந்து பார்க்கிறான் அதில் குலாப் ஜாமூன் இருக்கிறது ...சந்தோஷிற்கு ஏதோ யோசனை வருகிறது .
"பூஜா இங்க உக்காறேன்...."சந்தோஷ் தனது பக்கத்தில் சோஃபாவில் இருக்கும் சிறு இடத்தைக்காண்பிக்கிறான். பூஜா ஆசையுடன் உக்காருகிறாள்.
"இது.....மதுக்கு என்னது புடிக்கும்..."
"புரியல...."
"எதா கிஃப்ட் வாங்கித்தர்றது அந்த மாறி பொருளா எதா புடிச்சிருக்கும்ல ...."
"ம்ம்....அப்படியா...."பூஜா யோசிக்கிறாள்.
"பெய்ண்டிங்ஸ்னா ரொம்ப புடிக்கும்..."பூஜா.
"பெய்ண்டிங்ஸ்னா அதுலையே எதா ஸ்பெசிபிக்கா இருக்கும்ல...."
"சாப்புடேன் கஷ்டப்பட்டு நானே செஞ்சுட்டு வந்துருக்கேன் உனக்கு புடிக்கும்னு ....சாப்பிடுட்டு டேஸ்ட் சொல்லேன்..."
"ம்ம்...சாப்புடறேன்....இது ரொம்ப அவசியம் .. "அந்த டிபனை கொஞ்சம் தள்ளி வைக்கிறான்.
"நீ கொஞ்சம் நல்லா யோசிச்சு பாரேன்...."சந்தோஷ்.
"ம்ம்ம்ம்...ஆய்ல் பெய்ண்டிங் ரொம்ப பிடிக்கும்"பூஜா.
"நிஜமாவே சொல்றியா..."
"ம்ம்...ஆமா"
"ஓகே"
"சாப்பிட்டு எப்புடி இருக்குனு சொல்லேன்"
"பிறக சொல்றேன்...."
"இப்ப சொல்லேன்"
"பிறக சொல்றேன்னு சொல்றேம்ல..."
"சரி...சரி..." பூஜா எழுந்து செல்கிறாள்.பூஜா நடந்துவந்து கொண்டிருக்கிறாள்.சாரதா அவளைக்கூப்புடுகிறாள்
"மாத்திரையை எங்க வச்சிருக்கானாம்..."சாரதா.
"ஸ்...."பூஜா தலையில் அடித்துக்கொள்கிறாள்.
"கேக்க மறந்துட்டேன்..."
"எதுக்கு போனியோ அதையே..."சாரதா திட்டவருகிறாள்.
"இதோ இதோ இப்ப போய் கேட்டுட்டு வந்துடுறேன்"பூஜா திரும்பி செல்கிறாள்.சந்தோஷ் ஆயில் பெய்ண்டிங் எங்கு வாங்குவது என யோசித்தப்படியே சோஃபாவில் சாய்கிறான் . சோஃபா ஓரத்தில் இருந்த பூஜாவின் டிபன் சோஃபாவில் இருந்து கீழே விழுகிறது.சந்தோஷ் அதை பார்க்கவில்லை.பூஜா சந்தோஷ் ரூம் உள்ளே வருகிறாள்.அவள் ஆசையாய் செய்த குலாப் ஜாமூன் கீழே சிதறி கிடப்பதைப்பார்த்து அவளுக்கு அழுகை வருகிறது .யாருக்கும் தெரியாமல் சோகத்துடன் திரும்பி தன் ரூமிற்கு சென்று அழுகிறாள்.
சந்தோஷ் எழுந்து கிளம்பி மைக்கின் வீட்டிற்க்கு செல்கிறான்.காலிங் பெல்லை அமிழ்த்துகிறான் ஷர்மி வந்து கதவைத்திறக்கிறாள்.ஷர்மி பார்ட்டி ட்ரெஸ்ஸில் இருக்கிறாள்.
சந்தோஷ்"மைக்கேல் ...."ஷர்மியை கீழிருந்து மேல் வரை பார்த்தவாறு கேட்கிறான்.
"மைக் உன்ன தேடி யாரோ வந்துருக்காங்க...."ஷர்மி சொல்லிவிட்டு உள்ளே செல்கிறாள்.
மைக்கேல் எட்டிப்பார்க்கிறான் "சந்தோஷ் வாடா உள்ள..."சந்தோஷ் உள்ளே செல்கிறான்.
"ஷர்மி நா சொன்னேம்ல சந்தோஷ்...இவன் தான்.."ஷர்மியிடம் அறிமுகப்படுத்துகிறான்.
"ஓ...நீங்கதானா அது....மூக்குல பிளாஸ்திரி போட்டது...சூப்பர்"ஷர்மி மைக்கை கேலி பண்ணி சிரிக்கிறாள்.
ஷர்மி"உக்காருங்க...."சந்தோஷ் உட்காருகிறான்.
"நீங்க பேசிட்டு இருங்க நா ரெடி ஆகிட்டு வந்துடுறேன்..."மைக் உள்ளே செல்கிறான்.
"யூ லுக் சோ அடோரபில் "சந்தோஷ் .
"தேங்க்ஸ்..."ஷர்மி வெட்கப்படுகிறாள்.சந்தோஷிற்கு மது ஞாபகம் வருகிறாள் இரண்டு நாள் முன்பு இதே வாக்கியத்தை கூறியபொழுது அவள் தன்னிடம் நடந்து கொண்டதை நினைத்து பார்க்கிறான்.
"குடிக்க ஏதாவது கொண்டுவரட்டா..."
"அதெல்லாம் வேணாம் எங்க பார்ட்டிக்கு தான போறோம் அங்க போய் எல்லாத்தையும் குடிச்சுக்கலாம் ...."மைக் உள்ளே டிரஸ் மாத்திக்கொண்டே சவுண்ட் விடுகிறான்.
"அதுவும் கரெக்டு தான்...."சந்தோஷ்.
"என்ன பாக்கணும்னு சொன்னிங்கலாமே....."ஷர்மி சந்தோஷிடம் கேட்கிறாள்.
"ஆமாங்க சினிமானா எனக்கும் பிடிக்கும் அதான் சினிமால அசிஸ்டண்ட் டைரக்டரா ஒர்க் பண்ணிட்டு இருக்கிங்கனு சொன்னா அதா...சும்மாவே சினிமா பர்சன்ஸ்னாளே மவுசு தான வருங்காலத்து செலிபிரிட்டிய இப்ப ஒருதடவை மீட் பண்ணணும்னு ...."
"அய்யோயோ....இப்படி ஐஸ் வக்கிறீங்களே செலிபிரிட்டிலா இல்லைங்க...."ஷர்மி சிரிக்கிறாள்.
மைக் வருகிறான்.மூவரும் மைக்கேலின் காரில் செல்கின்றனர்.சிரித்து மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொண்டே செல்கின்றனர்.அங்கு செல்வதற்குள் ஷர்மியும் சந்தோஷும் நெடுநாள் நண்பர்கள் போல் நெருக்கமானவர்கள் ஆகி விடுகின்றனர்.
சந்தியாவின் கெஸ்ட் ஹவுஸ் வருகிறது ....கிட்டத்தட்ட சுமார் 40- 50 கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன .சந்தியாவின் அண்ணன் சென்னையின் ஒரு பெரிய கம்பெனியின் மேனேஜர் என்பதால் ஏற்பாடு அமோகமாக செய்யப்பட்டுள்ளது.சந்தோஷ் ஷர்மி கார் பார்க் செய்ய சென்ற மைக்கிற்காக வெய்ட் செய்துக்கொண்டுள்ளனர்.மைக் வருகிறான் மூவரும் உள்ளே நுழைகின்றனர்.
எங்கும் ஆபாசத்திற்கும் அழகிற்கும் வித்தியாசம் தெரியாத பெண்களும் அவர்களுக்காக ஏங்கும் ஆண்களும் நிறைந்துள்ளனர் .....தோட்டத்தில் பார்ட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.வரிசையாக வெஜிலிருந்து நான்வெஜ் வரை ரெமிமார்டினில் இருந்து லோக்கல் சரக்கு வரை எல்லா ஐட்டங்களும் இடம்பெற்றுள்ளன.மூவரும் ஒரு ஓரத்தில் இருக்கும் டேபிலை தேர்ந்தேடுக்கின்றனர் .
"சார் டு யூ வான்ட் ட்ரிங்க்ஸ்...."வெயிட்டர் வந்து கேட்கிறான்.
"ரெட் வைன் ..."மைக்.
"எனக்கும் ஒன்னு..."சந்தோஷ்.
"கோக் ..."ஷர்மி.
"ட்ரிங்க்ஸ் சாப்பிடமாட்டியா..."சந்தோஷ்.
"அதுக்கு அவ ஒரு ரீசன் சொல்லுவா பாரு...."மைக்.சந்தியா அவர்களை நோக்கி வருகிறாள்.
"மைக் .....எப்ப வந்த "சந்தியா மைக்கை கன்த்தில் கிஸ் பண்ணுகிறாள்.
"ஜஸ்ட் நௌவ்...."மைக்.
"ஓ....ஷர்மி யூ லூக் ஸோ கார்ஜியஸ் "சந்தியா.
"நாட் மோர் தன் யூ மை லிட்டில் கேர்ள்...யூ லுக் லைக் அன் ஏஞ்சல்"ஷர்மி.
"மேடம் நானும் வந்திருக்கேன்...."சந்தோஷ் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறான்.
"ஓ...சாரி நீ அபப்டி மறைஞ்சு இருந்தையா அதான் பாக்கல...."
"அவங்க கண்ணுக்கு நாமலாம் தெரிய மாட்டோம் அவங்களுக்கு மைக் மேல தான் கண்ணு போகும்...."ஷர்மி குதற்கமாகப் பேசுகிறாள்.
"இல்ல ஷர்மி மைக் டிரஸ் கொஞ்சம் பிரைட்டா இருந்ததுனால...ஃபர்ஸ்ட் மைக்க பாத்தேன் "சந்தியா .
"ஐ அம் ஜஸ்ட் கிட்டிங் ...."ஷர்மி சிரிக்கிறாள்.அவர்களுக்கு ட்ரிங்க்ஸ் வருகிறது ....சந்தியாவின் காக்டேய்லை மைக் வாங்கிக்குடிக்கிறான்.
"மைக் ...திஸ் இஸ் மை பார்ட்டி ...வி ஹவ் டு என்ஜாய் திஸ் நைட் மோர் தன் எனி ...எனி அதர் நைட்...."சந்தியா போதையில் உளறுகிறாள்.
மைக்"யா....டெஃபினிட்லி "சந்தியாவை யாரோ ஒருவர் அழைக்கிறார்.
"ஒன் மினிட்...."சந்தியா செல்கிறாள்.
"மைக் ட்ரிங்க்ஸ் லிமிட்டோட வச்சிக்கோ..."ஷர்மி.
"எதுக்கு பேபி...."மைக்.
"சொன்னா கேளு...."
"டிரைவ் பண்றதுக்குதா சந்தோஷ் இருக்காம்ல...."மைக்.
"பச்...."ஷர்மி முறைக்கிறாள்.ஆனால் அதைக்கண்டு கொள்ளாமல் மைக் அடுத்த பாட்டில் ஆர்டர் செய்கிறான்.
"நீ எதுக்கு ஷர்மி ட்ரிங்க்ஸ் சாப்பிட மாட்டிங்குற...."மைக் மீது டென்ஷனாக இருக்கும் ஷர்மியை திசை திருப்பக்கேட்கிறான் சந்தோஷ்.
ஷர்மி "உனக்கு புரியுற மாறி சொல்லனும்னா....."சுற்றி முற்றி தேடுகிறாள்.
"அந்த பொண்ணு எப்படி இருக்கா..."தூரத்தில் ப்ளூ கலர் வெஸ்டர்ன் டிரஸ் அணிந்து கொண்டிருக்கும் பெண்ணை பார்த்து கேட்கிறாள்.
"செமையா இருக்கா...."சந்தோஷ் வைத்தக்கண் வாங்காமல் அவளைப் பார்க்கிறான்.
"அடச்சீ....நா அத கேக்கல அவ எப்படி உக்கார்ந்து பேசிட்டு இருக்கானு ...."செல்லமாக அடிக்கிறாள்.
"எப்பயும் போல தான..."
"சரி நீ அவள நல்லா பாத்து வச்சிக்கோ பிறக நா உனக்கு ப்ராக்ட்டிக்கல்லா எக்ஸ்ப்லெய்ன் பண்றேன்".
"சரி ....ஏதோ சொல்லுற...மைக் உன்கிட்ட ஒன்னு கேட்கலாமா "
"ம்ம்...கேளுளு..."போதையில் உளருகிறான்.
"நீதா அடுத்த மேனேஜர்னு இருக்குறப்ப...திடீர்னு என்ன கூப்பிட்டு வந்து இவன மேனேஜர்க்கு ட்ரெய்ன் பண்ணுனு சொல்றப்ப உனக்கு கோபம் வரலியா..."
"வரலையே...."
"அதான் ஏன்னு கேக்கேன்..."
"ஏன்னா எனக்கு என் இடமும்ம்ம்.... திறமையும்ம்ம்..... தெரியும்.. நா ரிசைன் பண்ணா என்ன ஆகும் தெரியுமா ஏன் ரிசைன் பண்றேன்னு சொன்னாலே உன் மாமா எனக்கு லட்சத்துல இன்க்ரிமெண்ட் கொடுப்பான் சார்ரி கொடுப்பார் இஉனக்கு இக்குவல்லா ஒரு பதவியும் உருவாக்குவார்.ஆனா எனக்கு இப்ப அதுலா தோணல ...ஆனா தோணும் ஒருநாள் கண்டிப்பா தோணும் அந்த நாள் ஒன்னு அவ்வளவு தூரம் இல்ல..."
இருட்டு ஆக ஆக கலர் லைட்களின் அழகு கண்ணில் புலப்பட ஆரம்பிக்கின்றது.
"என் மாமா முதல் நாள் உன்ன பத்தி என்ன சொன்னாரு தெரியுமா ...கேரக்டர் சரி இல்லன்னு ...உன் கூட சேர்க்கை வச்சிக்க வேண்டாம்னு...."
"அவர் பாய்ண்ட் ஆஃப் வியூல அதுதா கரெக்ட் ஒரு கட்டுக்கோப்பான குடும்பத்துல தலைவரா இருக்குறப்ப அவருக்கு என்ன மாறி அளுங்கள பாத்தா எங்களுக்கு அவரு தர்ற பேரு கேரக்டர் சரி இல்லாதவன்.
என்ன பாத்தா கேரக்டர் சரி இல்லாதவன் மாறிதான் தோணும் ஏன் கேரக்டரே இல்லாதவன் மாறிதா தோணும்அதுதான் என் கேரக்டரே. மத்தவங்களுக்காக நான் என் கேரக்டர் மாத்தமுடியுமா....முடியாதுல "
சந்தோஷ்"ஆனாலும் உன்ன எனக்கு பிடிக்கும் மைக் ஏன்னு சொல்லு..."மைக் தெரியவில்லை என உதட்டைப்பிதுக்குகிறான்.
"ஏன்னா நீ உன் மனசுக்கு புடிச்சத செய்ற இவாழ்ற ....உன் வாழ்க்கையை நினைச்சு எனக்கு பொறாமையா இருக்கு ...எனக்கும் உன்ன மாறி வாழணும்னு ஆசை ஆனா என்ன சுத்தி ஒரு குடும்பம் நீ சொன்ன கட்டுக்கோப்பான குடும்பம் இருக்கு அத தாண்டி என்னால வரமுடியாது..."சந்தோஷ் .
டி. ஜே பாட்டுப்போட ஆரம்பிக்கிறார்.அனைவரும் எழுந்து ஆட (கை கால்களை இழுத்துக்கொண்டு ஆடுவதாக நினைத்துக்கொள்கின்றனர்) செல்கின்றனர்.மைக் ஷர்மியை அழைத்துக்கொண்டு செல்கின்றான்.ஷர்மி இரண்டு நிமிடம் ஆடிவிட்டு வந்து உட்கார்ந்துக்கொள்கிறாள்.ஷர்மி சந்தோஷை அழைத்து அந்த ப்ளூ வெஸ்டர்ன் ட்ரஸ் போட்ட பெண்ணை காண்பிக்கிறாள். அந்த பெண் தட்டுத்தடுமாறி ஆடிக்கொண்டுருக்கிறாள்.
"அவளுக்கென்ன...."சந்தோஷ் .
"ஒரு 5 நிமிஷம் கழிச்சு சொல்றேன்..."ஷர்மி .
"சினிமால சான்ஸ் கிடைக்குறது ரொம்ப கஷ்டம்ல இப்பல்லாம் ரொம்ப காம்படிஷன் இருக்கும்ல..."
"ஆமா நா ஒன்னு சொல்லவா..."ஷர்மி.சந்தோஷ் சரியென தலையாட்டுகிறான்.
"ஒரு 5 -6 பேர் ஒவ்வொரு தசாப்தத்துளையும் சினிமால பெரிய ஆள் ஆவாங்க....அவங்கள இன்ஸபிரேஷனா வச்சிகுட்டு ஒரு 2000 பேர் சினிமாக்குள்ள வர ஆசைப்படுவாங்க அதுல ஒரு 500 பேர் தா அதுக்காக உயிரகொடுத்து கஷ்டப்படுவாங்க அதுல ஒரு 100 பேர்தா குடும்ப சூழ்நிலையெல்லாம் தாண்டி வெளியவரமுடியும் அதுல 50 பேருக்கு தா சான்ஸ் கிடைக்கும் அதுலையும் ஒரு 10 பேருக்கு லக் இருக்கும் அவங்களையும் ஒரு 5-6 பேர் சினிமால ஜெய்ப்பாங்க அவங்க படத்தைப் பார்த்து அவங்கள பத்தின கதைய மட்டும் கேட்டுட்டு நாமளும் ஜெய்ச்சுடலாம்னு இன்னொரு 2000 பேர் ஆசையோட அவங்கள இன்ஸபிரேஷனா வச்சிக்கிட்டு முதல இருந்து இந்த வாக்கியம் அவங்களுக்கு திருப்பி நடக்க ஆரம்பிக்கும்...."
சந்தோஷ் அமைதியாக கேட்டுக்கொண்டிருக்கிறான். எல்லாரும் இருளின் உச்சத்தில் வண்ணவிளக்குகளுக்கு நடுவே போதையிலும் இசையிலும் மிதக்க ஆரம்பிக்கின்றனர்.
"நாம எல்லா விஷயத்துலையும் ஃபீல்டுளையும் நாம கவனம் செலுத்துறது ஜெய்க்கிறவங்க கதையதா ஆனா நாம உண்மையா தெரிஞ்சிக்கவேண்டியது தோத்தவங்க அனுபவத்த ...."ஷர்மி பேச்சை நிறுத்திவிட்டு சந்தோஷிடம் அந்த வெஸ்டர்ன் டிரஸ் போட்ட பெண்ணை காண்பிக்கிறாள்.
சந்தோஷ் அவளைப்பார்க்கிறான் அவள் கூட்டத்தில் ஆடிக்கொண்டு இருக்கிறாள் அவள் கூடே ஆடுபவன் அவளின் மார்புகளில் கையை வைத்து பிசைகிறான் ....கூட்டத்தில் அவளை இறுக்கிக்கட்டிபிடித்தவாறு முழுவதுமாக கையால் எல்லா இடத்திலும் தடவிக்கொண்டிருக்கிறான். இருட்டில் உற்று பார்த்தால் மட்டுமே இது பக்கத்தில் ஆடுபவர்க்கு கூட தெரியும் ...அவள் சுயநினைவில் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறாள். ஷர்மி சந்தோஷை அழைக்கிறாள்.
சந்தோஷ் திரும்புகிறான்"இது தா ஒரு பொண்ணு அளவுக்கு மீறி குடிச்சா இந்த பார்ட்டி மட்டுமில்ல எந்த பார்ட்டியா இருந்தாலும் நடக்குற நிலைமை எனக்கும் இந்த மாறி நடந்துருக்கு ஒரு ரெண்டு மூணு பார்ட்டில அதுக்கப்புறம் தா நா இந்த முடிவு எடுத்தேன் பப்ளிக் க்ளப்ஸ் பார்ட்டிஸ்ல ட்ரிங்க்ஸ் பண்ண கூடாதுனு இது வேற எங்கையா நடந்தா ஹரஸ்மெண்ட் ஆனா இந்த மாரி இடத்துல பார்ட்டி கல்ச்சர் "சந்தோஷ் ஏதோ சொல்ல வருகிறான் ஷர்மி அதை மறித்து "இல்ல இல்ல நா ஆம்பளைங்கள குத்தம் சொல்லல அட்வாண்டேஜ் எடுத்துக்குறது ஹியூமன் நேச்சர்....ஏன் இப்ப ஒரு பாய் ஃப்ரண்டோ இல்ல ரிலேட்டிவ்வோ தன்னிஅடிச்சு சுயநினைவு இல்லாம வந்தா பொண்ணுங்க அந்த நிலைமைய அடவான்டேஜ்ஜா எடுத்துக்குட்டு அவன்கிட்ட இருந்து ஏதாவது உண்மை இல்ல தன்னை பத்தி எதாவதுன்னு பேச்சுக்குடுத்து அவன் வாய்ல இருந்து உண்மைய கண்டுபுடிக்க நினைக்கமாட்டாங்களா இஏன் நானே இன்னைக்கு மைக்கிட்ட இருந்து சில விஷயம் வாங்கப்போறேன் ...நா எதுவும் மேள் க்ருயல்ட்டி பத்தி சொல்லல ஹியூமன் நேச்சர் பத்தி பேசுனேன் அவ்வளவு தான்..."
ஷர்மியும் சந்தோஷும் பல விஷயங்கள் பேசிக்கொள்கின்றனர் .சந்தியாவும் மைக்கும் பின்னி பிடரி ஆடிக்கொண்டிருக்கின்றனர் சிறு இடைவெளியில் ச் ச் என முத்தங்களும் பரிமாறிக்கொள்கின்றனர். ஷர்மி அதைக்கோபத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
அவளை திசைதிருப்பும் பொருட்டு சந்தோஷ் தனது காதல் கதையை சொல்லுகிறான்."ம்ம்..நல்லா இருக்குதே விட்டா இதையே ஒரு படமா பண்ணிறலாம் போலியே....மது போட்டோ வச்சிருக்கையா..."
சந்தோஷ் போனில் மதுவின் போட்டோவை காண்பிக்கிறான்.அதை பார்த்த உடன் ஷர்மி ஏதோ யோசிக்கிறாள்.
"ஏய்...இந்த பொண்ண நா எங்கேயோ பாத்திருக்கேன்...ஆனா நியாபகம் வரமாட்டேங்குது ...ராயபுரம் சைடு எங்கேயோ..."ஷர்மி.
"வாய்ப்பு இல்ல ..."சந்தோஷ்.
ஷர்மி"சரியா ஞாபகம் இல்ல...நல்ல சூப்பர் மேட்சா இருப்பிங்க ரெண்டு பேரும் ....நீ லவ் பண்ணு அவள... அவ என்ன நினைச்சாலும் கவலைப்படாத நீ அவள புரிஞ்சிக்க வைக்கலாம் உன்னோட லவ்னால..."சந்தோஷ் சிரிக்கிறான்.
"எதுக்கு சிரிக்கிற...."ஷர்மி.
"இதே விஷயத்த மைக்ட சொன்னப்ப அவன் வேற மாறி ரியாக்ட் பண்ணான் நீ கம்ப்லீட் அப்போசிட்டா வேற மாறி ரியாக்ட் பண்ற ஆனா ரெண்டு பேரும் ஒண்ணா வாழ்ந்துட்டு இருக்கிங்க எப்படி உங்களுக்குள அந்த லைஃப் மட்டும் ஸ்மூத்தா போகுதுன்னு நினைச்சேன் ...."சந்தோஷ் .
ஷர்மியும் சிரிக்கிறாள்.
சந்தோஷிற்கு தெரியாது அவர்கள் எப்படி ஸ்மூத்தாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் எது அப்படி அவர்களை அப்படி வாழவைத்துக்கொண்டுள்ளது என்று ஆனால் நமக்கு தெரியுமே நான் தான் முன்னமே கதையில் சொல்லிவிட்டேனே....
பார்ட்டி நள்ளிரவில் முடிவு பெறுகிறது சந்தோஷ் மைக்கையும் ஷர்மியையும் அவன் வீட்டில் விட்டுவிட்டு அவன் வீட்டிற்கு செல்கிறான்.மைக் நாளை மதுவிற்கு கிஃப்ட் வாங்க செல்லவேண்டும் என்று கூறியுள்ளதால் அவன் வந்து படுத்து உறங்கிவிடுகிறான்.
9.சந்தோஷ் -மது-சரண்யா
மைக்கேலும் ஷர்மியும் சந்தோஷிற்கு ஆயில் பெய்ண்டிங் செலக்ட் செய்து தருகின்றனர்.சந்தோஷ் அதை வாங்கி வீட்டிற்கு சென்று அதைப் பத்திரமாக வைக்கிறான்.மதுவின் ஸ்கூட்டி இன்னும் பஞ்சர் ஒட்டப்படாததால் சக்திவேல் தான் தினமும் அவளை பூஜாவுடன் சேர்ந்து பிக்கப் ட்ராப் செய்வார்.சந்தோஷ் எதிர்பார்த்த பிப்.14 வந்தது சந்தோஷ் எழுந்தவுடன் சக்திவேலிடம் செல்கிறான்.அவர் நியூஸ்பேப்பர் படித்துக்கொண்டிருக்கிறார்.
"மாமா...."சந்தோஷ் .
"என்ன மாப்ள ....காலங்காத்தால வெரி குட் ...இன்னும் கொஞ்ச வேகமா எந்திச்சிருந்தா அண்ணன் கூட ஜாக்கிங் போயிருக்கலாம்ல..."சக்திவேல் சொல்லிவிட்டு பேப்பரில் மும்முரம் ஆகிறார்.சந்தோஷ் அவர் எதிரில் உள்ள சேரில் உக்காருகிறான்.
"மாமா...இன்னைக்கு நா மதுவ காலேஜ்ல இருந்து பிக்கப் பண்ணிட்டு வந்துர்றேன்..."சந்தோஷ் .
"நல்ல விஷயம் மாப்ள...அப்டியே பூஜாவையும் பிக்கப் பண்ணிட்டு வந்துரு... கொஞ்சம் தள்ளி தா அவ காலேஜ்ஜூம் எனக்கு கொஞ்சம் வேலை குறையும்"பேப்பரை கீழே வைத்துவிட்டு சந்தோஷை பார்த்து கேட்கிறார்.
"அதுலா சரிப்பட்டு வராது மாமா..."கஸ்தூரி காப்பி கொண்டு வருகிறாள்.சந்தோஷ் அமைதியாகி விடுகிறான்.
"என்ன காலைலையே மாமனும் மருமகனும் ஏதோ குசுகுசுனு பேசிட்டு இருக்கிற மாறி தெரியுது... நா வந்த உடனே அமைதி ஆயிட்டிங்க என்னங்க விஷயம்..."கஸ்தூரி கேட்கிறாள் .சந்தோஷ் சைகையால் சொல்லவேண்டாம் என சக்திவேலிடம் சொல்லுகிறான்.
"மாமனுக்கும் மருமகனுக்கும் நடுவுல ஆயிரம் இருக்கும் அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியுமா..போ நீ போய் அவனுக்கு காப்பி கொண்டு வா...."சக்தி கஸ்தூரியை அனுப்புகிறான். கஸ்தூரி சென்றுவிட்டதைப்பார்த்து சந்தோஷ் "ஏன் எதுக்குனுளா கேட்காத மாமா....ஒரு ஹெல்ப் பண்ணு பூஜாவ மட்டும் நீ பிக்கப் பண்ணிக்கோ காலேஜ்ல இருந்து... முடியுமா.... முடியாதா"சக்தி ஏதோ சொல்லவருகிறான்.
சந்தோஷ் இடைமறித்து "பண்ண முடியுமா.... முடியாதா... ஒரே வார்த்தை"
"பண்றேன்..."சக்திவேல்.
"சூப்பர் மாமா ...நீ இத யார்க்கிட்டையும் சொல்லாத மதுக்கு கூட தெரிய வேண்டாம்..."
"ஆல் தி பெஸ்ட் ....நடத்து நடத்து"
"எதுக்கு ஆல் தி பெஸ்டு..."சந்தோஷ்.
சக்தி "அதுகூடவாடா நா தெரியாம இருப்பேன் வெலன்டைன்ஸ் டே சர்ப்ரைஸ் கொடுக்க பிளான் பண்ற...அதான "சந்தோஷ் அதிர்ச்சியுடன் பார்க்கிறான்.
"நீ லா லேட் மாப்ள... நா உங்க அத்தைக்கு நைட் 12 மணிக்கே கிஃப்ட் கொடுத்து சப்ரைஸ் பண்ணிட்டேன் ...ஹா ஹா ஹா"சக்திவேல் சத்தமாக சிரிக்கிறான்.சந்தோஷும் தன் வேலை ஈசியாக முடிந்துவிட்டதென மகிழ்ச்சியில் அவருடன் சேர்ந்து சிரிக்கிறான்.
சந்தோஷ் ஆஃப்பீஸில் பெர்மிசன் எடுத்துக்கொண்டு செல்கிறான்.
"பரிட்சைக்கு போற குழந்தை மாறி கைகால்லா ஆடுது ....சீ "சந்தியா சந்தோஷை கிண்டல் பண்ணுகிறாள்.
சந்தோஷ் சிரித்துக்கொண்டே செல்கிறான் வீட்டிற்கு சென்று யாருக்கும் தெரியாமல் ஆயில் பெயிண்டிங்கை காரில் ஏற்றுகிறான் .காரில் மதுவை அழைக்கச்செல்கிறான்.சந்தோஷ் பதட்டதுடன் இருக்கிறான். ரோடு காலியாக இருக்கிறது அவன் என்ன பேசுவது என ஒரு முறை மனதிற்குள் ஒத்திகைப்பார்த்துக்கொள்கிறான்.
சந்தோஷ் அவள் காலேஜ் எதிரில் சென்று நிற்கிறான்.மது அவள் ஃப்ரன்ட்ஸுடன் நடந்து வருகிறாள்.சந்தோஷ் மாதங்கியிடம் கைக்காட்டுகிறான்.மாதங்கி அவனைப்பார்த்து எரிச்சலாகிறாள்.அவளின் நண்பர்கள் அவளைக்கிண்டல் செய்கின்றனர்.மது கோபத்துடன் சந்தோஷ் அருகில் வருகிறாள்.சந்தோஷ் முன் கதவைத்திறக்கிறான்.மது பின்கதவைத்திறந்து பின்னால் உட்கார்ந்துக்கொள்கிறாள்.சந்தோஷ்முன் கதவை மூடிவிட்டு வண்டியை எடுக்கிறான்.
"சித்தப்பா வரலையா...."மது கோபமாக கேட்கிறாள்.
"இல்ல ஏதோ வேல இருக்காம்..."சந்தோஷ் .
"பூஜா காலேஜ் அந்த பக்கம் போனும்..."மாதங்கி கை காமிக்கிறாள்.
"இல்ல பூஜாவ மாமா பிக்கப் பண்ணிப்பாரு ...."
"ஏன் அப்படி...."கேள்வி கேட்கும் போது வண்டி வீட்டிற்கு செல்லாமல் வேறு வழியில் செல்வதை கவனித்து புரிந்துகொண்டு கேட்காமல் நிறுத்திவிடுகிறாள்.
"மது நா உன்கூட கொஞ்சம் பேசணும்...."சந்தோஷ்.
"வீட்டுல போய் பேசலாமே ..."மது.
"பேசலாம் குனிஞ்சுகிட்டு ரூம் குள்ள போய் ஒளிஞ்சிக்காம நிமிர்ந்து என்ன பாத்து பேசுனா...."சந்தோஷ்.
மாதங்கி அமைதியாக இருக்கிறாள்.
"டிரைவ் இன் போறோம்..."சந்தோஷ் மாதங்கியிடம் சொல்லுகிறான் ஆனால் மாதங்கி எந்த ரெஸ்பான்ஸும் பண்ணவில்லை .
சந்தோஷ் டிரைவ் இன் செல்கிறான்.வண்டியை ஓரிடத்தில் நிறுத்துகிறான்.ஒரு வெயிட்டர் ஓடி வந்து வண்டியில் டேபிலை ஜாய்ன் பண்ணுகிறான்.
"மது உனக்கு என்ன வேணும் ...."சந்தோஷ்.
"க்ரீன் டீ போதும்...."மது.
"2 க்ரீன் டீ"சந்தோஷ் சொல்ல வெயிட்டர் செல்கிறான்.
"ஏதோ பேசனும்னு சொன்ன..."மது.
சந்தோஷ் "வெயிட் பண்ணு...டீ வந்துரட்டும்...."
வெய்ட்டர் 2 டீ கொண்டு வந்திருக்கிறார்.
"வேற ஏதாவது வேணுமா சார்…"வெய்ட்டர்.
"மது..."சந்தோஷ் .மாதங்கி வேண்டாம் என தலையாட்டுகிறாள்.
"தேவைப்பட்டா நா கூப்புடுரேன்..."சந்தோஷ் கூற வெய்ட்டர் சென்று விடுகிறான்.
"ம்ம்ம்.சொல்லு...."மாதங்கி கீழே பார்த்துக்கொண்டு கேட்கிறாள்.
"முதல என்ன பாத்து பேசு என்கூட பேசுறையா இல்ல தனக்குத்தானே பேசிக்கிறையானுக்கூட தெரியல... ஏன்கிட்ட பேச எதுக்கு பயப்புடுற மது"
மது "நா எதுக்கு பயப்படனும்..."சந்தோஷிடம் கேட்கிறாள்.
"ம்ம்...இப்படி பேசு இப்ப எப்படி அழகா இருக்குனு தெரியுமா....மது எனக்கு உன்ன சின்ன புள்ளைல இருந்து பிடிக்கும்....சேலை கட்டுனதுக்கு முன்னாடி நீ தாவணி போடுறதுக்கு முன்னாடி நீ பேச நடக்க கத்துக்குறதுக்கு முன்னாடி இருந்து...ஒரு முப்பது நிமிஷம் முன்னாடி ஒன்னு நெனச்சேன் உன்ன காலேஜ்க்கு பிக்கப் பண்ண வர்றப்ப இந்த உலகத்துல எந்த பையனும் ஒரு பொண்ண லவ் பண்ணத விட நாம ஒரு படி அதிகமா லவ் பண்ணி சந்தோசமா வாழ்வோம்னு ....ஆனா பத்து நிமிஷம் முன்னாடி உன் கூட கார்ல நீ என்ன கண்டுக்காம வந்தப்ப எனக்கு அது தப்போனு தோணுச்சு....ஆனா இந்த நிமிஷம் இந்த நொடி நா பத்து நிமிஷம் முன்னாடி யோசிச்சது தப்புனு தோணுது ....ஐ நீட் யூ அன்டில் மை லாஸ்ட் பிரீத் மது....நீ என்கூட எப்பவுமே இருக்கணும் லவ்வரா வைஃபா ஃப்ரண்டா அவ்வளவுதான்....நா என் மனசுல பட்டத பேசிட்டேன் இதுக்கு மேல நீ தான் பேசணும் உன் மனசுல பட்டதையும் இருக்குறதையம் ... "சந்தோஷ்.
மது எதோ பேச வருகிறாள் ஆனால் பேச முடியவில்லை இவார்த்தை வரவில்லை சந்தோஷ் முகத்தை பார்த்தால் பாவமாக தெரிகிறது.மது என்ன சொல்ல என தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறாள்.சந்தோஷிற்கு அப்பொழுது கால் வருகிறது
"ஒன் மினுட்...."சந்தோஷ்.
சந்தோஷ் மொபைலை எடுத்துக்கொண்டு செல்கிறான்.மாதங்கி சந்தோஷ் ஜாலியாக போன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறாள் இதான் இப்பொழுது சொல்லப்போகும் விஷயத்தினால் சந்தோஷின் மகிழ்ச்சி காணாமல் போகப்போவதை நினைத்து வருந்துகிறாள்.அவளது காலில் ஏதோ ஒன்று இடிபடுகிறது அதை எடுத்துப்பார்க்கிறாள்.அதில் கிஃப்ட் பேப்பர் சுற்றப்பட்டு இருக்கிறது.மது அதை பிரித்துப்பார்க்கிறாள் அதில் ஆயில் பெயிண்டிங் இருக்கிறது.சந்தோஷ் வருகிறான் மாதங்கி ஆயில் பெயிண்டிங்கை அதிசயமாக பார்த்துக்கொண்டு இருப்பதை பார்க்கிறான்.
"உனக்கு தா வாங்குனேன் நல்லா இருக்கா..."சந்தோஷ் குரலை கேட்டு நிமிர்கிறாள் .நல்லா இருக்கிறது என தலையாட்டுகிறாள் .
"மது நா கேட்டதுக்கு ....யோசிச்சுடையா..." சந்தோஷ்.மது கண்கலங்க சந்தோஷைப் பார்க்கிறாள்.சந்தோஷிற்கு ஆட்டோ ஹார்ன் சத்தம் கேட்கிறது.
சந்தோஷ் கற்பனையில் இருந்து எழுகிறான் அவன் எதிரில் ஆட்டோ வருகிறது ....சந்தோஷ் ஸ்டேரிங்கை வளைக்க ட்ரை பண்ணுகிறான்.ஆட்டோடிரைவரும் வண்டியை திருப்ப முயல்கிறான் .சந்தோஷின் கார் ஆட்டோவின் பக்கவாட்டில் அடித்து சாய்கிறது.சந்தோஷ் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
ஆட்டோடிரைவர் சாய்ந்துக்கிடக்கும் ஆட்டோ கேப் வாயிலாக வருகிறார்.அவர் ரத்தம் வந்தவாறு வெளியில் வந்து கீழே சாய்கிறார்.சந்தோஷ் கண்ணாடி துடைக்கும் துணியை எடுத்துக்கொண்டு வேகமாக அவரருகே ஓடுகிறான்.அவரைத்தூக்கி அவர் தலையில் அந்த துணியை கட்டுகிறான்.அவனுக்கு அவர் தலையில் வரும் ரத்தத்தைப்பார்த்து பயம் வருகிறது.
"அண்ணா வேற எங்கயும் அடி படலைல...."சாய்ந்திருக்கும் ஆட்டோடிரைவரிடம் கேட்கிறான்.
"ஹெல்ப்....ஹெல்ப்..."சந்தோஷ் கத்துகிறான் ஆள்நடமாட்டம் இல்லாத தெருவில் யாரேனும் சத்தம் கேட்டு வந்து உதவமாட்டார்களா என்று.ஆட்டோ டிரைவர் ஒன்றும் இல்லை என எந்திரிக்க முயல்கிறார்.அப்பொழுது ஆட்டோவின் பின்புறம் முனகல் சத்தம் கேட்கிறது...ஆட்டோ டிரைவர் வேகமாக ஒடுகிறார். சந்தோஷ் அவரைப்பின் தொடர்ந்தபடியே செல்கிறான்.சந்தோஷ் கை கால்கள் எல்லாம் நடுங்குகின்றன.ஆட்டோ டிரைவர் பின் பகுதி வழியாக ஆட்டோவினுள் செல்கிறார்.
"தம்பி....தம்பி.....வேமா வாப்பா"ஆட்டோ டிரைவர் ஆட்டோவினுள் இருந்து கத்துகிறார்.சந்தோஷ் உள்ளே எட்டிப்பார்கிறான் ரத்தவெள்ளத்தில் ஒரு 45 வயது பெண்மணி பல இடத்தில் சதைக்கிழிக்கப்பட்டு உள்ளே இருக்கிறாள்.சந்தோஷிற்கு அதைப்பார்த்து வாந்தி வருமளவு குமட்டுகிறது.
"காலபிடி...காலபிடி..."ஆட்டோடிரைவர் கத்துகிறார்.சந்தோஷ் அவருடன் சேர்ந்து அந்த பெண்மணியை தன் வண்டியில் ஏற்றுகிறான்.சந்தோஷ் அந்த பெண்மணியை தனது தந்தையின் ஹாஸ்பிடலுக்கு அழைத்துவருகிறான்.
சந்தோஷும் டிரைவரும் அந்த பெண்மணியை ஸ்ட்ரெக்சரில் வைத்து கொண்டு வருகின்றனர்.சந்தோஷ் முன் செல்கிறான்.அங்கு வராண்டாவில் இரண்டு டாக்டர்கள் பேசிக்கொண்டிக்கிறார்கள்.
சந்தோஷ் அவர்களிடம் செல்கின்றான்"அங்கிள் ....அப்பாவ பாக்கணும்..."
"அப்பா கேரளா போயிருக்காரு ஒரு ஆப்ரேஷன் விஷய... "சந்தோஷ் சட்டையில் ரத்தத்தைப்பார்க்கின்றனர். "என்னாச்சு..."பின்னாடி வரும் ஸ்ட்ரெக்சரைப் பார்க்கின்றனர்.
10.சந்தோஷ்-சூர்யா-ப்ரியா
ராகவன் காரில் சென்றுகொண்டு இருக்கிறான்.
"என்னடா சொல்ற ...எங்க வச்சி நடந்தது ....யாரும் பாக்கலைல...போலீஸ்க்குளா தெரிஞ்சா பெரிய பிரச்சனை நமக்கு ஏன்னா உன்கிட்ட இந்தியன் ட்ரைவிங் லைசன்ஸ் கூட இல்ல ...நா சொல்றத நல்லா கேளு இல்ல வேணாம் பக்கத்துல ரவி இருந்தா அவன்கிட்ட போன குடு "ராகவன்
சந்தோஷ் பக்கத்தில் இருக்கும் டாக்டரிடம் போனைக்கொடுக்கிறான்.
"ட்ரைவர்க்கு எக்ஸ்டெர்னல் ப்ளீடிங் தா...அந்தம்மா தா..."ரவி பேசிக்கொண்டே அந்த பக்கம் செல்கிறான்.
சந்தோஷ் பயந்தவாறு சேரில் உட்கார்ந்துள்ளான்.
"உங்கப்பா பேசனுமாம்..." ரவி போனை நீட்டுகிறான். சந்தோஷ் போனை வாங்குகிறான்.
"நீ ஒன்னும் பயப்பிடாத ...அந்த டிரைவர்க்கும் அந்த அம்மாக்கும் எதுவும் ஆகலைனா அவங்களுக்கு காசு கொடுத்து இந்த கேஸ் இல்லாம பண்ணிரலாம்..."ராகவன் .
"அவங்களுக்கு ஏதாவது ஆயிருச்சுனா ..."சந்தோஷ்
"ஆயிருச்சுனாலும் அப்படி உன் மேல கேஸ் எதுவும் வராம பண்ணிடலாம் என்ன ஆனாலும் ரவி பாத்துப்பான் அப்படி பிரச்சனை கை மீறி போயிருச்சுனா எனக்கு போன் பண்ணு.... வீட்டுல யாருக்கும் தெரிய வேண்டாம்"ராகவன் போனைக்கட்பண்ணுகிறான்.
"பயமா இருக்கா...."ரவி சந்தோஷிடம் கேட்கிறான்
"பயம்லா இல்ல ஆனா ஒரு கில்ட் ஃபீல்.."சந்தோஷ் மொபைலை எடுத்து உள்ளே வைக்கிறான்.
சந்தோஷ் எழுந்து சென்று ஐ.சி.யூ வில் ட்ரீட்மெண்ட் நடந்துக்கொண்டிருக்கும் பெண்மணியை பார்க்கிறான் .டாக்டர்கள் பரபரப்பாக வேலை செய்துக்கொண்டு இருக்கிறார்கள்அவனது கண்கள் அவனை அறியாமல் கலங்குகின்றன.ரவி ஐ. சி. யூவில் இருந்து வெளியே வருகிறான்.
"சந்தோஷே....இந்தா இந்தம்மா சொந்தக்காரங்க யாருக்காவது போண் பண்ணி இப்படி நாங்க போயிட்டு இருந்த வழில ஒரு ஆட்டோ ஆக்ஸிடன்ட் ஆகி இருந்தது நாங்க அவங்கள எடுத்து ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்கோம்னு இன்ஃபார்ம் பண்ணிரு..."சந்தோஷிடம் ஒரு பர்ஸை தருகிறான்.
"அங்கிள் எப்டி இருக்காங்க..."
"பயப்புடுறதுக்கு ஒண்ணுமில்ல ஆனா ஒரு 2 டு 3 ஹவர்ஸ் அப்சர்வேஷனுக்கு அப்புறம் தா சொல்ல முடியும்..."ரவி ஐ. சி.யூ வினுள் செல்கிறான்.
சந்தோஷ் அந்த பர்ஸை திறந்துப்பார்க்கிறான்.அதில் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது அதில் அந்த பெண்மணியின் பெயர் சரண்யா என போடப்பட்டுள்ளது .அதில் ஒரு ப்ளாக் அண்ட் வைட்டில் எடுக்கப்பட்ட ஆணின் போட்டோ உள்ளது.ஒரு நோக்கியா மொபைல் போன் உள்ளதுஇ50 ரூபா பணம் வைத்திருக்கிறாள்.சந்தோஷ் அந்த மொபைலை அன்லாக் செய்கிறான்.அதில் காண்டக்ட்ஸில் ஒரு நம்பர் மட்டுமே உள்ளது .சந்தோஷ் அந்த நம்பருக்கு போன் செய்கிறான்.
கால் திருச்சி கவர்மெண்ட் காலேஜ் ஹாஸ்டல் செல்கிறது.ஹாஸ்டல் ரூம் எங்கும் சிகெரெட் பாக்கெட்கள் ஹீரோயின்களின் போட்டோக்கள் அழுக்கு துணிகள் என சிதறிக்கிடக்கிறது அங்கு ஒரு போன் ரிங் ஆகிறது அதில் டையலர் அம்மா என காண்பிக்கிறது .ஒருவன் குளித்து முடித்து ஈரத்துடன் டிரஸ் மாத்திக்கொண்டு இருக்கிறான்.
"டேய் அம்பாஞ்சி சூர்யா போன் ரிங் ஆகுது பாரு..."தூங்கிக்கொண்டு இருக்கும் ஒருவன் தூக்கக்கலக்கத்தில் சொல்கிறான்.
"இந்த தாயொலி ஒருத்தன் எங்க போனாலும் போன வச்சிட்டு போயிருவான்...."தேவா போனை எடுக்க போகிறான் போன் கட்டாகிவிடுகிறது .தேவா திரும்ப வந்து கப்போர்டில் இருக்கும் பனியனை எடுக்கிறான்.மீண்டும் போன் ரிங் ஆகிறது ...
"நம்மள சாவடிக்குறதுக்கே ஒவ்வொருத்தனும் வர்ரானுவ...."தேவா திட்டிக்கொண்டே போனை எடுக்கிறான்.
டையலர் பிரியா என வருகிறது.
"ஹலோ...."ப்ரியா.
"ம்மா....நா தேவா பேசுறேன்மா...."அம்பாஞ்சி (தேவா )
"சூர்யா இருக்கானானா..."ப்ரியா.
"அவ வெளிய எங்கேயோ போயிருக்கான் போன வச்சிட்டு போய்ட்டான்மா...."
"அவன் வந்தா என்ன கேன்டீன்ல வந்து பாக்க சொல்றியானா...."ப்ரியா .
"ம்ம்....சொல்றேன்"
"நான் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்னு சொல்லுனா.....மறந்துராத"
"கண்டிப்பா சொல்றேன் போதுமாமா"தேவா போனை வைத்துவிடுகிறான்.டையலர் அம்மா என வருகிறது தேவா மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்கிறான். கப்போர்டில் இருக்கும் தன் சட்டையைப் போட்டுக்கொண்டு மொபைலை கையில் எடுத்தவாறு ரூமை விட்டு வெளியே செல்கிறான்.எதிரே வரும் பையனிடம் "டேய்..... சூர்யாவ பாத்தியா ...."
"இல்லனா..."எதிரே வரும் பையன்.தேவா 2000 ம் பேர் மேல் தங்கியிருக்கும் அந்த ஹாஸ்டலில் சூர்யாவை தேடிச்சென்றுக்கொண்டு இருக்கிறான்.
சந்தோஷ் மொபைல் சுவிட்ச் ஆஃப் என வருகிறது ….மீண்டும் ட்ரைப்பண்ணி கொண்டு இருக்கிறான்.
ப்ரியா சூர்யாவிற்காக காத்துக்கொண்டிருக்கிறாள்.
சரண்யா ஐ. சி.யூ வில் உயிருக்காக போராடிக்கொன்டு இருக்கிறாள்.
நம்ம வாழ்க்கைல நாம சந்திக்கிற ஒவ்வொருத்தரும் ஒருதொடர்ச்சியை தருவாங்க அடுத்துடுத்து அததான் மனிதச்சங்கிலினு சொல்லுவோம் அந்த மாதிரிதான் சந்தோஷ் சரண்யா சூர்யா ப்ரியானு எல்லாரும் அன்னைக்கு அந்த சங்கிலில இணைக்கப்பட்டாங்க நாம அவங்கள பத்தியும் அப்படி அவங்க ஏன் எதுக்கு இணைக்கப்பட்டாங்க என்றதையும் அடுத்த அத்தியாயம்(காளையின் புரிவு) வரை காத்திருப்போம்…….