The idea is multi-colored in Tamil Biography by Manimekala Moorthi books and stories PDF | எண்ணம் பல வண்ணம்

Featured Books
  • अनोखा विवाह - 10

    सुहानी - हम अभी आते हैं,,,,,,,, सुहानी को वाशरुम में आधा घंट...

  • मंजिले - भाग 13

     -------------- एक कहानी " मंज़िले " पुस्तक की सब से श्रेष्ठ...

  • I Hate Love - 6

    फ्लैशबैक अंतअपनी सोच से बाहर आती हुई जानवी,,, अपने चेहरे पर...

  • मोमल : डायरी की गहराई - 47

    पिछले भाग में हम ने देखा कि फीलिक्स को एक औरत बार बार दिखती...

  • इश्क दा मारा - 38

    रानी का सवाल सुन कर राधा गुस्से से रानी की तरफ देखने लगती है...

Categories
Share

எண்ணம் பல வண்ணம்

என்னவன் பற்றிய வரிகள்
மே மாதம் , 2019, மாத இறுதி நாள் என்னவன் என்னை பெண் பார்க்க வந்தான், அன்று எனக்கு தெரியவில்லை என் வாழ்கையில் சரி பாதி இவன் தான் என்று. நாட்கள் நகர்ந்து செல்ல , நாங்கள் இருவரும் ஜூன் 14, 2019 அன்று நிச்சயிக்கப்பட்டோம். மாதங்கள் கடந்து ஓடின......மூன்று மாதங்களுக்கு பிறகு செப்டம்பர் 11 , நாங்கள் கணவன் மனைவி அனோம்... ஒரு வார காலம் மட்டும் சொந்த ஊரில் இருந்தோம், பிறகு இருவரும் கோவை சென்றோம் அங்கு எங்களது வாழ்கையை இனிதாக தொடங்கினோம்........அங்கு இவனுடன் வாழும் அந்த நொடிகள் எத்துணை அழகானதாக இருந்தன.....அவனுக்கு நான் வைத்த பெயர் luna ..... அவன் எனக்கு வைத்த பெயர் veenus..... இருவரும் அன்புடன் ,காதல் கொண்டு இருந்த நாட்கள் நினைத்தால் இன்றளவும் தித்திகின்றன .... இப்படியே மாதங்கள் கடந்தன ஒரு சில காரணங்களால் மீண்டும் எங்கள் சொந்த ஊரான தோப்பூர் வந்தோம்......பிறகு எங்கள் அன்பின் அடையாளமாக ஒரு ஆண் மகனை பெற்றெடுத்த தருணங்கள் .....அத்துணை இன்பம் கண்டோம்........இதனால் என்னவனை விட்டு என் அம்மா வீட்டில் இருந்தேன், எவ்வளவு வேலைகள் இருந்தாலும் கால நேரம் பார்க்காமல் என்னை கான வருவான், இருப்பினும் அவனுடன் சென்று விட மனம் ஏங்கி கொண்டு இருந்தன....... விதியின் விளையாட்டு யார் செய்த பாவம் என்று தெரியவில்லை, என்னவனை பார்க்காமல் ஒரு மாத காலம் சென்றன.....அந்த ஒரு மாத காலத்தை கடக்க நான் பட்ட வலி, வேதனை, இவற்றை அந்த கடவுள் மட்டுமே அறிவார்.... ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம் போல் சென்றன.....அந்த நாட்களில் என்னவனை காண ஏங்கிய தருணங்கள் , எனதாக்கி கொண்ட என்னவனை அனைத்துக் கொள்ள தவித்த நொடிகள்,அவனது கரம் பற்றி , மார்பில் தூங்க தவித்த நிமிடங்கள் , இவை அனைத்தையும் வார்த்தைகளில் விளக்க முடியாது, இருந்தும் என்னவனை எனதருகில் உணர்ந்து கொண்டேன். எனக்கான ஒருவன் எனக்கான அனைத்தும் செய்தவன், என் இன்னல்களை தாங்கி கொள்ள முடியாமல் கண்ணீர் சிந்தியவன் என்னவன்........... நான் எதிர் பார்க்காத வாழ்கையை கொடுத்தவன் ....... நான் எவ்வளோ இம்சை செய்தும் மூகம் சுளிக்காமல் என்னை இன்றும் காதல் செய்பவன் .....அவன் என் மீது கொண்ட அன்பில் இன்றும் மாற்றம் கொள்ளதவன்.....இவனை போல் ஒரு ஆண்மகன் எனக்கு கணவனாக அமைய என்ன தவம் செய்தேன் என்று என்னை நெகிழ வைத்தவன்......இவனை போற்ற வார்த்தைகள் இல்லை இவன் மீது நான் கொண்ட காதலை இவனுடன் வாழ்ந்து தான் காட்ட வேண்டும்...... இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இவன் கைகளை மட்டும் பிடித்து கொண்டு இவனின் மனைவியாக வாழ அந்த ஆண்டவனை வேண்டுகிறேன்........நான் எவ்வளவு இம்சை செய்தாலும், எவ்வளவு கோவம் கொண்டாலும் என் அப்பாவை போல் என்னை முகம் சுளிக்காமல் எள் அளவும் வைத்திருந்த அன்பு, பாசம், குறையாமல்,என் மீது அதீத அன்பு கொண்டுள்ள ஒரே ஒருவன் என் கணவன் ❤️🤩😍🥰😘 என்றும் எனக்கான என்னவன்💞💘💖💕💞 இன்று இருவரும் இணைந்து இருக்கிறோம் எங்கள் வாழ்வின் அர்தமான, எங்கள் அன்பு மகன் , இவனை இந்த பூமிக்கு கொண்டு வருவதற்குள் இவன் தந்தை அனுபவித்த வலிகள் சொல்ல சொல்ல மாலாது...... எங்கள் அன்பு மகனிடம் இருந்து புது புது அனுபவங்களை தினம் தினம் அறிகிறோம்... அவன் மூலம் தினம் தினம் நாங்கள் தாய், தந்தை என்ற அர்த்தத்தை உணருகிறோம்,🤩என் திருமணததிற்கு முன்னாள் நிறைய பெண்களை பார்த்துள்ளேன் ஏதோ ஒரு வகையில் அவர்கள் வேதனையுடன் இருப்பார்கள், ஏன் எனக்கு நன்கு அறிமுகம் ஆன ஒரு பெண் அவள் வாழ்கை பற்றி கூறுவாள் அதை எல்லாம் கேட்கும் போது திருமணமே செய்து கொள்ள கூடாது என்று எண்ணிய நாட்களும் உண்டு...... இப்படி ஒரு வாழ்கை தேவையா என்று எண்ணியதுண்டு.....எங்கள் திருமணம் நிச்சயிக்கப்பட்ட அடுத்த நொடிகளில் இருந்து என் பயஙகள் நீங்கின ❤️ இன்றளவும் என்ன தேவைகள் பூர்த்தி செய்து என்னை ஒரு ராணி போல அன்புடனும, மரியாதையுடன், நீங்கா காதலுடன், பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள என் சரி பாதியாக என்னுடன் என் மன்னவன் இருக்கிறான்🌟💜 இப்படி ஒரு அழகிய வாழ்கையை அனுபவிக்க, என்னவன் கரம் பற்ற காரணம் என் தந்தை அவருக்கு வெறும் நன்றி சொன்னால் ஈடு இணை ஆகாது ........🙏🙏🙏 இப்படி ஒரு அழகிய நாட்களை மலர செய்யும் என் அண்பானவன் என்றும் மகிழ்ந்து , சந்தோசம் கொண்டு, மன நிம்மதி பெற்று வாழ உலகில் உள்ள அத்துணை இறைவனையும் வேண்டிக்கொள்கிறேன்..... நித்தம் நித்தம் நிம்மதி பெற்று என்றும் குறையா அன்புடன் , காதலுடன், என் மன்னவன் கரம் பற்றி, அவன் அருகிலே வாழ ஆசை,,👨‍❤️‍💋‍👨👩‍❤️‍👨👨‍👩‍👦 தினம் தினம் செல்ல சண்டை கொண்டு , ஒரு சின்ன அனைப்புடன் , ஒரு செல்ல முத்தம் இட்டு கொள்ள ஆசை என்றும் என் கணவன் இருக்கதில் 🤩🥰😍😘.........................