a forgotten path in Tamil Poems by Godson Danny books and stories PDF | பாதை மறந்த பயணம்

Featured Books
Categories
Share

பாதை மறந்த பயணம்

பாதை மறந்த பயணம்

சித்திரந் தீர்த்த சிறு வானம் போல

சிவந்து நிற்கும் உன் கண்ணங்கள்

என்னை வர்ணத்தின் வனப்பை வர்ணிக்க வைக்குதடி,

தீண்டாத உன் தேகங்களும்

தீராத என் தாகங்களும்

பாராமல் போகும் உன்

கடை விழி பார்வைக்காக ஏங்குதடி,

உன் கண்ணம் கண்ட

என் இதழ்களும் வாசிக்குமே

முத்த கீதங்களை...

உன் விழியோரம் வடிந்தொழுகும்

ஒரு துளி நீரும்

பேராற்றல் பெற்று ஆழியையே அடக்குமடி,

உன் சின்னஞ்சிறு செவ்விதழைத் தொட்டுச் செல்லும்

மழை துளி கூட மண்ணைத் தொட யோசிக்குதே,

நான் மட்டும் எப்படி?

நான் மழை துளியன்று,

உன் உயிர் துளி...

கடற்கரையோரம் தன்னந்தனியாக

என் கால்கள் போகிறது

நீ என் துணையாகும் நாளை நோக்கி,

நீ என்னோடு இல்லாமையால்

தொலைவில் தெரியும் கதிரவனும்

தூங்கச் செல்கிறான் கோபத்தோடு,

வெளிச்சம் குறைய வேதனை பெருகியது

இங்கு நான் மட்டும் தனியே

புது விடியல் வருமென்ற நம்பிக்கையோடு,

அவ்விடியல் உன்னோடிருக்கட்டும்...

என் தீராத தேவையெல்லாம்

தெளிவாக நான் உரைக்க

உன் நன்ச்சொல் நாடி வந்தானே !

இந்த ஏழை எதிர்பார்ப்பாளன்

தாகம் தீர்க்கும் அமுது நீ என்றெண்ணி,

வேரோடு விளையாடும் வீரமிக்க மண் போல

என் மறத்தோடு மல்லுகட்டும்

மான் விழி கொண்டவள் நீ !

வானவில்லின் வர்ணம் கூட

வளைந்நு கொடுக்கும் – எங்கு

உன் ஒப்பற்ற விழி நீர்- அதன்

நிறத்தை கரைத்து விடுமோவென்று ... ... ....

என் செவியோரம்- உன்

சொல் மழை பெய்யக் காத்திருக்கிறேன்,

அது கல் மழையோ அல்ல பனி மழையோ

நானறியேன் ....

உன் விருப்பம் ...

சிலரின்,

கேளாத காதும் மீளாது தவிக்கும்

உன் வாய்மொழி கேட்டால்,

உன் இதழின் இறுதி

என் தொடக்கமாக அமையும்,

பேசாத வண்ணம் பிணமாகி நின்றேன்

உன் பார்வை என் மீது பட்டவுடன்,

அந்த நட்சத்திரக் கூட்டமும்

நயமாய் சிரிக்கிறது,

மினுக் மினுக் என்று...

உன் புன்னகை கண்ட பொழுதை நினைத்து...

இறைவன் ஒதுக்கிய பலவற்றுள்

செதுக்கிய சிலை போல திரிபவள் நீ,

அவன் உன்னை இங்கு விட்டு விட்டு

அங்கு தனியே தவிக்கிறான்,துணையின்றி!

இறைவன் இயற்றிய உயிர்பா நீ!

உனை தேடி பயில விருப்பமுற்றேன்,

நீயோ பல்கழைக்கழகம் முடியவில்லை மூர்ச்சையுற்றேன்...

பல நேரங்களில்,

உன் புன்முறுவல் கண்டு

என் மனக்குமுறல் அடங்கிற்று,

நீ என் நிஜத்தில் நின்றவள்

நான் உன் நினைவில் நிற்க முயன்றவன்....

உன் உதட்டுச் சாயம் கொண்டுதான்

அந்தப் பச்சைக் கிளியும் தன்

அலகை அழகு செய்யும், கொஞ்சம் பொறாமையோடு!

அந்த விண்மீன் கூட விலை பேசும் உன் வனப்பை

வானம் கொண்டுச் செல்ல,

எம்மீனும் அங்கு சமமில்லை

உன்னோடு எதிரனியாய் போட்டியிட,

அந்த ரோஜா இதழும் இடறி விழுந்தது

உன் இதழின் இனிமை கண்டு,

பாவி இதழ் என்ன செய்யும்

உன்னைக் கோபித்து தன் இருப்பிடம் இழந்தது,

சேர வழியில்லை வேறு வழியின்றி மண்ணில் மடிந்தது....

என் உடலொன்றுமில்லை

உன் உயிர் முன்னே !

என் சதையறுத்தேன் – உன்

சம்மதம் கேட்க ... மறுத்து விட்டாய்

மணமுடைந்தேன்.....

உன் சுடுஞ்சொல்லும்

எனக்கு தேனமுது...

அது தித்திகிகுது !

என் வீர விழி கூட

உன் பேதை முழி கண்டு

பாதை மறக்குமடி

என் அணிச்சைகளும் அணி திரண்டு

உன் அழகை ரசிக்குமடி....

உன் இமை என்னும் ஈட்டி

என்னை குறி பார்க்குதே

சொல்லால் சுடவா - அல்ல

உன் விழி விரித்து

புன்முறுவல் காட்டாவா ...

உன் புன்னகை ஒன்று போதுமடி

புனர்சென்மம் காண்பதற்கு ...

மறுசென்மம் வேண்டும்

உன்னோடு மட்டும் ...

என் பாதை போய் சேருமுடம்

உன் பதம் பட்ட இடமாய்

இருக்க வேண்டும்...

உன் கரம் பிடித்து,

கால்-நடையாய் – உலகின்

கடைக்கோடிவரை செல்ல வேண்டும்...

நீ இன்றி – நான்

வாழ வழியின்றி இவ்வயகத்தில்

அலைந்து திரிகிறேன்

அந்த வானும் மண்ணும் – வேண்டுமென்றே

வலைந்து கொடுக்கும் – உன்

பார்வை என்னும் வலையில்

சிக்கிக்கொள்ள ...

அந்த சீனப் பெருஞ்சுவரும்

சிரையெடுக்கத் துடிக்கும் – உன்

சிவந்த கண்ணங்களை ...

ஏறும் வெயிலும் இதமாய் சுடும் – உன்

உதய தேகங்களை...

உன் புருவமும், புன்னகையும் கண்ட நான் – உன்

முழுமதி முகம் பார்க்க மட்டும் ஏனோ மறந்து விட்டேன் ...

ஆதலால், மதியிழந்து மயக்கமுற்றேன்! -அதை

பார்க்க விருப்பமில்லை,

தேடும் தேவையில்லை,

தேடியும் பயனுமில்லை...

உன் நீதி ஒன்று உள்ளது – அது

நேர்மை இழந்தது

ஆதலால்,

உனை நிதம் நினைக்கும் மணம் வேண்டாம்..

நினைவலைகள் வேண்டாம் – அதில்

சிக்கிக்கொல்வேன் – என்

பாதை பார்த்து பயணிக்கிறேன் !

பாமரர்க்கு பயன்படட்டும் என்று நினைத்து...

மாண்டவர்க்கு மலர் தொடுப்பார்கள்

உனக்கும் கொடுத்தேன்,

மறப்பதற்க்காக...

உன் நிந்தனை நிரலை படித்துப் பார்த்தேன்

மனம் நீர்த்துப் போனது,

உன்னை நிந்திக்க நினைக்கவில்லை

நீ அறிந்தது நானில்லை ...

இப்படிக்கு,

பேதை விழி பார்த்து பாதை மறந்தவன்

என் மனதை ஏமாற்றிய என்னவளுக்கு,

ஆம் என் இனியவளுக்கு........