DAD'S ARE ALWAYS LIER'S - 1 in Tamil Fiction Stories by Pramila books and stories PDF | DAD'S ARE ALWAYS LIER'S - 1

The Author
Featured Books
Categories
Share

DAD'S ARE ALWAYS LIER'S - 1

அன்று அந்திமாலை 6.00 மணி. அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் வேளை , மனமானது சற்று ஓய்வுக்காக ஏங்கிக் கொண்டு இருந்தது. எனது அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பும் எண்ணத்தில் எனது பையை எடுத்தேன், பின்னிருந்து ஒரு குரல் " அசோக் இரு " நான் திரும்பிப் பார்க்க என்னோடு பணிபுரியும் கதிர் அங்கு நின்றுகொண்டு இருந்தான். "அசோக், சார் உன்னை கூப்பிட்டார் " என்றான். நான் சார் அறையின் கதவை தட்டி, " மே ஐ கம், சார் " என்றேன். அவர் " அசோக் நான் உங்களிடம் கொடுத்த வேலை என்னாச்சி ? " என்றார். அதற்கு நான் " முடிந்தது சார் " என சில காகிதங்களை அவர் முன் நீட்டினேன். அப்பொழுதும் அவர் என்னை விடுவதாக இல்லை. சார் கூரிய வேலைகளை முடிக்கும் போது மணி 8.00 , வீடு சென்று சேரும் போது மணி 8.30. வீட்டிற்கு சென்று கதவை தட்டினேன் , எனது மனைவி தனு கதவை திறந்தாள். ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக அவளது முகம் இருந்தது. வருத்தத்தோடு கலந்த கோபமும் அவள் முகத்தில் தெரிந்தது.

ம்ம் நான் என் குடும்பத்தைப் பற்றி இன்னும் சொல்லவில்லையே, எனது குடும்பம் ஒரு குட்டிக் குருவிக் கூடு அதில் நான், தனு , என் அப்பா விக்ரம், என் தம்பி கிருஷ்ணா , எனது குட்டி இளவரசி மகா என எப்பொழுதும் ஐந்து சிட்டுக் குருவிகள் தன் சிறகுகளை அடித்துக் கொண்டிருக்கும். சின்னதாக இருந்தாலும்கூட இந்த கூட்டில் ஆரவாரத்திற்கு குறைவு இல்லை. இங்கு சண்டைகளும் உண்டு சமாதானமும் உண்டு. என்ன ? இல்லை, அப்படி நினைக்காதீங்க!! தான் தனு கூட சண்டை போடுறதா வாய்ப்பே இல்லை. சரி விடுங்க ஒத்துக் கொள்கிறேன் 😅 சின்ன சின்ன சண்டை வரும் ஆனால் ஒரு மணி நேரம் கூட இருக்காது. அப்படியே இருந்தாலும்கூட சமாதானப்படுத்த எங்கள் குடும்பத்தில் ஒருத்தர் இருக்காரே ... யாரு அப்படினுதான கேட்கிறீங்க வேறு யாரு என் அப்பா தான். என் அப்பா ஒரு சமாதான புறா சண்டைகளை தீர்ப்பது தான் அவர் வேலை , அதுவும் அம்மா எங்களை விட்டு சென்ற பிறகு அதுவே அவர் முழு நேர வேலையாக மாறி விட்டது.

அடுத்து என் அன்பு மனைவி தனு,, தனு பற்றி என்ன சொல்வது ,, எங்கள் திருமணம் காதல் திருமணம் இல்லை, ஆனால் நான் தனுவை காதலிக்காத நாளும் இல்லை. தனுவும் அப்படித் தான். ஆனால் அவளிடம் பிடிக்காதது ஒன்று உள்ளது. ( ஆனால் இதை அவளிடம் சொல்லாதீங்க 😅) அது என்னவெனில் தனுவுக்கு என்னை விட என் குடும்பத்தை தான் பிடிக்கும். இப்பொழுது உங்களுக்கு புரிந்ததா எனக்கு ஏன் தனுவை பிடிக்கும் என்று ..
அவள் கிடைத்தது என் அதிர்ஷ்டம்.

அடுத்து என் தம்பி கிருஷ்ணா ..
நாங்க வழக்கமான அண்ணன் தம்பி தான் ஆனால் கிருஷ்ணாவை அனைவருக்கும் பிடிக்கும் ( ஆனால் எனக்கு இல்லை, எனக்கு அவனை ரொம்ப ரொம்ப பிடிக்கும், நீங்க கிருஷ்ணா விடம் இதை சொல்லமாட்டீங்கனு நம்பறேன். ) கிருஷ்ணா இப்பொழுது தான் கல்லூரியில் படிக்கிறான். ஆனால் உங்களுக்கு தெரியுமா கிருஷ்ணாக்கும் எனக்கும் உரையாடல் அதிகமாக கண்களில் தான் நடக்கும்.

அடுத்தது மகா , அவள் எங்க வீட்டு குட்டி இளவரசி .....

ஆனால் தனு முகம் வாடக் காரணம் என்னவாக இருக்கும் ? என யோசித்தவாறே உள்ளே நுழைய நான் எண்ணியபடியே நடந்திருந்தது.

வீட்டின் உள் பெரும் அமைதி .....
நான் உள்ளே நுழைய , அப்பா என்னைப் பார்த்தார் " என்னால் முடியாது என்னை விட்டுவிடு " என்று கூறியவாறு தனது அறைக்கு சென்று விட்டார்.
ஜன்னல் அருகே நின்று கொண்டு செல்போனில் பேசிய படியே கிருஷ்ணா என்னைப் பார்த்தான் , பிறகு என்னை நோக்கி ஒரு புன்னகையை வீசினான். அதற்கு அர்த்தம் எனக்கு தெரியும். ' இன்று நீ என்ன செய்கிறாய் என்று நானும் பார்க்கிறேன் , ' என்பது தான் அதன் அர்த்தம். பின் நான் திரும்பி எனது மனைவி தனுவை பார்க்க , அவள் என்னிடம் " என்னை எதற்கு பார்க்கிறீங்க , இந்த முறை நான் கண்டிப்பா மன்னிப்பு கேட்க மாட்டேன். நீங்க என்ன சொன்னாலும் சரி " என்று சொல்லி விட்டு அவளும் அறைக்கு சென்று விட்டாள்.

இப்பொழுது உங்களுக்கே பிரச்சனை என்னவென்று புரிந்திருக்கும். தனு எப்பொழுதும் என்னிடம், " எனக்கு என் மாமியார் அம்மா மாதிரி , அதனால் எனக்கு மாமியார கடவுள் மகளா அனுப்பி இருக்காரு " என்று சொல்வாள். என் மகள் மகாவும், எனது மனைவி தனுவும் எப்பொழுதும் எலியும் பூனையும் தான். 😅நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க இது எப்போதும் நடப்பதுதான் ...

********
To be continued

அட .... இருங்க உங்க குடும்பத்திலும் இது மாதிரி சண்டைகள் வருமா ? அப்படி வந்தால் யாருக்கு இடையில் வரும் ... இதேபோல் இருவருக்கிடையில் நீங்களும் மாட்டிக்கொண்டு விழித்து இருக்கிறீர்களா.... review வில் சொல்லிட்டு போங்க....