திருப்பம்
பரிமளா அப்போது தான் பத்தாவது முடித்திருந்தாள். அந்த காலத்தில் பள்ளிக்கூட படிப்பு முடித்தாலே மிக பெரிய விஷையம். அவள் மிக்க மகிழ்ச்சியில் இருந்தாள்
பால்வடியும் முகம், மயிலழகு, அன்ன நடை. இளமை ஊஞ்சல் ஆடும் பர்வம்
அவள் உதட்டில் எப்போதும் ஓர் சிறு புன்னகை இருக்கும். அவள் எப்போதும் கலகலப்பாக இருப்பாள்.
அந்த காலத்தில் பிளஸ் 2 படிக்க, காலேஜ்க்கு தான் போகணும். அவள் விஞ்ஞானம் படிக்க தேர்ந்தெடுத்திருந்தாள் .
அந்த நேரத்தில் தான் முகேஷும் அறிமுகமானான். அவன் வட்ட சதுர முக அமைப்பில், வாட்டசாட்டமாக அழகாக தோத்தமளித்தான் . அவர்களுக்குள் ஓர் இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டது. இது வரலும் அப்படியொன்றும் தோன்றவில்லையே என்று நினைத்தாள்.
இவனை பார்த்ததில் இருந்து ஏதோ ஒரு சலனம் மனசுக்குள் ஏற்பட்டது.
தான் ஏன் இவனை பற்றியே நினைக்கிறோம் என்று அவளுக்கு புரியவில்லை.
அடிக்கடி அவனிடம் தனியாக சந்தித்து பேச மனம் ஏங்கியது. படிப்பில் கவுனம் தவறியது. அவனை நினைக்கையில், அவள் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் வட்டமிட்டு பறந்தது. அவள் மனம் ஏனோ திறக்கிறது, சிறகடித்து பறக்கிறது என்று அவளுக்கு ஒன்றும் தலை கால் புரியவில்லை. அவள் தன்னை கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டாள். ஆனால் ஒன்றும் பயனில்லாமல் போய்விட்டது.
அவனை பார்க்கும்போதெல்லாம் பரிமளாவுக்கு ஓர் சிலிர்ப்பு ஏற்பட்டது .
மீண்டும் மீண்டும் சந்தித்து பேசணும் என்ற ஓர் ஆர்வம் அவளை ஆட்டி படைத்தது.
அவள் வீட்டில் அவள் ஒரே வாரிசு. என்பதால் மிக செல்லமாக வளர்ந்து வந்தவள். அவள் தந்தை. பல வருஷங்களுக்கு முன்னே காலமாகியிருந்தார். அம்மா தான் அவளை படிக்க வைத்து ஆளாக்கினார்கள் .
அவள் பசுமை நிறைந்த ஓர் கிராமத்தில் தான் குடியிருந்தாள். அதிகாலையில் மரக்கிளைகளில் கிளிகளின் ரீங்காரம் சுவாரசியமாக இருந்தது. அப்பப்ப வீசும் ஜில் என்ற இளம் தென்றல் அவள் மனதுக்கு இதமூட்டியது. வண்ண வண்ண பூக்களின் நெறுமணம் ஊரெங்கும் பரவியது.
பரிமளா மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தாள். அவள் உட்சாகத்தில் ஆறாடினாள்.
ரம்யா அவள் உற்ற தோழி. தன் பிரச்சினனையை ஒரு நாள் தோழோயிடம் சொன்னால் என்ன என்று அவளுக்கு தோன்றியது.
சொல்லிடலாம் என்றே ஒரு நாள் முடிவெடுத்தாள். ரம்யா அதிர்ந்து போனாள்
என்ன பண்ணுவது, ஏது பண்ணுவது என்று அவளுக்கும் தலை கால் புரியவில்லை. அப்போது தான் ஓர் சினிமா தியேட்டரில் 16 வயதிலினிலே படம் ஓடிக்கொண்டிருந்தது. தற்பொழுது ரம்யாவுக்கு ஓர் யோசனை தோன்றியது,
பரிமளாவை அந்த படம் பார்க்க அழைத்து செல்வோம் என்று. ஏற தாழ பரிமளாவின் கதை போன்ற தான், அந்த படவும் அமைந்திருந்தது. அந்த படத்தின் நாயகி உலக அழகி. ஒரு நாள் அந்த கிராமத்துக்கு ஓர் டாக்டர் வந்து சேர்கிறார். வந்த இடத்தில நாயகியை சந்திக்க நேர்கிறது. முதல் சந்திப்பிலேயே அவர் அவளை அடைய திட்டவட்டமாக திட்டமிடுகிறார். பல முறை சந்தித்ததில் நாயகியும் அவனிடம் நெருக்கமாகிவிடுகிறாள். ஒரு நாள் தன் சேவலுக்கு வைத்தியம் பார்க்க போகிற சாக்குபோக்கு அம்மாவிடம் கூறி, அந்த டாக்டர் வீட்டுக்கு நாயகி செல்கிறாள் . அவன் அந்த சந்தர்பத்தை தனக்கு சாதகமாக பயன்ப்படுத்திக்கொள்கிறான். அவனிடம் தன்னை இழந்து நாயகி தடுமாறுகிறாள்.
வந்த வேலை முடிந்தது என்று, அடுத்த நாள் காலையில் அவன் அவளிடம் சொல்லாமல் கொள்ளாமல் இடம் காலி பண்ண முற்படுகிறான். யாரோ ஒருவர் அவன் ஊரை விட்டு குதிரை வண்டியில் அதிவேகமாக செல்வதாக தகவல் அவளிடம் சொல்கிறார். அவள் அவனை தேடி நெட்டோட்டம் ஓடுகிறாள்
கொஞ்சம் நில்லுங்க , நான் சொல்லுவதை கொஞ்சம் கேளுங்க என்று நாயகி கதறுகிறாள்.
அவன் எதுவும் காதில் வாங்கிக்கொள்ளாமல். எனக்கு நீ வேணாம், உன் பதினாறு வயது தான் வேணும் என்கிறான். வண்டியை மேலும் வேகமாக செல்ல ஆணையிடுகிறான். அவள் உடம்பெல்லாம் அதிர்ச்சியின் மின்சாரம் பாய்கிறது. அந்த வண்டியில் அவன் மட்டும் போகவில்லை.அவள் வாழ்க்கையும் சீரழிந்து பறி போகிறது. அவளுக்கு ஆறுதல் கூறுவதற்க்கோ, அடைக்கலம் தரவோ யாரும் முன் வரவில்லை. அவளுக்கு ஆகாயமே தலையில் இடிந்து வீழ்ந்தது போல் தோன்றியது.
பட்ட அவமானம் தாளாமல் நாயகியின் அம்மாவும் இறந்து போகிறாள்.
அவள் வாழ்க்கையில் எல்லாத்தையும் இழந்து தன்னந்தனிமையில் தனிமரமாக
நிற்கிறாள்.
அந்த படத்தின் கதையும் கிட்டத்தட்ட பரிமளாவின் நிஜ வாழைக்கை போன்றவே இருந்தது என்பதால் மீதி சினிமா பார்க்க இயலாமல் இருவரும் வீட்டுக்கு திரும்புகிறார்கள்.
இந்த கதையின் வில்லன் போன்ற, உன் காதலனும் பண்ணமாட்டான் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் உன் தரப்பிலும் ஓர் முடிவு எடுப்பதற்கு முன் நீ நிறைய யோசிக்க வேண்டியிருக்கு, இது உன் வாழ்க்கை பிரச்சென்னை
எடுத்தோம் கவுத்தோம் என்று, முடிவுகளை கண்மூடித்தனமாக எடுக்க முடியாது. குண்டூசி இடம் கொடுக்காமல் எந்த நூலும் நுழைய முடியாது.
உன் முடிவில் தான் உன் எதிர்காலமே இருக்கிறது.
இது மட்டும் தான் நான் உனக்கு சொல்ல முடியும். மீதி உன்
விருப்பம். என்று ரம்யா பரிமளாவிடம் கூறினாள்
முதல்படியாக, முகேஷை மேலும் சந்திப்பதை பரிமளா தவிர்த்தாள்.ஆற அமர தீர்கமாக யோசித்ததில், தோழியின் சொல்லிலும் நியாயம் இருக்கு என்று பரிமளாவுக்கு மனதின் அடித்தறையில் ஆழமாக பதிந்தது. படிப்ப்பில் கவுனம் செலுத்தினாள். முடிந்து போனதெல்லாம் கெட்ட கனவாக நினைத்து மறக்க முயன்றாள். தலைக்கு வர இருந்தது தலைப்பாவோட போச்சு என்று பெரும்மூச்சிரைத்தாள்.கண்ணில் தட்ட இருந்தது புருவத்தில் தட்டிச் சென்றது என்று நிம்மதி அடைந்தாள்.
ரம்யா மட்டும் இல்லை என்றால், தானும் படுகுழியில் வீழ்ந்திருப்போம் என்று எண்ணினாள். படிக்க வேண்டிய வயதில் படிப்போம் என்று அழுத்தந்திருத்தமாக ஓர் நல் முடிவுக்கு வந்தாள். ஏதோ ஓர் கலவரம் நடந்து முடிந்து ஓய்ந்தது போல் அவளுக்கு தோன்றியது. தன் தோழி ரம்யாவுக்கும், கடவுளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தாள்.
வாழ்க்கையில் துன்பப் துயரங்கள் வரும் பொழுது, வாடிக்கையாக வேடிக்கை மட்டும் பார்க்கும் உலகில் ரம்யா போன்ற ஓர் நல்ல தோழி அமைவதற்க்கும் கொடுப்பினை வேண்டும் என்று எண்ணினாள்.
அடுத்தவங்களை மட்டம்தட்டி பேசவும், சுட்டிக்காட்டவும் ஆயிரம் பேர் இருப்பார்கள். ஆறுதல் சொல்ல யாரும் இருப்பதில்லை என்பதை பரிமள உணர்ந்தாள்.
தன் தோழியின் அருமை அப்போது தான் அவளுக்கு புரிந்தது
முற்றும்