House rent in Tamil Motivational Stories by c P Hariharan books and stories PDF | வீட்டுக்கு வீடு வாசப்படி

Featured Books
Categories
Share

வீட்டுக்கு வீடு வாசப்படி

வீட்டுக்கு வீடு வாசப்படி

தொலகாப்பி ராஜாதி ராஜாவாகத் தான் வாழ்ந்து வந்தான். அவன் கூஜாவில் இருந்து காபியை அருந்தினான். அவன் தினசரி

ஒரு கூஜா காபி சாப்பிடுவான். அது ஓர், ஒரு லிட்டர் கூஜா.

காபி சாப்பிடுவது அவனால் முற்றிலும் தவிர்க்க முடியாததில் ஒன்று. அப்புறம் ஒரு மாம்பழத்தையும் சாப்பிட்டு, தண்ணீரையும் அருந்தினான். மாங்கா மடையன் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது. சாப்பிடுவதற்கும் ஒரு வரைமுறை வேணடாம. அவருக்கு இரண்டு ஆண்பிள்ளைகளும்,இரண்டு பெண்பிள்ளைகளும் இருந்தார்கள்.

அவன் ஒரு பிராபர்ட்டி டீலர்ஆக இருந்தான். அவன் ஓர் எல். ஐ.

ஜி. வீட்டில் தான் குடி இருந்தான். வீட்டு பக்கத்தில் நிறைய இடம் இருந்ததால்,

அத்துமீறி இன்னும் இரண்டு எல். ஐ. ஜி கட்டிடங்களை கடட்டிக்கொண்டான்.

இன்னும் ஓர் எல். ஐ. ஜி. கட்டிடம் கூட கட்ட இடம் இருந்தது. அங்கேயும் ஒரு வீடை கட்ட அவன் முயன்றபோது தான், ரெசிடெண்ட்ஸ் நல கழகம் குறிக்கிட்டார்கள். யாருக்கும் பணிஞ்சு போகும் குணம் அவனிடம் இல்லை. தான் புடிச்ச முயலுக்கே மூன்று கொன்பு என்றிருப்பான்.

ஏனோ தானோ என்று தான் பணி புரிவான். ஒரு வேலையும் ஒழுங்காக சைய்யமாட்டான். வெட்டியாக பேசி நேரத்தை வீணடிப்பான்.

அவன் வீடு கிரௌண்ட் பிளோரில் தான் இருந்தது. எல்லா அறைகளிலும் எ. சி. இருந்தது என்பதால் ஜன்னல்கள் எப்பவும் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. அவனுக்கு காஷ்மீர் முதல் தென்குமரி வரலும் ஏகப்பட்ட வீடுகள் இருந்தன.

அதை அவனுக்கு சமாளிக்கவும் இயலவில்லை. அவன் வீடுகள் வாடகைலயில் இருக்கிறதா இல்லை, காலியாக இருக்குதா என்பது கூட சில நேரங்களில்

அவனுக்கு தெரியாமல் தடுமாறினான்.

வீட்டு முற்றத்தில் ஓர் பலா மரமும் இருந்தது. அந்த பலா மரமும் தன்னுடையது என்று கூறி, சக்க போடு போடு ராஜா என்ற போல், சக்க போடு போட்டு, கும்மி அடித்து கும்மாளம் போட்டான்.

அந்த பலா மரத்தில் ஏகப்பட்ட பலாப்பழமும் காய்ச்சு கனிந்திருந்தது. என்றாலும் அதை யாரிடமும் பகிர்ந்துகொள்ள அவனுக்கு மனமில்லை. அவன் ஆணவத்துக்கும், திமிருக்கும் எல்லை இருக்கவில்லை. அவன் சுயநலமாகவும், சுய உறுதியாகவும் தான் வாழ்ந்து வந்தான்.

பக்கத்து வீட்டு பவித்ராவுக்கு, அவர்கள் மீது ஏகப்பட்ட பொறாமை ஏற்பட்டது. தன் கணவர் ராஜேஷுக்கு ஏனோ தானோ என்று ஒரு வேலை தானே இருக்கிறது. எந்த வகையிலும் அவங்களை கடைபுடிக்க முடியவில்லையே. தனக்குனு சொந்தம் என்று சொல்லிக்கொள்ள ஒரு வீடோ வாசலோ என்று ஒன்றும் கூட இல்லையே என்று வருந்தினாள். இருக்கிற ஒரு வீட்டிலும், வாடகைக்கு தானே இருக்கிறோம்.இப்படி எவ்வளவு நாள் தான் குண்டு செட்டில குதிரையோட்டி காலத்தை கழிப்பது என்று அவளுக்கு தோன்றியது.

ஒரு பக்கம் பிராபர்ட்டி டீலர் என்றால், மறுபக்கம் குடியிருக்கிறவர்கள் நடக்கிற விதத்தை பார்த்தப்பவே, அவங்க அரசாங்க வேலையில் தான் இருக்கக்கூடும் என்று எண்ணினாள்.

இருக்கிறவங்களுக்கு எல்லாம் இருக்கு. இல்லாதவர்களுக்கு ஒன்றும் இல்லையே. அது தானே கடவுளின் கணக்கிடும் என்று நினைத்து வருந்தினாள்.

அப்போது தான் ஒரு யோசனை அவளுக்கு தோன்றியது. தன் வீட்டு பக்கத்திலும் நிறைய இடம் இருக்கே. கொஞ்சம் செடிகளையாவது நடுவோம் என்று. காலப்போக்கில் நட்ட செடிகள் பெரிய மரங்களாக வளர்ந்து நிழற்குடை தந்தது. அதன் குளிரலை மனதுக்கு இதமாக இருந்தது. அப்படி இருக்கும்போது தான் ஒரு நாள் வீட்டை காலி பண்ண சொல்லி வீட்டு சொந்தக்காரரின் தகவலும் வந்தது. வீட்டை காலி பண்ண ஒரு மாதம் அவகாசம் கொடுத்திருந்தார். இதுநாள் வரலும் நாய் படாத பாடு பட்டோம். தன் முயற்ச்சிகள் ஒன்றும் குறிப்பிடத்தக்க பலனை அளிக்கவில்லையே என்று வருந்தினாள். துன்பங்கள் வரும்போது, கண நேரமும் யுகமாகத்தான் தெரிகிறது. அவளுக்கு என்ன பண்ணுவத்து ஏது பண்ணுவது என்று ஒன்றும் தலை கால் புரியவில்லை. வாழ்க்கையில் துன்பத் துயரங்கள் தொடர் கதை போல் நிகழ தானே செய்கிறது, அதிர்ந்து நின்றால் எதுவும் சாதிக்க இயலாது என்று எண்ணினாள். அலைகள் ஓய்ந்து சமுத்திரத்தில் முங்கலாம் என்றால்,அது நடக்க கூடிய காரியம் இல்லையே என்று நினைத்தாள். ஏதேதோ எண்ணங்கள் மனதில் அலைகழித்தது. நாளுக்கு நாள் பதட்டமும், பயமும் அதிகரித்தது

எல்லோரும் கட்டிடங்களை கட்டும் காலத்தில், அவள் மட்டும் மரங்களை வளர்த்து மகிழ்ச்சியை அடைய வேண்டிய கட்டாயம் அவளுக்கு இருந்தது.

ஏசீ இல்லாமல் கொஞ்சம் குளிராகவாது இருக்கும் என்று எண்ணினாள்.

சுக்குநூறாக இருக்கும் அவ்வேளையில் தான் "வேண்டுவதை தந்திட வெங்கிடேசன் என்றிருக்க, வேண்டுவது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா" என்ற பாட்டின் வரிகளும் நாபகத்தில் வந்தது. நினைப்பதெல்லாம் நடக்காவிட்டாலும், ஏதாவது கொன்சமாவது, தான் நினைத்தபடி நடக்க கூடாதா என்று ஏங்கினாள். நடந்ததயே நினைத்திருந்தால் நடக்க வேண்டியதும் நடக்காமல் போகும் என்று நினைத்தாள். ஒரு நாள் இல்லையென்றால் ஒரு நாள் தன் வாழ்விலும் ஓர் சூரியோதயம் இல்லாமலா போகும் என்று எண்ணினாள். எல்லோரிடமும் இயல்பாக, கலகலப்பாக கலந்து பேசும் மனப்பான்மை அவளுக்கு என்றும் இருந்தது. அதனாலேயே வாழ்க்கையில் நிகழும் துன்பதுயரங்களை அவளுக்கு சுலபமாக ஓரளவுக்கு சமாளிக்க முடிந்தது.

வாடகைக்காக வேறு வீட்டை தேடினாள். மிகவும் சிரமப்பட்டு கடைசியில் கொஞ்சம் தொலைவில் ஓர் வீடு கிடைத்து விட்டது. புது கிராமம், இடம் மாற்றம் மனதுக்கு கொஞ்சம் ஆறுதல் அளித்தது. அந்த கிராமத்தில் இயற்கையின் அமைப்பு சுவாரசியமாக இருந்தது.முந்தி மாதிரி பெரிய தோட்டம் பண்ணாமல் மிகவும் தேவையான சிறிய ஒரு துளசி மாடமும், அதை சுற்றி கொஞ்சம் கருவேப்பிலை, கொத்தமல்லி போன்ற சில செடிகளை மட்டுமே நட்டாள். சொந்தமாக புது வீட்டை ஒன்று வாங்கும்போது, விளாவாரியாக, பெரிதாக ஒரு பூந்தோப்பையே அமைத்துக்கொள்வோம் என்று திட்டவட்டமாக திட்டமிட்டள். தானும், ராஜேஷ் கூட கூடமாட ஒற்றுழைத்தால் மட்டுமே, வீடு வாங்கும் அவள் கனவும் பலிக்கும் என்று எண்ணினாள்.

டைலரிங் பயிற்சிக்காக ஒரு தனியார் நிறுவனத்தில் சேர்ந்துகொண்டாள்.

மூன்று மாதங்களில் அந்த தொழிலை நன்றாக கற்றுக்கொண்டாள்.

அப்புறம் வீட்டிலிருந்தே தைய்யல் பணியை செய்து வந்தாள். கூடிய சீக்கிரம் ஒரு திறமையான டைலர் தலைவி என்ற பெயரை எடுத்தாள்.

முதலில் கொஞ்சம் இடைஞ்சல் இருந்தாலும், பின்னாடி அவள் வியாபாரம் எதிர்பார்ப்புக்கும் மீறி நன்றாக ஓடியது. அவள் ஒரு தனியார் நிறுவனமே ஆரம்பித்துவிட்டாள்.

புது புது டிசைன்களில் ஆடைகள் தைத்து கொடுத்தாள்

பத்து பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து, உன்மையாக உழைப்பவர்களுக்கு தகுதிக்கு தகுந்தாற்போல ஊதியமும் தந்தாள்.

அந்த நிறுவனத்தை அமோகமாக நடத்தி வந்தாள்.

வீடு வாங்கும் அவள் கனவும் நிஜமாகி விட்டது. அவளின் கடுமையான

உழைப்பும், தன்நன்பிக்கையும், கடவுள் மீது இருந்த நன்பிக்கையும்

அவளுக்கு கை கொடுத்தது. தன் உழைப்பில் மட்டுமே கவுனம் செலுத்தினாள். ராஜேஷுக்கும் வேலை மாற்றமும், பதவி உயர்வும் ஒருசேர கிடைத்துவிட்டது. பவித்ராவுக்கு நடந்தது எதுவும் நம்ப முடியவில்லை. அவ்ளுக்கு வாழ்க்கையே ஓர் புரியாத புதிர் போன்ற தோன்றியது. அன்று எப்படியெல்லாம் அவதிப்பட்டோம் என்று அசை போட்டு பார்த்தாள்.

யாரிடமிருந்தும், எந்தவித உதவியும் இல்லாமல். சொந்தம் உழைப்பில் மட்டுமே வாழ்க்கையில் முன்னுக்கு வந்தது பவித்த்ராவுக்கு மிக்க மகிழ்ச்சியை தந்தது. அவளுக்கு பெருந்தென்மையாகவும் இருந்தது.

அவள் ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேற்றிக்கொண்டாள். அவளுக்கு மனநிறைவு ஏற்பட்டது. மேலும் கடுமையாக உழைப்பதில் தீவிரமாக இருந்தாள்.

அப்போது தான் கேரளாவிலும் வெள்ள பெருக்கு, எந்த விதமான முன் ஏச்சரிக்கையுமின்றி வந்து சேர்ந்தது.

கேரளாவில் எத்தனை வீடுகள் அவருக்கு சொந்தமாக இருக்கு என்றே தெரியாதபோது, எந்த வீட்டில் தண்ணீர் வந்தது, வரலை என்று, எப்படி தொலகாப்பிக்கு தெரிய போகுது ? எத்தனை வீடுகள் குடிமுழுகி போச்சு என்றும் தெரியவில்லை.

நேரில ஒரு முறை போய் பார்த்திட்டு தான் வந்துவிடுவோம் என்று கூட அவருக்கு தோன்றவில்லை. கேரளா போய் வருவதற்கும் பணம் செலவாகும் என்று எண்ணி அப்படியே குத்துக்கல் போன்ற இருந்துவிட்டார். கஞ்சத்தனம் என்றால் அப்படி ஓர் கடுமையான கஞ்சத்தனம்.

நிறைய பேர் குடி தண்ணீர் கிடைக்காமலேயே உயிர் இழந்தார்கள்,என்றால், இன்னும் சிலர் தண்ணீர் அதிகமாக குடித்தே உயிர் இழந்தார்கள். அதை பற்றியெல்லாம் அவர் கவலையே படவில்லை. யார் எப்படி எக்கேடு கெட்டு தொலைந்தாலும், வாடிக்கையாக வேடிக்கை பார்ப்பது அவர் பழக்கவழக்கங்களில் ஒன்று. அடுத்தவங்களும் வாழ்ந்திட்டு போகட்டும் என்று யாரும் நினைப்பதில்லையே.

கொஞ்சம் வீடுகளில் யாருக்காவது கொஞ்ச நாள் அடைக்கலமாவது கொடுத்திருக்கலாமே என்று கூட அவர் யோசிக்கவே இல்லை.

இப்படி கடுமையான கஞ்சத்தனத்தில் இருந்த போது தான் ஒரு நாள்

அவர் எ. டி. எமில் இருந்து நிறைய பணமும் பறிபோனது. பேராசை பேரழிவில் தான் முடியும் என்பார்கள். அது அவரை பொறுத்தவரலும் நூற்றுக்கு நூறு சரியாக தான் இருந்தது. இப்படி குருவி போன்ற சேர்த்து வைத்த பணம் அநியாயமாக கை நழுவி போனதே என்று வருந்தினார். அவரால் அந்த இழப்பை ஜீரணிக்க முடியவில்லை.

இப்படி பொறாமைப்பட்டு புலம்பிக்கொண்டிருக்கும் வேளையில் தான் தொலகாப்பியின் மனைவிக்கு புற்று நோய் மூன்றாவது நிலையில்

முந்தியிருந்தது என்று பவித்ராவுக்கு தெரிய வந்தது. அப்போது தான் அடிமனதில் உரைத்தது நமக்கு பணம் இல்லை என்றாலும், ஆரோக்கியமாவது இருக்கே என்பது. வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போன்ற, எல்லோருக்கும் ஒரு வகை அல்லது மற்றொரு வகையில் துன்பதுயரங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதை நாம் புரிந்து கொள்ளாமல் அடுத்தவங்களை பொறாமையாக தான் பார்க்கிறோம் என்று நினைத்தாள்.

ஒரு நாள் தொலகாப்பியின் மனைவி கெமோதெரபிக்காக மருத்துவமனைக்கு சென்ற போது தான், ஏதேச்சையாக அவளை பவித்ரா சந்தித்தாள். பொறாமை அவளை விட்டு விலகியது.

தொலகாப்பியின் வாழ்விலும் சிறு திருப்பங்கள் ஏற்ப்பட்டது.

ஒரு நாள் தொலகாப்பியின் மனைவி, திடீர் என்று இறந்துவிட்டதாக தகவலும் பவித்ராவுக்கு வந்தது. பக்கவாட்டில், பக்க வாத்தியம் இல்லாமல் மர கிளைகளில் ஓர் வானம்பாடி சோக கீதம் பாடிக்கொண்டிருந்தத்து.ஆயிரம் தான் உதவாகறையாக இருந்தாலும், ஒரு காலத்தில் அவரகள் வீட்டுப்பக்கத்தில் குடியிருந்தோம் என்று நினைத்து பவித்ராவும் ராஜேஷும் தூக்கம் விசாரித்தார்கள். சில்லரை அதிகமாக சத்தம் எழுப்பினாலும், நோட்டும் ஒரு நாள் இல்லை என்றால் ஒரு நாள் கிழியும் என்பதை உணர்ந்தாள். வாழ்க்கையில், தென்றல் என்றும் ஒரே பக்கம் வீசாது என்பதை தொலகாப்பி புரிந்துகொண்டான். ஆரவாரமாக இருந்த அவன் வீடு ஏதோ ஓர் கலவரம் முடிந்து ஓய்ஞ்சது போன்ற வெறிச்சோடியது. அவன் எண்ணங்கள் எங்கெங்கோ சென்று அலை பாய்ந்தது. தன் மனதை நிலை நாட்ட தவித்தான்,துடித்தான். அக்கம் பக்கம் இருக்கிறவர்களிடம் கலந்து பேச முயன்றான்.

“வீட்டுக்கு வீடு வாசப்படி, விழையங்கள் ஆசைப்படி எங்கெங்கும் போராட்டம் தான் எல்லமே ஒன்றாட்டம் தான்“ யாரோ பாடியதும், பவித்ராவுக்கு நினைவுக்கு வந்தது.

முற்றும்

Author : C.P.Hariharan

e mail id : cphari_04@yahoo.co.in