மாமியாரின் டெக்னீக்
மரகதத்துக்கு ஒரே மகன் சேகர். சேகருக்கு இரண்டு வயது இருந்தபோதே. அவன் தந்தை மாணிக்யம் காலமாகியிருந்தார். அவன் அம்மா தான் அவனை படிக்க வைத்து அள்ளாக்கினார்கள். சேகரின் மனைவி மல்லிகா வீட்டை நிர்வாகம் பண்ணி வந்தாள். அவர்களுக்கு நான்கு வயதான ஓர் பெண் குழந்தையும் இருந்தது. அவள் பெயர் சரண்யா. மரகதமோ மல்லிகாவிடம் எப்போதும்
கடுமையாகத் தான் நடந்துகொண்டாள். எதுக்கெடுத்தாலும் ஏட்டிக்கு போட்டியாகவே பேசுவாள். காலையில் டிபினுக்கு கூர்ம பரோட்டா பண்ணலாம்
என்றால் இல்லை, சப்பாத்தியே பண்ணினால் போதும் என்பாள். இப்படியாக எதுக்கெடுத்தாலும் எதிர்மறையாகவே நடந்துவந்ததாள்.
குல மகளின் பொருள் வரவில் கவுனம் வைத்தாள், தானும் குல மகளா வந்த நாளை மறந்து போனாள். மல்லிகாவுக்கு என்ன பண்ணுவது, ஏது பண்ணுவது என்று ஒன்றும் புரியவில்லை. அவள் ஆழ்ந்த யோசனையில் அமர்ந்தாள்.
அவள் கூர்ம பரோட்டா பண்ணனும் என்று நினைத்தால்,
சப்பாத்தி பண்ணறோம் என்று எதிர்மறையாகசொல்லி, தான் நினைத்ததை நடத்தி வந்தாள். இப்படியே எதிர்மறையாக பேசி
தான் நினைத்ததையெல்லாம் சாதித்துக்கொண்டாள். தினசரி மாமியார் மருமகளின் சண்டை சச்சரவின் இடையில் சேகர் செம்மையாக சிக்கி சிக்குநூறானான். அவன் இருவர் பக்கமும் பேச முடியாமல் தவியாத் தவித்தான். இப்படியாக காலம் கரைந்துவிட்டது.
ஒரு வேளை, இவள் எதிர்மறையாக பேசியே, தான் நினைத்ததை எல்லாம் சாதித்துக்கொள்கிறாளோ என்று மரகதத்துக்கு மருமகள் மீது ஒரு நாள் சந்தேகம் ஏற்பட்டது. மருமகள் சொல்வதற்க்கே அனுசரித்து போவோம் என்ற ஒரு முடிவுக்கு வந்தாள். இப்போது மல்லிகாவின் நிலைமை இன்னும் கடுப்பானது.
மாமியாரை எப்படி சமாளிப்பது என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை ஏதாவது சாக்குபோக்கு சொல்லி அடிக்கடி தன் பிறந்த வீட்டுக்கு செல்வதற்கான முடிவை எடுத்துக்கொண்டாள். புகுந்த வீட்டில் செய்ய முடியாததை பிறந்த வீட்டில் நிறைவேற்றிக்கொண்டாள்.
மாயாரிடம் பேசி வெற்றி பெற முடியாது என்பது மல்லிகாவுக்கு நன்றாக தெரியும்.
என்றாலும் மல்லிகாவின் அந்த டெக்கினிக்கும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
ஏதாவது சாக்குபோக்கு சொல்லி அடிக்கடி பிறந்த வீட்டிற்கு வருவதை அவள் அம்மா மறுத்து விட்டாள். சண்டையோ சச்சரவோ புகுந்த வீட்டில் இருப்பது தான் ஓர் பெண்ணுக்கு மரியாதையை தரும், அழகும் கூட என்று மல்லிகாவிடம் கூறினாள்.யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொணடால் தான் எல்லாம் நலமாக இருக்கும் என்று வினவினாள்.
அடிக்கடி பிறந்த வீட்டிற்கு வந்தால் அக்கம் பக்கம் இருக்கிறவங்க என்ன நினைப்பார்கள் என்று வருந்தினாள்.
உனக்கு ஒரு தங்கை கூட இருக்கிறாள்.அது நாபகத்தில் இருக்கட்டும். அவளையும் படிக்க வைத்து , கல்யாணமும் பண்ணி வெய்க்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அப்பாவும் வேலையில் இருந்து ஓய்வு பெற்றாச்சு.அவருக்கு வற பென்ஷனை வெச்சுக்கிட்டு தட்டிமுட்டி குடும்பத்தை நடத்திக்கிட்டிருக்கோம். அதில நீயும் வேற அடிக்கடி வந்து தொந்தரவு பண்ணாமல் இருந்தால் சரி. எங்களையும் கொஞ்சம் நிம்மதியாக வாழவிடு.
அப்பப்ப பண்டிகைகளுக்கு மட்டும் வந்தால் போதும். யாரும் ஏதுவும் சொல்லமாட்டார்கள் இப்படியாக அழுத்தம்திருத்தமாக மல்லிகாவிடம் கூறினாள். மல்லிகாவுக்கு நெனசில் அழுத்தமாக ஆணி அறைந்தது போல் இருந்தது அவளுக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை, மல்லிகா என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினாள்.
மாமியாரை அனுசரித்து போவதை தவிர வேறு வழி ஒன்றும் அவளுக்கு தெரியவில்லை.
கணவரிடம் அவர் அம்மாவை பற்றி கூறினால் கேட்டுக்கொள்ள மாட்டார் என்பது அவளுக்கு உறுதியாகிடுத்து.
மரகதமோ, தங்களுக்கு கிடைக்காத வாழ்க்கை அடுத்தவங்களுக்கும் எக்காரணத்தாலும் அமைய கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.
ஆனாலும், எவ்ளவு நாள் தான் பொறுத்து போகிறது என்று மல்லிகா அலுத்துக்கொண்டாள்.
மாமியாரின் தொல்லை தினசரி அதிகரித்து எல்லை மீறியது.
யாரிடமும் தன் பிரச்சன்னைகளை சொல்லவோ கொள்ளவோ இயலாமல் தவித்தாள்,
வாடினாள், வதஙகினாள் அவள் வாழ்க்கை காற்றோடு செல்லும் நூலிழந்த பட்டம் போல் ஆகிவிட்டது. காலத்துக்கும் இப்படியே தான் இருப்போமா என்று வியந்தாள். காலத்தின் தீர்ப்புகளை யாரும் அறிவதில்லையே.
அவளுக்கு அவள் வீட்டு பக்கத்தில் இருக்கிற ஏரியில் குதிச்சிடலாம் என்று பல முறை தோன்றியது. ஆனாலும் தன் குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து, தன்னை கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொண்டாள் இப்படியும் ஒரு மாமியார் இருப்பார்களா என்று அவளுக்கு மைகொள்ளவில்லை
சீரும் சிறப்புமாக வாழ்வதற்கும் கொடுப்பினை வேண்டுமே என்று எண்ணினாள். பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி இப்படி சரிசமமாக ஆதரவு இல்லாமல் போய்விட்டதே. சாக்கடைக்கு போக்கிடம் இல்லையே என்று வருந்தினாள்.அன்று நன்றாக படித்திருந்தால் ஒரு வேலைக்காவது போய் தொலைந்திருக்கலாம். அதற்கும் வழி இல்லாமல் போய்விட்டதே. தினசரி மாமியாரிடம் அல்லாடி அவதி படவேண்டிய சூழ்நிலை.
இவரும் ஒரே பய்யன் என்பதால் அம்மா சொல்வதே வேதவாக்யமாக
எடுத்துக்கொள்கிறாரே. இவரை என்னசொல்லி நம்ம வழிக்கு கொண்டுவருவது என்று ஒன்றும் புரியவில்லையே. இந்த இக்கட்டான சூழ்நிலைக்கு என்னதான் முடிவு என்று
ஒன்றும் தெரியவில்லையே பணம் இருந்தால் பாதி பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்பார்கள். இப்படி செல்லா காசாக வாழ வேண்டியதாக போச்சே
இப்படி எதுக்கெடுத்தாலும் பாக்கெட் பணமும் இல்லாமல் அவரை நம்பி இருக்கவேண்டியிருக்கே. இடுப்பில நாலு காசு இருந்தால் மரியாதையும் தானாக வரும் என்பார்கள். பணம் இருத்தால் தானே நம்ம சொல்பேச்சும் ஈடுபடும்.
பிரின்ச பாலை திரும்பவும் பாலாக்க முடியாதே. நடக்கிறதை நினைத்து வருந்தி எந்த பயனும் இல்லையே. நடக்க இருக்கிறது நடந்து தானே தீரும்.நடந்து முடிந்ததை சீர்திருத்தமும் செய்ய முடியாதே. வாழ்க்கையில் வற பிரச்சனைகளை எதிர்கொண்டு தானே ஆகணும்.
இருக்கிற பதட்டத்தில ஒரு நாள் ராத்திரி வீட்டின் முன் கதவின் தாழ்ப்பாளை போடாமல்
Type text or a website address or translate a document.
மல்லிகா
தூங்க
போய் விட்டாள். அந்த நேரம் பார்த்து எதிர்பாராமல் ஒரு திருடனும் வீட்டினுள்
Type text or a website address or translate a document.
நுழைந்துவிட்டான்.
பீரோவில் சாவி தொங்கிக்கொண்டிருந்தது. திறந்த பீரோவில் இருந்து ஒன்றும் பெரிதாக
கிடைக்க வாய்ப்பில்லை என்று எண்ணி, வந்தவழியே திரும்பிவிட்டான். அதர்க்கு தனியாக ஒரு அக்ஷ்தை மாமியாரிடமிருந்து அதிகாலையிலேயே வரவேற்ப்பாக கிடைத்துவிட்டது. கடவுளே, இன்னும் என்னென்ன நேர இருக்கிறதோ?
இப்படியாக, மாமியாரின் கொடுமை தாளாமல், எந்த பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வும் கிடைக்க இயலாமல், ஒரு நாள் மனம் நொந்து, முன் பின் விளைவுகளை யோசிக்காமல் வீட்டு பக்கத்தில் இருக்கும் ஏரியில் குதித்து மல்லிகா உயிர் இழந்தாள்.
யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் இப்படி ஒரு காரியத்தை செய்துவிட்டாளே. சரண்யாவை விட்டு போவதற்கு அவளுக்கு எப்படி தான் மனசு வந்தது.
இன்று ஊர் உலகம் அவனை தானே குற்றம் சொல்லும், சுட்டிக்காட்டும் என்று சேகர் ஏங்கினான்.
நடந்தது எதுவும் தவிர்க்க முடியாமல் போச்சே, ஜீரணிக்கவும் முடியவில்லையே என்று வருந்தினான் இப்ப ஒப்பாரி வெச்சுட்டு பயன் ஒன்றும் இல்லையே. அவள் இருக்கும் போது அவள் சொல்பேச்சை எதுவும் காது கொடுத்து கேட்டுக்கொள்ளவில்லையே. அம்மா சொல்வதே தத்துவம் ,மந்திரம் என்று நினைத்துவிட்டோமே. தன் மனைவி என்று நினைத்து அவளுக்குரிய மதிப்பை ஒரு நாளும் தரவில்லையே. அவள் ஆசைகள் ஒன்றும் நிறைவேறாமல் போய் சேர்ந்திட்டாளே அவளின் இறுதி செட்டிங்குகளை முடித்துக்கொண்டான்.
மல்லிகா இல்லாமல் அவன் மனம் காற்றாடி போல் ஆடியது.
மனைவி சொல்பேச்செயும் கொஞ்சம் கேட்டிருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா என்று வருந்தினான். இப்படி அம்மாவின் செல்லக்குட்டியாக அவர்களின் பேச்சுக்கே முக்கியத்துவம் கொடுத்துவிட்டோமே. அதன் பலனை இன்று அனுபவித்துக்கொண்டிருக்கோமே என்று நினைத்தான் சரண்யாவையும் வளர்த்து ஆளாக்கிற பொறுப்பு அவனுக்கு இருந்தது. அவன் தன்னந்தனியாக தனிமரமாக நின்றான். அலுவலக வேலைகளையும், வீடு நிர்வாகத்தையும் அவனுக்கு தனியாக சமாளிக்க வேண்டியிருந்தது.
மல்லிகா இருந்தபோது அவள் அருமை தெரியவில்லையே. இப்ப வருந்தி எந்த பயனும் இல்லையே. அம்மாவுக்கும் வயதாகிவிட்டது என்றாலும் விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டதே
மரகதத்துக்கும் மனசாட்சி உறுத்தியது. கொஞ்சம் விட்டுக்கொடுத்து போயிருந்தால்
இந்த சூழ்நிலையை தவிர்த்திருக்கலாம் என்று வருந்தினாள்
கொஞ்ச நாள் காலம், கலவரம் முடிந்து ஓய்ந்தது போல் அந்த வீடே வெறிச்சோடியது.
அப்படி இருக்கும்போதுதான்,சேகருக்கு இன்னொரு கல்யாணம் பண்ணினால் என்ன என்று ஒரு யோசனை மரகதத்துக்கு தோன்றியது.
தன் யோசனையை சேகரியிடம் கூறினாள். அவன் முதல்ல எதிர்ப்பு தெரிவித்தாலும்
பின்னாடி ஒற்றுக்கொண்டான். சரண்யாவின் நிலைமை என்னாகுமோ என்று வியந்தான். ஆனாலும் சரண்யாவை கவுனிக்கவும் ஓர் பெண் தேவை என்று நினைத்தான். கூடிய சீக்கிரம்அவன் இரண்டாவது திருமணமும் நடந்து நிகழ்ந்தது.
Type text or a website address or translate a document.
சரண்யாவுக்கும் ஒரு சித்தி கிடைத்துவிட்டது
அவள் பெயர் ரேவதி.அவள் பட்டப்படிப்பை முடித்திருந்தாள் அவள் சுறுசுறுப்பாக இருந்தாள். எல்லா ஆட்டத்துக்கும் ஒரு முடிவு இருக்கிறது என்பது போல், மரகதத்தின் ஆணவத்துக்கும் ஒரு முடிவ இருக்கத்தான் செய்தது. மரகதத்துக்கும் வயதாகி விட்டதால் மருந்து மாத்திரை நேரத்துக்கு தருவதற்கும், அவர்களுடைய எல்லா வேலைகளுக்கும் ஒரு கை கொடுக்கவும் மருமகளின் உதவி அவர்களுக்கு தேவை பட்டது.
இன்னும் தன் ஆட்டம் ரேவதியிடம் செல்லாது என்பதை மரகதம்
உணர்ந்தாள். இனிமேல் கொஞ்சம் அடக்கி வாசிப்பது தான்
சரியாக இருக்கும் என்று அவர்களுக்கு தோன்றியது. இல்லை என்றால் முதியோர் இல்லம் அனுப்பிவிடுவார்களோ என்ற ஒரு சிறு பயமும் மனசுக்குள் சேர்ந்துகொண்டது. காலம் பதில் சொல்லத்தானே செய்கிறது. தென்றல் என்றும் ஒரே பக்கம் வீசுவதில்லை என்று மரகதம் புரிந்துகொண்டாள்.
தன் மருமகளை ஆன்சரித்து போவதை தவிர அவர்களுக்கு வேறு
வழி ஒன்றும் தெரியவில்லை.
முற்றும்
Author : தில்லி ஹரிஹரன்
e mail Id. : cphari_04@yahoo.co.in