ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது

(0)
  • 6.2k
  • 0
  • 2.1k

அனன்யாவை பார்த்ததும் பதட்டத்தில் விஷாலுக்கு வேர்த்து கொட்டியது. இன்று அவளுடைய பிறந்தநாள். அவள் இவனை நோக்கி வரும்போது கை கால்கள் உதற தொடங்கின. இது முதல் முறை அல்ல என்னவோ அவளை பார்க்கும் போதெல்லாம் இவனுக்கு தலை முதல் கால் வரை ஜுரம் வந்தது போல இருந்தது அவளை பார்த்த நாள் முதலாய் மிகுந்த இருந்த ஆர்வத்துடன் அவளிடம் பேச முயற்சிப்பான். ஆனால் அவள் பேசத் தொடங்கியதும் இவனுடைய குரல் ஒரு கட்டத்துக்கு மேல் எழும்பாது தன் காதலை சொல்ல விஷாலுக்கு ஒரு தடையும் இல்லை அவனே தான் தடையாக இருந்தான் அவனுடைய தாழ்வு மனப்பான்மை அவனை அவளிடம் பேச முடியாமல் செய்தது இன்றைக்கு அவள் சாக்லேட் கொடுக்கும் பொழுது இவன் அவளுடைய கண்களை பார்க்க முடியாமல் தவித்தான்.

1

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 1

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது பகுதி 1 அனன்யாவை பார்த்ததும் பதட்டத்தில் விஷாலுக்கு வேர்த்து கொட்டியது. இன்று அவளுடைய பிறந்தநாள். அவள் இவனை நோக்கி கை கால்கள் உதற தொடங்கின. இது முதல் முறை அல்ல என்னவோ அவளை பார்க்கும் போதெல்லாம் இவனுக்கு தலை முதல் கால் வரை ஜுரம் வந்தது போல இருந்தது அவளை பார்த்த நாள் முதலாய் மிகுந்த இருந்த ஆர்வத்துடன் அவளிடம் பேச முயற்சிப்பான். ஆனால் அவள் பேசத் தொடங்கியதும் இவனுடைய குரல் ஒரு கட்டத்துக்கு மேல் எழும்பாது தன் காதலை சொல்ல விஷாலுக்கு ஒரு தடையும் இல்லை அவனே தான் தடையாக இருந்தான் அவனுடைய தாழ்வு மனப்பான்மை அவனை அவளிடம் பேச முடியாமல் செய்தது இன்றைக்கு அவள் சாக்லேட் கொடுக்கும் பொழுது இவன் அவளுடைய கண்களை பார்க்க முடியாமல் தவித்தான். இவனுடைய விருப்பமெல்லாம் அவள் கூட சகஜமாக பழக வேண்டும் என்பதுதான் ஆனால் ...Read More

2

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 2

தான் தோற்றுப் போய் விட்டோம் என்பதை விஷால் நம்பவில்லை. மறுபடியும் முயற்சிக்க மனம் வரவில்லை. ரேணுகா டீச்சரின் கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. ஏனோ இவன் மனம் ஒட்டாமல் இருந்தது. சுபா இவனுக்கு உறுதுணையாக இருந்தாள் . ஏதாவது ஒன்றை செய்து அவனை அந்த தோல்வியில் இருந்து விடுபட செய்வதற்கு முயற்சி செய்தாள். ஒருவேளை அனன்யாவிடம் பிரதீப் விஷாலுடைய காதலைப் பற்றி சொல்லி இருப்பானோ என்று நினைத்தான். அப்படியே சொல்லியிருந்தாலும் இப்பொழுது அதைப் பற்றி பேசி என்ன பயன் இவன் அடுத்து என்ன செய்வதென்று யோசித்தான். இப்போது அவன் முன்னே இருப்பதெல்லாம் அவனுடைய எதிர்காலம். கடந்த காலம் எல்லாம் வெறும் மாயையாக தோற்றமளித்தது. அனன்யாவை நினைத்து நினைத்து தான் முழுக்க வெறும் கண்ணாடி பிம்பமாகவே மாறிவிட்டதாக நினைத்துக் கொண்டான். அவள் எதை செய்தாலும் அதை தனக்காகவே செய்கிறாள் என்று நினைத்துக் கொண்டது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். மேலும் பிரதீப் மூலமாக இன்னும் ...Read More

3

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 3

அனன்யாவிடம் இருந்து கால் வந்ததும் இவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவளே பேசினாள் விஷால், சுபா எல்லாமே சொல்லி இருப்பாள் நீங்க ஒன்னும் அவசரப்பட தேவையில்லை யோசிச்சு சொல்லுங்க. நான் உங்களுக்காக காத்திருப்பேன். பிரதீப் ...அத பத்தி நீங்க கவலைப்படாதீங்க அவன்கிட்ட ஏற்கனவே நான் பேசிட்டேன் அவன் இதுல தலையிட மாட்டான், அனன்யா நீங்க முழு மனசோட தான் இத சொல்றீங்களா? அவசரப்பட வேண்டாம் என்றான். விஷால் என் மனசாட்சிக்கு விரோதமா எதையும் என்னால செய்ய முடியாது நான் உங்களை விரும்புவது நிஜம் அதை தடுக்க என்னால முடியல என்றாள் . அனன்யா, காட்சிகள் மாறுவது போல் அனன்யாவும் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விட்டாள். சரி அனன்யா எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க, சரி விஷால் ஃபோனை வைக்க இவனுக்கு மனம் வரவில்லை அனன்யாவின் இந்த முடிவுக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஆதலால் பொறுமையாக இருப்பதே நல்லது ...Read More

4

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 4

விஷால் மறுபடி கண் விழித்து பார்த்த போது அவனுடைய வீட்டில் இருந்தான். சுபா கவலையோடு அவன் அருகில் இருந்தாள் . அனன்யா எங்கே என்று கேட்டான் மருந்து வாங்க போயிருக்கா இப்போ வந்து விடுவாள் யார் உன்னை இப்படி பன்னாங்க ? டான்ஸ் class பசங்களா ? ஆமாம் ..பிரதீப் அவங்க கூட இருந்தானா ? விஷால் அமைதியாய் இருந்தான். டாக்டர் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தா சரியாய் போய்விடும் என்று சொல்லி இருக்கிறார். சரி சுபா . அனன்யா வந்து விட்டாள் . பிரதீப் தான் இவனை இப்படி பண்ணி இருக்கான் என்றாள் சுபா .அனன்யா விஷால் அருகில் அமர்ந்தாள். சுபா வெளியே போய் விட்டாள் . அனன்யா என்ன நடந்தாலும் நான் உன்னை விட்டு போக மாட்டேன் என்றாள் .மென்மையாக அவன் நெற்றியில் முத்தமிட்டாள் . தாங்க்ஸ் அனன்யா என்றான். பிரச்சனைகளை பெரிது படுத்த வேண்டாமென நினைத்தான் ...Read More

5

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 5

ஒரு கணம் அவனால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே முடியவில்லை. சுபாவும் தன்னை விரும்புகிறாள் என்பதை உணரவே சற்று நேரம் பிடித்தது. அவளுடைய அணைப்பில் இருந்து விடுவித்துக் கொண்டான். என்னாச்சு சுபா உனக்கு என்றான் விஷால். நான் நிஜமாகத்தான் சொல்கிறேன் நான் உன்னை விரும்புகிறேன் என்றாள் சுபா. அனன்யா என்ன சொல்வாளோ என யோசித்துக் கொண்டிருக்கும் போது அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். என்ன அனன்யா சிரிக்கிற என்றான் விஷால். எதுக்கு நீ பயப்படுற விஷால் என்னிடம் அவ முன்னாடியே சொல்லிட்டா என்னால அதை மறுக்க முடியல எங்க ரெண்டு பேரையும் நீ ஏத்துக்க தான் வேணும். என்ன அனன்யா சொல்ற இது யாராவது கேள்விப்பட்டால் உங்கள தான் தப்பா நினைப்பாங்க .நினைச்சுட்டு போகட்டும்.சுபா நீ மறுபடி யோசிச்சிட்டு சொல்லு. நானும் அனன்யாவும் நல்லா யோசிச்சுட்டு தான் இந்த முடிவு எடுத்திருக்கிறோம் நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நான் உன் கூடத்தான் இருப்பேன் ...Read More

6

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 6

மறுநாள் காலையில் சுபாவும் விஷாலும் அருகில் இருந்த கோயிலுக்கு சென்றிருந்தனர். இருவரும் அனன்யா வேகமாக குணமாக மனம் உருகி பிரார்த்தனை செய்தனர் .பிறகு அனன்யா வீட்டுக்கு அனன்யா இப்போ எப்படி இருக்க? பரவால்ல விஷால் கொஞ்சம் தேவலாம். சுபா நீ தைரியமா இரு அனன்யா எல்லாம் சரியாகிவிடும் இந்தா கோயில் பிரசாதம் என்று கொடுத்தாள் . விஷால் எனக்காக கோயிலுக்கு எல்லாம் போனியா என்று சிரித்தாள். உனக்காக சர்ச், மசூதிக்கு கூட போவேன் என்று சொன்னான்.சரி அனன்யா ரெஸ்ட் எடுத்துக்கோ நான் அப்புறம் வந்து பார்க்கிறேன் என்றான் விஷால்.இரண்டு நாளில் அனன்யாவுக்கு உடம்பு சரி ஆகிவிட்டது பழையபடி காலேஜுக்கு வந்தாள் . சுபாவும், விஷாலும் ஏன் அதுக்குள்ள வந்த இன்னும் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கலாமே என்றனர். என்னால முடியாதுப்பா என்னவோ இத்தனை நாள் ரெஸ்ட் எடுத்தது போதும் என்றாள் அனன்யா.சுபாவும் அனன்யாவும் ஏதோ கதைகளை பேச தொடங்கினர் இவன் ...Read More

7

ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 7

ஒரு வழியாக சுபாவை சமாளித்து ஊருக்கு அனுப்பி வைத்தான். அவனுக்கு தான் செய்வது சரிதான். தான் சுயநலமாக இருந்தால் அவளுடைய எதிர்காலம் தான் பாதிக்கப்படும் என அனன்யாவும் இதற்காக ரொம்ப வருத்தப்பட்டாள். இவனுக்கு காலேஜ் போகவே பிடிக்கவில்லை . சுபா நினைப்பாவே இருந்தது. அனன்யா நீ தேவை இல்லாம கவலை படுற எல்லாம் நல்லபடியா நடக்கும் என்றாள். சுபா நான் அவளை ஏமாத்திட்டதா நினைக்கிறாள். அதை நினைச்சா தான் வருத்தமா இருக்கு. இந்த வார கடைசியில் நாம அவள போய் பார்க்கலாம் நான் சுபா அம்மாகிட்ட பேசி இருக்கேன் அவர்களும் சரி என்று சொல்லி இருக்காங்க. ரொம்ப தேங்க்ஸ் அனன்யா. தினமும் அனன்யா உடன் பழகி வந்தாலும் சுபாவின் நினைப்பு விஷாலை விட்டுப் போகவில்லை. சுபாவுக்கு போன் செய்யலாமென நினைத்தான் . அனன்யா அதை தடுத்து விட்டாள். நாம தான் நேரில் பார்க்க போறோமே அப்புறம் என்ன, அவங்க அப்பாவுக்கு ...Read More