DAD'S ARE ALWAYS LIER'S

(33)
  • 66.2k
  • 1
  • 15.3k

அன்று அந்திமாலை 6.00 மணி. அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் வேளை , மனமானது சற்று ஓய்வுக்காக ஏங்கிக் கொண்டு இருந்தது. எனது அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பும் எண்ணத்தில் எனது பையை எடுத்தேன், பின்னிருந்து ஒரு குரல் " அசோக் இரு " நான் திரும்பிப் பார்க்க என்னோடு பணிபுரியும் கதிர் அங்கு நின்றுகொண்டு இருந்தான். "அசோக், சார் உன்னை கூப்பிட்டார் " என்றான். நான் சார் அறையின் கதவை தட்டி, " மே ஐ கம், சார் " என்றேன். அவர் " அசோக் நான் உங்களிடம் கொடுத்த வேலை என்னாச்சி ? " என்றார். அதற்கு நான் " முடிந்தது சார் " என சில காகிதங்களை அவர் முன் நீட்டினேன். அப்பொழுதும் அவர் என்னை விடுவதாக இல்லை. சார் கூரிய வேலைகளை முடிக்கும் போது மணி 8.00 , வீடு சென்று சேரும் போது

Full Novel

1

DAD'S ARE ALWAYS LIER'S - 1

அன்று அந்திமாலை 6.00 மணி. அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் வேளை , மனமானது சற்று ஏங்கிக் கொண்டு இருந்தது. எனது அலுவலகப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பும் எண்ணத்தில் எனது பையை எடுத்தேன், பின்னிருந்து ஒரு குரல் " அசோக் இரு " நான் திரும்பிப் பார்க்க என்னோடு பணிபுரியும் கதிர் அங்கு நின்றுகொண்டு இருந்தான். "அசோக், சார் உன்னை கூப்பிட்டார் " என்றான். நான் சார் அறையின் கதவை தட்டி, " மே ஐ கம், சார் " என்றேன். அவர் " அசோக் நான் உங்களிடம் கொடுத்த வேலை என்னாச்சி ? " என்றார். அதற்கு நான் " முடிந்தது சார் " என சில காகிதங்களை அவர் முன் நீட்டினேன். அப்பொழுதும் அவர் என்னை விடுவதாக இல்லை. சார் கூரிய வேலைகளை முடிக்கும் போது மணி 8.00 , வீடு சென்று சேரும் போது ...Read More

2

DAD'S ARE ALWAYS LIER'S - 2

இப்போது நான் என் மகளை தேட , அவள் எங்கள் வீட்டு டைனிங் டேபிள் மேல் அமர்ந்து , தன் தலையை கீழே சாய்த்து , கையை வைத்து , கண்களில் கண்ணீரோடு என்னை பார்த்தாள் ?? . சண்டைக்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு இல்லை.. ஏனெனில் இது வழக்கமாக நடப்பதே.. அப்படியே காரணம் இருந்தாலும் அதில் உப்பு காரம் எதுவும் இருக்காது ? . நான் என் மகள் அருகே சென்று " என் மகா குட்டிக்கு என்னாச்சு ? " என்று கேட்டேன். அவள் என்னை பார்த்து " அப்பா நான் எது செய்தாலும் அதை அம்மா தப்புன்னு சொல்றாங்க , என்னை திட்டிக்கிட்டே இருக்காங்க ," என்று சொல்லிவிட்டு மீண்டும் தலையை குனிந்து கொண்டாள். இப்பொழுது கிருஷ்ணாவும் எங்களோடு வந்து அமர்ந்தான். அவன் " ஓ மை பட்டர்ஃபிலை , இங்க பாரு ...Read More

3

DAD'S ARE ALWAYS LIER'S - 3

அன்று சரியாக 8 மணி. அப்பா அப்போது ஆபீஸில் இருந்தேன் , அன்னைக்கு அப்பாவுக்கு அதிகமாக வேலை இருந்தது. நான் என் வேலையை வேகமாக செய்து இருந்தேன். அப்போ எனக்கு ஒரு போன் வந்தது ? . மகா இடையில் " யார் போன் பண்ணது ? " என்றாள் . " குட்டி இப்பதானே சொன்னேன் பேச கூடாதுன்னு " " ஓகே அப்பா பேச மாட்டேன் நீங்க சொல்லுங்க " எங்க விட்டேன் ம்.... ம் போன் வந்தது .... போனை எடுத்தேன் . அப்போ உன்னோட தாத்தா தான் போன் பண்ணாரு. நான் போனை காதில் வைத்ததும் , உன் தாத்தா என்கிட்ட " தனுவை ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்கிறோம். நீ சீக்கிரம் வா " என்று சொன்னார். அதன் பிறகு அப்பா வேகமாக ஹாஸ்பிடலுக்கு வந்தேனா, நான் உள்ளே வந்ததும் திடீரென ஒரு அழுகுரல், அது யார் ...Read More

4

DAD'S ARE ALWAYS LIER'S - 4

சரி குட்டி உனக்கு நம்பிக்கை இல்லை எனில் நீயே சென்று எங்கள் அறையில் பார் ...... தனு கண்களில் மட்டும் இப்பொழுது கண்ணீர் இல்லை எனில் , நான் ஒப்புக் கொள்கிறேன் , நீ சொன்னது சரிதான் , உன் அம்மா மேல் தான் தவறு என்று , அதுமட்டுமில்லை சற்று முன்பு என்னிடம் இம்முறை நான் மன்னிப்பு கேட்க போவதில்லை என்று சொன்னாள் அல்லவா , ஆனால் அவள் நிச்சயம் உன்னிடம் மன்னிப்பு கேட்பாள் , அப்படி நடந்தால் நீ உன் அம்மாவை மன்னித்து விட வேண்டும்.மகா : சரி அப்பா அதையும் பார்க்கலாம் (மகா தனது அம்மாவின் அறைக்குள் செல்கிறாள் )கிருஷ்ணா : என்ன அண்ணா இப்படி செய்துவிட்டீர்கள் .... இப்பொழுது மட்டும் நீங்கள் சொன்னபடி நடக்கவில்லை , எனில் பிரச்சனை இன்னும் பெரிதாகிவிடும் நீங்கதான் மாட்ட போகிறீர்கள் ? ? ( இம்முறை அக்கறையோடு )அசோக் : ...Read More