ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 48

  • 384
  • 159

விஷால் தன் அப்பாவிடம் மனம் விட்டு பேசினான். அவரை புரிந்து கொள்ளாமல் போய்விட்டதற்காக மன்னிப்பும் கேட்டான். என்னப்பா மன்னிப்பு எல்லாம் கேக்குற எனக்கு நீ முக்கியம் உன்னுடைய சந்தோஷம் முக்கியம் என்றார் விஷால் அப்பா. அனன்யா இன்னும் 6 மாதங்களில் வீடு காட்டும் பணி முடிந்து விடும் என விஷாலிடம் சொன்னாள். வீடு கிரக பிரவேசத்தின் போது கட்டாயம் விஷால் இந்தியா வந்து விடுமாறு சொல்லியிருந்தாள். விஷாலும் சரி அனன்யா வந்து விடுகிறேன் என்றான். விஷாலுடைய குடும்பமும், குழந்தைகளும் புது வீட்டுக்கு போக போவதை எண்ணி மகிழ்ச்சியாய் இருந்தனர்.தீபா தன்னுடைய அடுத்த ஓவிய கண்காட்சிக்காக ஓவியங்களை வரைய தொடங்கியிருந்தாள் .அனன்யா தன்னுடைய ஆஸ்ட்ரேலியா போன அனுபவங்களை தொகுத்து புத்தகமாக வெளியிட திட்டமிட்டு இருந்தாள். விஷால் உனக்கு எழுத நேரம் கிடைக்குமா என்றான். ஏற்கனவே நிறைய குறிப்புகள் எழுதி வைத்திருக்கிறேன் அவற்றை தொகுக்க வேண்டியது தான் பாக்கி என்றாள். விஷால் ஆலோசனைகளை வழங்கினான்.