விஷால் தொடர்ந்து குவைத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தான்.தீபா தன்னுடைய பெயிண்டிங் ஓவியங்களை கண்காட்சியாக வைக்க விரும்பினாள் . விஷாலிடம் இதை சொன்ன போது நான் மறந்தே போய்விட்டேனேஅவளுடைய இந்த திறமையை உடனே அதற்கான ஏற்பாடுகளை செய் அனன்யா என்று சொன்னான். அனன்யாவும், சுபாவும் அந்த ஓவியங்களை செலக்ட் செய்து கண்காட்சியாக வைக்க லொகேஷன் பார்த்தனர். அவை நல்ல அழகுள்ள ஓவியங்களாக இருந்தன. குழந்தைகளும் உற்சாகமடைந்தனர். விஷால் குறிப்பிட்ட தேதியில் கண்காட்சிக்கு வர முடியுமா என கேட்டாள் தீபா. அவனுடைய வேலை சுமை காரணமாக வர முடியாமல் போனதை விளக்கினான் . பரவாயில்லை விஷால் என்னால் உன்னை புரிந்து கொள்ள முடிகிறது என்றாள் தீபா. விஷால் கண்காட்சி செலவுக்காக பணம் அனுப்பி இருந்தான். கண்காட்சி invitationஐ whatsapp மூலமாக நெருங்கிய நண்பர்களுக்கும்,உறவினார்களுக்கும் அனுப்பினாள் சுபா. தீபா அம்மா இல்லாத குறை ஒன்றுதான். அவள் இருந்திருந்தால் தன் பெண்ணை நினைத்து பெருமை பட்டிருப்பாள் . அனன்யா மூன்று