அனன்யா அவள் ஆசைப்பட்ட மாதிரி இரண்டாவது மியூசிக் ஆல்பம் பற்றிய பணிகளில் இறங்கினாள் . விஷாலும் அவளை ஊக்க படுத்தினான்.ஷெரினே இரண்டாவது ஆல்பம் தயாரிக்கவும் ஒப்பு கொண்டிருந்தாள். விஷால் அவ்வப்போது சாட்விக்கொடு பேசி வந்தான். சாட்விக் மழலை மொழியில் எப்ப அப்பா வருவீங்க என்று கேட்டு கொண்டிருந்தான்.ஸ்ருதியும் நாளொரு குறும்போடும் எல்லோருடைய அன்போடும் வளர்ந்து வந்தாள் .சுபா அப்பாவும், விஷால் அப்பாவும் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்தார்கள்.விஷால் இரண்டு வருடத்தை கடந்திருந்தான்.லீவு கேட்டிருந்தான். கொஞ்சம் சிரமப்பட்டு ஒரு மாத விடுமுறையை பெற்றிருந்தான். அனன்யா இந்த செய்தியை கேட்டு மகிழ்ந்தாள். சுபா, தீபா மற்றும் விஷாலின் குடும்பத்தார் ஆவலுடன் அவன் வருகைக்காக காத்திருந்தனர். எல்லோருக்காகவும் சில கிப்ட் களை வாங்கினான் . சாட்விக்க்கும், ஸ்ருதிக்கும் விளையாட்டு பொருட்கள் வாங்கினான். விஷால் வந்து இறங்கியதும் வீட்டில் எல்லோருக்கும் கொண்டாட்டம் தான். எப்படி இருக்கே விஷால் என்றாள் அனன்யா. நல்லா இருக்கேன் அவளுடைய இரண்டாவது ஆல்பம்