ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 40

  • 864
  • 384

இன்ஸ்பெக்டர் சொன்னதை கேட்டு அதிர்ந்தான் விஷால். அவனுக்கு தலையே சுற்றியது. தீபா என்ன ஆச்சு விஷால் உனக்கு என்றாள். ஏன் தீபா இப்படி பண்ணினே என்றான். உன்னை கொல்ல பார்த்தவனை சும்மா விட சொல்லுறியா விஷால் அதான் பணம் கொடுத்து அதே டிரைவர் மூலமா ரேவந்தை தீர்த்து கட்டினேன் என்றாள். உன்னை விட்டா எனக்கு யாரு இருக்கா சொல்லு விஷால் . உன்னையும் இழந்து விட்டு இந்த உலகத்துல வேற என்ன இருக்கு அதுதான் அப்படி பண்ணினேன். போலீஸ் கிட்ட ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தேன் என்றாள். தீபா என்று அவளை கட்டிகொண்டு அழுதான் விஷால். அனன்யாவும், சுபாவும் இதை எப்படி தாங்க போகிறார்களோ மேலும் தீபா அம்மாவுக்கு இந்த செய்தியை எப்படி சொல்வதென தவித்து போனான் விஷால். எவ்ளோ வருஷம் ஆனாலும் எனக்கு கவலையில்லை விஷால் நான் வெளியே வரும்போது எனக்காக ஒரு ரோஸ் வாங்கிட்டு வா விஷால் அது போதும்