ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 29

  • 1.1k
  • 474

ப்ராஜக்ட் எதிர்பார்த்தபடி அந்த வாரத்தில் முடியவில்லை. சுபாவை கூப்பிட்டு விஷயத்தை சொன்னான். நீ ஊருக்கு போ சுபா நான் அடுத்த வாரம் வருகிறேன் என்றான். இன்னும் ஒரு வாரம்தானே நான் இருக்கிறேன் என்றாள். அனன்யா கவலைப்படுவாள். நீ இருந்தாலாவது அவளுக்கு ஒரு ஆறுதலாய் இருக்கும். சரி விஷால் நான் டிக்கெட் புக் பண்ணிவிட்டு உனக்கு சொல்கிறேன் . சரி சுபா. அனன்யா இரவு ஃபோன் செய்தாள். சுபா சொன்னாள். பரவாயில்லை விஷால் நீ வேலையை முடித்து விட்டு வா என்றாள். இவனுக்கு அப்போதுதான் நிம்மதியாய் இருந்தது .சரி அனன்யா பிறகு கூப்பிடுகிறேன் என்று சொன்னான். சுபாவை டிரைன் ஏத்தி விட சென்று இருந்தான். எனக்கு போகவே மனசு இல்லை என்றாள். நீ பத்திரமா போய்ட்டு எனக்கு ஃபோன் பண்ணு என்றான். தீபாவையும் பார்த்துக்கொள் என்றான். சரி விஷால். ப்ராஜக்ட் முடிப்பதில் நிறைய சிரமங்கள் இருந்தன. பிரசன்டேஷன் பண்ணுவதிலும் நிறைய சிக்கல்கள் இருந்தன.