விஷாலை ஸ்டேஷன் வரை வந்து வழி அனுப்பி வைத்தார்கள் மூவரும். போயிட்டு ஃபோன் பண்ணு விஷால் என்றாள் சுபா.சுபா ரொம்பவும் கவலைப்பட்டாள் . அனன்யா அதெல்லாம் அவன் சமாளிப்பான் என்றாள்.ஒரு ரெண்டு வாரம் கழித்து நான் போய் அவனை பார்த்து வருகிறேன் என்றாள் சுபா. தனியாகவா? வேண்டும் என்றால் என் ஃப்ரெண்ட் யாரையாவது கூட்டிபோகிறேன் என்றாள். சுபாவும் அன்று இரவே புறப்பட்டு ஹாஸ்டல் போய் சேர்ந்தாள். அனன்யாவும் தீபாவும் தங்கள் ஸ்டடியை தொடர்ந்தனர். விஷால் அனன்யாவை நினைத்துதான் அதிகம் கவலைப்பட்டான் . அவள் வெளியே சிரித்து கொண்டிருந்தாலும் உள்ளே விஷால் என்ன செய்கிறான் என்பதையே நினைப்பாள். இவன் போய் சேர்ந்தவுடன் எல்லோருக்கும் ஃபோன் பண்ணினான். அடுத்தடுத்த வேலைகளில் பிஸி ஆனான். சுபா ப்ராஜக்ட் சென்னையில் செய்ய வேண்டும் என தன் நண்பர்களை கேட்டுக்கொண்டிருந்தாள். அவளுடைய முயற்சி பலிக்குமா என்பது தெரியாது.தீபா இப்போதெல்லாம் நேரத்தோடு தூங்கி விடுகிறாள். ஆனாலும் விஷால் நினைப்பு வாட்டி