ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது - 3

  • 2.3k
  • 1.2k

அனன்யாவிடம் இருந்து கால் வந்ததும் இவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவளே பேசினாள் விஷால், சுபா எல்லாமே சொல்லி இருப்பாள் நீங்க ஒன்னும் அவசரப்பட தேவையில்லை நிதானமா யோசிச்சு சொல்லுங்க. நான் உங்களுக்காக காத்திருப்பேன். பிரதீப் ...அத பத்தி நீங்க கவலைப்படாதீங்க அவன்கிட்ட ஏற்கனவே நான் பேசிட்டேன் அவன் இதுல தலையிட மாட்டான், அனன்யா நீங்க முழு மனசோட தான் இத சொல்றீங்களா? அவசரப்பட வேண்டாம் என்றான். விஷால் என் மனசாட்சிக்கு விரோதமா எதையும் என்னால செய்ய முடியாது நான் உங்களை விரும்புவது நிஜம் அதை தடுக்க என்னால முடியல என்றாள் . அனன்யா, காட்சிகள் மாறுவது போல் அனன்யாவும் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விட்டாள். சரி அனன்யா எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க, சரி விஷால் ஃபோனை வைக்க இவனுக்கு மனம் வரவில்லை அனன்யாவின் இந்த முடிவுக்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஆதலால் பொறுமையாக இருப்பதே நல்லது