இரவுக்கு ஆயிரம் கைகள் - 21

  • 2.1k
  • 729

ராம் புதிய சவால்களை எதிர்கொள்ள ட்ரைனிங் அவசியம் என நினைத்தான் . பயிற்சி பட்டறை நிகழ்வில் கலந்து கொள்ள பதிவு செய்திருந்தான் . லதா , தீபக் ஆகியோரும் கலந்து கொள்வதாக ஏற்பாடு .மூணு நாள் நிகழ்ச்சி . பெங்களூரு குளுமையை எப்போதோ இழந்து விட்டிருந்தது . நிகழ்ச்சியின் முதல் நாளில் மன அமைதியை பேணுவதில் தொடங்கினார்கள். அப்போதுதான் அங்கிருந்த பிற பிரைவேட் agency உறுப்பினர்களை பார்த்து பேச தொடங்கினார்கள் . சிக்கலான கேஸ் மற்றும் பணம் வராத கேஸ் முதற்கொண்டு பேசி சிரித்தார்கள் . லதா ரொம்ப ஆர்வமாக technical செஷன் பகுதிகளில் பங்கேற்றாள்.அப்போதுதான் கோவை பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரை சந்தித்தான் . குமரேசன் இப்போதுதான் சிறிய அளவில் துவங்கி இருந்தார். மாப்பிள்ளை பின்புலம் அறிவதில் இருந்து வேலைக்கு ஆள் எடுப்பது வரை சிறிய வேலைகளை செய்து வந்தார் . அவராகவே அறிமுகபடுத்திக்கொண்டார், சமீபத்துல ஒரு பையன் என்னை