நினைவு-49 வெளியில் வந்த ராகவனை குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு வேனில் கொண்டு சென்றது ஒரு கூட்டம். திமிறியவனின் முகத்தில் இரண்டு குத்துவிட்டு, மயக்க மருந்து துணி கொண்டு வாயைக் கட்டி வைத்தனர். பின்னர் ஒரு குடவுனில் அடைத்து வைக்கப்பட்டான் ராகவன். அதிக நேரமில்லாமல் வெகு சீக்கிரமே அவனுக்கு மயக்கம் மயக்கம் தெளிந்து விட்டது. காரணம் அப்படியொரு மசலா நெடி அவன் மூக்கில் ஏறி தும்மலை வரவழைத்து அவனை தத்தளிக்க வைத்தது. மூச்சுவிட முடியாமல் தொடர் தும்மலில் இருமலும் சேர்ந்து வர, பெரிதாகக் கஷ்டப்படத் தொடங்கினான். மூக்கும், கண்களும் கண்ணீரை சுரக்க வைக்க அதை துடைத்துக் கொள்ள முடியவில்லை அவனால்! நாற்காலியின் பின்புறத்தோடு அவன் கைகள் கட்டப்பட்டிருந்தது. சுற்றிலும் பார்வையை சுழல விட்டான். பழக்கமான இடமாகத் தோன்றியது. ஆனால் இருட்டில் சரியாக கண்டறிய முடியவில்லை. “யாரும் இருக்கீங்களா? காப்பாத்துங்க!” என்ற அவனது ஓலமும் தும்மலில் சிதறி சிதைந்து காணாமல் போனது. கிட்டத்தட்ட இரண்டுமணி நேரத்திற்கும்