இரவுக்கு ஆயிரம் கைகள் - 18

  • 2.7k
  • 978

போலீஸ் வந்து பத்ரியின் உடலை கைப்பற்றினார்கள் . எல்லோருடைய விலாசங்களையும் குறித்து கொண்டார்கள். எப்ப கூப்பிட்டாலும் வரணும் என எச்சரித்தார்கள். பத்ரி உடல் எதற்காக ரமேஷ் காரில் வைக்கப்பட்டிருந்தது . யாரேனும் ரமேஷை மாட்டிவிட வேண்டுமென்றே செய்திருப்பார்களோ . ஸ்ரீ இன்னும் அழுதவாறே இருந்தாள். அவன் அப்போவே வேண்டாம் நான் வரலைன்னு சொன்னான் நான்தான் கம்பெல் பண்ணி கூட்டி வந்தேன் .ராம் எதுவும் சொல்லாமல் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏறிக்கொண்டான் . சிறிது தயங்கியவாறு நின்ற ஸ்ரீயும் ஏறிக்கொண்டாள் . மணி விடிகாலை 3 காட்டியது. மறுநாள் நிறைய பத்ரி கூட படித்த ,வேலை பார்த்த நண்பர்கள் வந்திருந்தனர் . போலீஸ் உன்னிப்பாக ஒவ்வொருவரையும் கவனித்தது. ஸ்ரீ க்கு ஆறுதல் கூற முடியாமல் தவித்தனர் . மீனா வரவில்லை . மதுவந்தி வந்திருந்தாள். பவன் சொல்லமுடியாத துயரத்தில் இருந்தான். பத்ரியின் உடல் அவன் குடும்ப வழக்கப்படி எரிக்கப்பட்டது . ராம் யாரையும் சந்தேகப்படவில்லை