இரவுக்கு ஆயிரம் கைகள் - 17

  • 2.7k
  • 1k

ஒரு கணம் ஸ்தம்பித்து போயிருந்தான். சுதாரித்து கொண்டு பாப்பா பர்த்டே எப்போ என்றான் ?ஆகஸ்ட் 13th . நாம இந்த தடவ கண்டிப்பா செலிப்ரட் பன்றோம் . தீபக் அதிதியை அழைச்சுட்டு போய் chocolates ,பொம்மை எல்லாம் வாங்கி குடு . brave கேர்ள் என சொன்னான் . இன்ஸ்பெக்டர் ரமேஷ் அதிதி சொன்னதை ஆடியோவில் பொறுமையாக கேட்டார் . என் பொண்ணு பாவம் சார். அவளையும் கொன்னுடுவான்னு பயந்துதான் தலைமறைவா இருந்தேன் . தீப்தியும் குமாரும் லவ் பண்ணினாங்க . நாங்க அதை ஏத்துக்கலை. ஏன்னா குமாருக்கும் என் மனைவிக்கும் காண்டாக்ட் இருந்தது உண்மை . இதை ஊர்லயிருந்து வந்த தீப்தி பாத்துட்டா . வேற வழி இல்லாம ஆத்திரத்துல கொன்னுட்டா . மனோகர்க்கு தான் சின்ன பொண்ணு மேல அவ்ளோ நம்பிக்கை . ஒரு வேலை அதிதி அவர்கிட்டேயும் சொல்லி இருக்கலாம் .என்னையும் என் குழந்தையும் விட்டுடுங்க சார்