இரவுக்கு ஆயிரம் கைகள் - 9

  • 3.1k
  • 1.2k

ஷியாம் போலீசுக்கு அதிக தொந்தரவு கொடுக்கவில்லை .குற்றங்களை ஒப்புக்கொண்டான் . அவன் ஏன் அப்புவை கொன்றான் என்ற கேள்விக்கு சிசிடிவி footage எடுத்த விவகாரத்தில் தற்செயலாக நடந்த விபத்து என்றான் . முத்துவின் கொலையையம் ஹமீதின் கொலையையும் தான்தான் ஆள் வைத்து செய்ததாகவும் சொன்னான். மீரா பண விஷயத்தில் பேராசைப்பட்டாள் என்றும் சொன்னான் . அவனை சம்பவம் நடந்த இடங்களுக்கு அழைத்து போனார்கள் . அவன் திரும்பவும் அதை செய்து காட்டினான் . தூத்துக்குடிக்கும் அழைத்து போனார்கள் .ஒரு சாட்சி கூட இல்லையே, கைரேகை கூட இல்லாதது போலீசாருக்கு பெருத்த ஏமாற்றத்தை உண்டு பண்ணியது .இந்த கேஸ் நிக்காதுப்பா என பேசிக்கொண்டார்கள் . ராம் நடப்பவற்றை தெரிந்த source மூலம் நாள்தோறும் அறிந்து வந்தான். எல்லா சாட்சிகளையும் அழித்து விட்ட ஷ்யாமுக்கு போலி பாஸ்போர்ட் கேஸ் மட்டும் வெளியே வர தடையாய் இருந்தது . சிறையில் ஷ்யாமை ஒரு கோஷ்டியினர் இரும்பு