நினைக்காத நேரமேது - 45

  • 2.6k
  • 1.2k

நினைவு-45 அன்பைப் பொழியும் பிறந்த வீடு, புகுந்த வீட்டோடும், நண்பனாக நேசத்தையும் பாசத்தையும் கொட்டும் கணவனோடும் திவ்யாவின் குடும்ப வாழ்க்கை பயணிக்க ஆரம்பித்தது. அவளின் உணர்ச்சிகளை தனதாக்கிக் கொண்டு எப்போதும் அவளை அடைகாக்கும் கோழியாக கண்ணுக்குள் நிறைத்துக் கொண்டு நடமாடினான் சத்யானந்தன். அவ்வப்பொழுது அலுவலக வேலைகளையும் மனைவியின் வசம் ஒப்படைத்து மனதளவில் அவள் சோர்வடையாமல் பார்த்துக் கொண்டான். இத்தனைக்கும் மத்தியில் அவனது அலுவலக வேலைகளும் வியாபார நிமித்தங்களும் அவனது கழுத்தை நெறுக்கிப் பிடித்தன. அன்று காலை மங்கையர்க்கரசியின் நச்சரிப்பால் வேண்டுதல் என்று இருவரும் குலதெய்வம் கோவிலுக்குச் சென்று அபிஷேகம் அன்னதானம் முடித்து திரும்பி இருந்தனர். “இந்த மாதிரி என்னை இழுத்துப் பிடிக்கிற வேலையை இனிமேட்டு வச்சுக்காதேம்மா! எந்த நிலமையில நான் சுத்திட்டு இருக்கேன்னு தெரியாம இருக்கே நீ!” என்று தாயிடம் கோபித்துக் கொண்டு ஓய்வெடுக்க தங்களின் அறைக்கு சென்று விட்டான். மதிய உணவு முடித்துக் கொண்ட திவ்யாவும் தங்களின் அறைக்கு வந்து