நினைக்காத நேரமேது - 44

  • 2.9k
  • 1.4k

நினைவு-44 எல்லா விசேசங்களும் முடிந்து இருவரும் வாழ ஆரம்பித்து ஒருவாரத்திற்கு மேல் கடந்து விட்டது. மறுவீட்டு விருந்திற்கு லட்சுமி வீட்டிற்கும், மாமன் வீட்டு விருந்திற்காக லட்சுமியின் அண்ணன் வீட்டிற்கும் சென்று வந்து ஒரு சுற்று பெருத்தாற் போல் தான் இருந்தனர் இருவரும். உற்ற நண்பனான விஷ்வா மணமக்களை அழைத்து, விருந்து துணிமணி என சிறப்பாக கவனித்து திக்குமுக்காட வைத்து விட்டான்.   அடுத்து நந்தினி வீட்டு விருந்து, ‘உனக்கு நான் விட்டவள் இல்லை’ எனும் விதமாக இருந்தது. "இப்படியே மாத்தி மாத்தி விருந்துக்கு போயிட்டு இருந்தா அவ்வளவு தான், நான் வெடிச்சு போயிருவேன்.‌ நாளையிலிருந்து எப்பவும் போல ஆபீசுக்கும் சைட்டுக்கும் கிளம்புறேன்மா." என்றான் சத்யானந்தன். "டேய்... இன்னும், நம்ம கோயிலுக்குப் போகலியே?" என மங்கையர்க்கரசி கேட்க, "அதெல்லாம் அடுத்த வாரம் பாத்துக்கலாம்மா. புரோடக்சன் எப்படியிருக்குன்னு போயி பாக்கணும். தீபாவளி சீசன் ஸ்டார்ட் ஆகிடுச்சு, ஆர்டர்ஸ் அதிகமா இருக்கும். அதெல்லாம் கவனிச்சா தான்