நினைக்காத நேரமேது - 42

  • 3k
  • 1.5k

நினைவு-42 அவினாசி... சத்யானந்தனின் பூர்வீக வீடு. அவனது தந்தையின் காலத்தில் கஷ்டஜீவனத்தின் போது கை நழுவிப் போயிருந்த வீட்டினை மீண்டும் வாங்கி தனது தாத்தா தேவானந்தன் பெயருக்கே மாற்றிக் கொடுத்து புதுப்பித்து இருந்தான். ‘பார்த்தாயா என் பேரனின் சாமர்த்தியத்தை!’ என்று பெரியவரும் மீசையை முறுக்கிக் கொண்டு பேரனைப் பற்றி பெருமை பேசாத நிமிடம் இல்லை. இப்பொழுது அந்த வேலையை செவ்வனே செய்து கொண்டிருக்க, அவரின் பேச்சினை கேட்கவென ஒரு கூட்டமே அவரைச் சுற்றியிருந்தது. தாலிமாற்ற முகூர்த்தம் குறிக்கப்பட்டதும், “இடம் மட்டும் நம்ம அவினாசி வீடுதான்” என்று சத்யானந்தன் உறுதியாகக் கூறிவிட, அனைவரும் இங்கே கிளம்பி வந்து விட்டனர். கொங்குமண்டல தொட்டிக்கட்டு வீடு. நடுவில் திறந்தவெளி முற்றத்தோடு, நாலாபுறமும் அறைகள் என விசாலமான அந்தக் காலத்து காரைவீடு. வாசல் நிலைப்படியே அவ்வீட்டில் வாழ்ந்தோரின் செல்வச்செழிப்பை கம்பீரமாய் கட்டியம் கூறி நிமிர்ந்து நின்றது. பெரிய பெரிய உத்திரக்கட்டைகள் கொண்டு மச்சடைத்தும், கடைந்தெடுத்த தேக்கு மரத்