நினைக்காத நேரமேது - 41

  • 3k
  • 1.4k

நினைவு-41 எளிய முறையில் பதிவுத் திருமணத்தை முடித்துக் கொண்டு முறைப்படி மருமகளாக புகுந்த வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள் திவ்யா. மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்த மூன்று நாட்களில் மனைவியை தன் கண் பார்வையில் வைத்துக் கொள்வதற்காக இத்தனை சீக்கிரமாய் இப்படியொரு ஏற்பாட்டினை செய்து முடித்திருந்தான் சத்யானந்தன். ஏற்கனவே கோவிலில் தாலி கட்டி திருமணம் முடித்திருந்தாலும் தொழில் நிர்வாகத்தில் மனைவியை அடையாளப் படுத்துவதற்காகவும் ஊராரின் கேள்விகளுக்கு பதிலாகவும் தங்களின் பந்தத்தை சட்டப்படி சாஸ்வதப்படுத்தி விட்டான். சண்முகமும் லட்சுமியும் மணமக்களை வீட்டிற்கு கொண்டு வந்து விட்ட கையோடு காலை உணவை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டனர். திவ்யாவின் உடல்நிலை இன்னும் இயல்பிற்கு வராமல் முகத்தில் சோர்வு அப்பட்டமாய் அப்பியிருந்தது. அவளால் பேச நினைத்தாலும் அவளை அமுக்கி எடுத்திருந்த மூச்சுத் திணறலின் தாக்கத்தால் இன்னும் அவளால் சகஜமாய் நடமாட முடியவில்லை. மிகவும் தளர்ந்த குரலில் மெதுவான பேச்சு, சோர்வான நடை என இன்னும் நோயாளியாகவே சுற்றிக்