நினைவு-39 புது உறவுகள் வந்து சேர்ந்த மகிழ்ச்சி அந்த வீடெங்கும் எதிரொலித்தது. மலர்ந்த முகத்தோடு புன்னகை மன்னனாக வந்திருந்தவர்களை தனது பேச்சிற்கு தலையாட்ட வைத்திருந்தான் சத்யானந்தன். மகுடிக்கு மயங்கிய பாம்பாய் அவர்களும் அவனது பேச்சிற்கு எதிர்பேச்சின்றி அமைதியாய் நின்றனர். "முதல்ல... இந்த சார் மோர்னு கூப்புடுறத நிப்பாட்டுங்க... எனக்கு நீங்க மாமன் மகனுங்க தான். எப்பவும் மச்சானுங்க தான்! மலையேறப் போனாலும் மாமன் மச்சான் தயவு வேணும்." என்று சத்யா கூறி விட்டுச் சிரிக்க, அவர்கள் தான் கொஞ்சம் கூசிப் போய் நின்றனர், இவன் வசதி, உயரத்தைப் பார்த்து. "அது வந்துங்க... உங்க அந்தஸ்து கௌரவம்..." என இழுக்க, “மனுஷனுக்கு மனுஷன் நேர்மையா இருக்கிறது தான் அந்தஸ்து கௌரவம்னு நான் நினைக்கிறேன். அது எப்பவும் உங்ககிட்ட இருக்கும்னு எதிர்ப்பார்க்கிறேன்” என்று தெளிவாய் பேசியவனை மறுத்துப் பேச வார்த்தை வரவில்லை. "சரி... சரி, சட்டுனு எப்படி சொந்தம் கொண்டாடறதுனு பாக்காதீங்க... நீங்க எல்லாரும் லட்சுமி