நினைக்காத நேரமேது - 37

  • 867
  • 312

நினைவு-37 வெகு நாட்கள் கழித்து அன்றைய இரவு உணவினை வெகு சந்தோசமாய் உண்டான் சத்யானந்தன். அங்கிருந்த பொழுதுகள் எல்லாம் பிள்ளைகளுடன் கேலியும் கிண்டலுமாய்ப் போனது. மங்கையர்க்கரசியும் விபரம் அறிந்து மருமகளைப் பார்க்க பதட்டத்துடன் வந்திருந்தார். அப்பொழுதும் தன் தாயிடமும் சத்யா எதைப் பற்றியும் விரிவாக கேட்டுக் கொள்ளவில்லை. எதுவும் நினைவில் இல்லை எனினும் பிள்ளைகள் பேச்சுவாக்கில் ஒவ்வொன்றாகக் கூற ஓரளவிற்கு நடந்தவற்றை ஊகிக்க முடிந்தது அவனால். பிள்ளைகளோடு சாப்பிட்டு முடித்தவன், திவ்யாவின் அறைக்குச் செல்ல, அங்கு உணவும், மருந்தும் லட்சுமி கொடுத்துக் கொண்டிருக்க, அவளோ மறுத்துக் கொண்டிருந்தாள். “மூச்சு முட்டுது ஆன்ட்டி... என்னால முழுங்க முடியல!” என்று சிரமப்பட்டவளை பார்க்க பாவமாகத் தான் இருந்தது. “இப்படியே சொல்லிட்டு இருந்தா வியாதி குணமாகிடுமா? மெதுமெதுவா முழுங்க டிரை பண்ணச் சொல்லுங்க!” என்று மறுத்தவளை ஜாடைப் பேச்சில் ஒரு பார்வையால் அடக்கியவன், அருகே வந்து மாத்திரைகளை உடைத்துக் கொடுக்க, லட்சுமி அசந்தே போனார். ‘இனி