நினைக்காத நேரமேது - 34

  • 3.4k
  • 1.5k

நினைவு-34 தன்போக்கில் வீட்டிற்குள் நுழைந்த சத்யானந்தனை இழுத்துப் பிடித்து, டேய் சத்யா! எங்கே வந்திருக்க தெரியுமா? அதிர்ச்சி விலகாமல் கேட்டான் விஷ்வா. லேன்ட் ஓனரைப் பாக்க வந்திருக்கோம். என்னமோ தெரியாதவனாட்டம் கேக்குற! என்று மெத்தனமாக சத்யா பதில் பேசினான். புரோக்கர் கூறியதை எல்லாம் வைத்துக் கூட்டிக் கழித்துக் கணக்குப் போட, அது திவ்யாவின் இடம் எனப் புரிந்தது விஷ்வாவிற்கு. 'அதுக்கு உன் ஆஃபிஸூக்கு இல்லடா போயிருக்கணும். ஓனர் அங்க தானே இருக்கு. உனக்கு தான்டா மாமியார் வீட்டுக்கு வந்திருக்கோம்னு தெரியல.' விஷ்வாவின் மைன்ட் வாய்ஸ் சரமாரியாக நக்கலடித்துக் கொண்டிருந்தது. வெளிய நின்று பேசிக் கொண்டிருந்தனர். கேட்டைத் திறந்த விஷ்வா, எதுக்கும் வலது காலை எடுத்து வச்சு வாடா! எனக் கூற, நானென்ன மாமியார் வீட்டுக்காடா வந்திருக்கேன்... வலது காலை எடுத்து வச்சு வர்றதுக்கு? என்று சத்யாவின் வாய்மொழியே நிலைமையை உரைத்தது. ‌யாரு கண்டா? எப்ப எது நடக்கும்னு நம்ம கையிலயா இருக்கு?