நினைக்காத நேரமேது - 31

  • 3.7k
  • 1.9k

நினைவு-31 வாழ்வாதாரத்திற்கு படியளக்கும் எம்.டி. ஆயிற்றே... நேரிடையாக கேட்க முடியாமல் ஜாடை‌ பேசிச் சென்றான் ராகவன். தன்னைப்‌போல் தான் மற்றவரும் என்ற துரியோதனன் எண்ணம்‌ கொண்டு. அதைக் கேட்டு கையிலிருந்த பேனா பறந்து போய் சுக்கு நூறாய்ச் சிதறியது, சத்யானந்தன் சுவற்றில் வீசியடித்த வேகத்தில்.  இரு கைகளைக் கொண்டு தலை தாங்கிக் கொண்டான். ஈசன் தலை ஏறிய கங்கையென, மங்கை தான் அவன் தலையை விட்டு இறங்க மறுக்கின்றாளே! அவனுள் சகம் ஆகிப்போன சக்தி அவள் என்று இந்த பித்தனுக்குத் தான் தெரியவில்லையே!  வெளியேறி வந்த திவ்யாவும் தன் இருக்கையில் சென்று அமரவும் இல்லை, வேலையத் தொடரவும் முயற்சிக்கவில்லை. நந்தினியிடம் கூட சொல்லிக் கொள்ளவில்லை. தனது கைப்பையை எடுத்துக் கொண்டு‌ வெளியேற எத்தனித்தாள். அப்போது அவ்விடம் வந்த ராகவனோ, "என்ன திவி? வண்டியை சர்வீஸ்க்கு விட்டுட்டீங்க போல!" அவனின் இரட்டை அர்த்தக் கேள்வியில், உள்ளம் தீப்பற்ற, அவனை முறைத்துப் பார்க்க, "இல்ல...