நினைக்காத நேரமேது - 30

  • 3.2k
  • 1.4k

நினைவு-30 மாலை விளக்கேற்றும் நேரம் மனசில் ஒரு கோடி பாரம் தனித்து வாழ்ந்தென்ன லாபம் தேவையில்லாத தாபம் தனிமையே போ… இனிமையே வா… நீரும் வேரும் சேர வேண்டும் காவலில் நிலை கொள்ளாமல் தாவுதே மனது காரணம் துணையில்லாமல்  வாடிடும் வயது ஆசை கொல்லாமல் கொல்லும் அங்கம் தாளாமல் துள்ளும் என்னைக் கேட்காமல் ஓடும் இதயம் உன்னோடு கூடும் விரகமே ஓ நரகமோ சொல் பூவும் முள்ளாய் மாறிப் போகும் பனி விழும் இரவு  நனைந்தது நிலவு இளங்குயில் இரண்டு  இசைக்கின்ற பொழுது பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது வா… வா… வா… தன்முன் தெரிந்த லட்சுமியின் காலடியைப்‌ பார்த்தும், பவளமல்லி திட்டில் அமர்ந்திருந்த திவ்யா நிமிரவில்லை. தன்நிலையிலேயே அசையாது அமர்ந்திருந்தாள். அவள் அருகில் அமர்ந்து கொண்டவர், அவளது கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டார்.  இரண்டாம் சாமம், கொட்டும் பனி... வெட்டும் குளிர். வெண்பட்டாய்‌ நிலவொளி, ஏங்க வைக்கும்