நினைக்காத நேரமேது - 24

  • 2.9k
  • 1.3k

நினைவு-24 எல்லோர் முகத்திலும் ஆச்சரியத்தின் வெளிப்பாடு அப்பட்டமாகத் தெரிய, நொடிநேரம் பேசவும் மறந்தனர். "இவ்ளோ பெரிய ஆளுங்களா இருக்கீங்க... எப்படி என்னை இவ்வளவு நாளா தேடாம இருந்தீங்க?" என்று கண்ணன், தானாகவே முன்வந்து கேட்டான். "நாங்க உன்னை சூரத்துலயும், மும்பை, கோவானுல தேடிட்டு இருந்தோம். நீதான் நாடோடி மாதிரி அப்பப்ப‌ ரோட் டிரிப் போறவனாச்சே!" என்று மங்கையர்க்கரசி கூறினார். "அம்மா! நாங்க உங்களை எப்படி நம்புறது?" என்ற சண்முகம் கேள்விக்கு, "சார்… கூகுள்ல போட்டாலே இவன் விபரம் வருமே! இளம் தொழிலதிபர்கள் லிஸ்ட்ல முதல் ஆளா இருப்பானே! நீங்க எப்படி கண்டுபிடிக்காம விட்டீங்க?" என்ற விஷவாவின் கேள்விக்கு, "நாங்க, எங்க கண்ணனை இவ்ளோ பெரிய ஆளா எதிர்பாக்கல தம்பி." என்றார் லட்சுமி. "இவன் கையில இருக்கிற மோதிரத்துல எஸ்.ஏ.னு லெட்டர்ஸ் இருக்கும். சத்யானந்தன் தான் அது. அவங்க அப்பா இறந்த பின்னாடி என்னோட மாங்கல்யத்துல செஞ்ச மோதிரம் அது." என்று மங்கையர்க்கரசி