நினைவு-19 சண்முகமும் லட்சுமியும் ஓரளவுக்கு திவ்யா வீட்டில் பொருத்திக் கொண்டனர். பாதி வெள்ளாமையில் இருந்த விளைநிலங்களை ஆட்களிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு திவ்யாவின் வீட்டிற்கு குடி வந்து விட்டார்கள். அவர்களிடம் பிள்ளைகள் கேள்வி மேல் கேள்வி கேட்க, திவ்யா அக்காவுக்காக சிறிது நாள் தங்கி விட்டுப் போகலாம் என சொல்லப்பட்டது. தோட்ட வீட்டில் விசாலமாக இருந்தவர்கள், சற்று சிரமப்பட்டாலும் பழகிக் கொண்டனர். சண்முகமும் பிள்ளைகளை, எந்த இடத்திலும் பொருத்திப் போகும்படியாகத் தான் வளர்த்திருந்தார். எனினும் புது இடம் சில பிள்ளைகளுக்கு பிடித்தமாயும், சில பிள்ளைகளுக்கு பிடித்தமின்மையாகவும். "அதென்னமா கணக்கு? பதினஞ்சு பிள்ளைக..." என்று கண்ணன் எடுத்து வந்த பொருட்களை ஒதுங்க வைக்க உதவிக் கொண்டே கேட்டான். "அதுவா கண்ணா... இவர் தாத்தாவுக்கும் பாட்டிக்கும் பனிரெண்டு பிள்ளைகளாம்! அந்த காலத்துல அதெல்லாம் சாதாரணம். இவரும் சின்னப் பிள்ளையா இருக்கும் போது தாத்தாகிட்ட, நான் உங்களை முந்தி காட்டுறேனு பந்தயம் கட்டுனாராம்." என்று நமட்டுப்