நினைக்காத நேரமேது - 14

  • 3.3k
  • 1.7k

நினைவு-14 தனித்திருந்தவன் தன்னைச் சுற்றி மீண்டும் ஆழ்ந்து கவனிக்க, அது மருத்துவமனை என்பதும், தனக்கு சிகிச்சை நடைபெறுகிறது என்பதும் மெதுமெதுவாகப் புரிய ஆரம்பித்தது. எனினும் எவ்வளவு யோசித்தும் தான் யாரென்பது மட்டும் அவனுக்கு சுத்தமாய் பிடிபடவில்லை. ஆழ்ந்து யோசிக்க யோசிக்க தலைவலி தான் மிஞ்சியது. ‘கடவுளே இதென்ன சோதனை? நான் யார்!” உள்மனதின் அலறல் அவனது மனதை வண்டாய் குடைந்து பாடாய்படுத்தியது. அது அரசு மருத்துவமனை. துணைக்கும் யாருமில்லை. உடனிருப்பவர்களின் உந்துதலை, பணியாளர்களுக்கான சிறப்பு கவனிப்புகளைப் பொறுத்து தான் நோயாளிக்கும் சிறந்த கவனிப்பும் இருக்கும். அதிலும் அந்த மருத்துவமனையில் பிரசவம், குடும்ப கட்டுப்பாடு மற்றும் ஆரம்பகட்ட சிகிச்சைகள் மட்டுமே நடைபெறும் வகையில் இருந்தது. சிறப்பு சிகிச்சைக்கோ, மேல்மட்ட அறுவை சிகிச்சை முதலியவற்றிற்கு நோயாளிகள் கோவை ஜி.எச்.தான் அனுப்பி வைக்கப்படுவர். விபத்து நடந்த இடம் அவினாசிக்கும் கோவைக்கும் இடையில் என்பதால் அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தனர். மருத்துவருக்கும் அவன் நிலைமை சிறிது சந்தேகத்தை