நினைக்காத நேரமேது - 8

  • 3.8k
  • 2.1k

நினைவு-8 கணவனும் மனைவியும் செய்வதறியாது நின்றது ஒரு நிமிடம்தான். பின்னர் லட்சுமி ஜாடையாக, ‘பேசிப் புரிய வைங்க’ என்று கோடிட்டுக் காட்டவும் தொண்டையை செருமிக்கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தார் சண்முகம். “கோபப்படாதே திவிம்மா!” “இது கோபம் இல்லை அங்கிள், என்னோட அதிர்ஷ்டம். அவங்க சுயநலம் இத்தனை சீக்கிரமா வெளிவந்ததுல நான்தான் தப்பிச்சேன்.” என்று பெருமூச்செறிந்தாள் திவ்யா. "சரி, அவங்கள விடு... உன் மேல அவங்களுக்கு அக்கறை இல்ல. எங்களுக்கு இருக்கா, இல்லையா!?" "இல்லைன்னு சொல்லுவேனா?" "அப்படினா, எப்பப் போய் நாங்க பேசட்டும்?" சண்முகம் கேட்க "ஏன் அங்கிள்? இப்ப நான் போனா அவங்க அம்மா என்னைய ஏத்துக்க மாட்டாங்கனு நினைக்கிறீங்களா?" "அவங்க அம்மா உன்னைய ஏத்துக்கறதாம்மா பிரச்சனை?" "கண்ணா மேல சந்தேகமா அங்கிள்?" "கண்டிப்பா கண்ணா மேல இல்லம்மா... சந்தேகம் எல்லாம் சத்யானந்தன் மேல தான். ஆனா எடுத்து சொன்னோம்னா கட்டாயம் புரிஞ்சுக்குவார் திவிம்மா!" "நானும் அதையே தான் அங்கிள் சொல்றேன்.