நினைக்காத நேரமேது - 5

  • 4.4k
  • 2.5k

நினைவு-5 நண்பனின் முன்னேற்றம் கண்டு பொறாமைப்படாமல், அதுவும் தன்னால் கை கொடுத்து தூக்கி விடப்பட்டவன் என்ற எண்ணமும் சிறிதும் இல்லாமல் பேசும் நண்பனைப் பார்த்தவர்க்கு, நட்பு விஷயத்திலும் தான் கொடுத்து வைத்தவன் என்றே தோன்றியது. தனது எம்.டி இப்படி மனம் விட்டு பேசுவதைக் கண்ட‌ திவ்யாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் பெர்சனல் விஷயம் பேசும்போது தான் அங்கிருப்பது சரியா என்ற எண்ணமும் எழுந்தது. அதற்குள் அவர்கள் ஆர்டர் ‌செய்திருந்த உணவு வகைகள் ‌வரவும் பேச்சு சற்று மாறியது. "அப்புறம் தேவா! உன் பேரனைப் பத்தி சொல்லு. இப்ப பிசினஸ் வட்டாரத்துலயே அவன் தான் நம்பர் ஒன்னா இருக்காம் போல!" "நம்பர் ஒன், நம்பர் டூ இதுல எல்லாம் எனக்கும் அவனுக்கும் நம்பிக்கை இல்லை ராமா! இன்னைக்கு நாமன்னா... நாளைக்கு இன்னொருத்தர். அதனால நாம செய்யறதை சிறப்பா செய்யணும். அவ்ளோதான்!" "பரவாயில்ல தேவா! உனக்கு கை கொடுக்க பேரன் வந்துட்டான். என் பேரனுங்க