குறுந்தொகை மனையாள்

  • 15.8k
  • 1
  • 4.9k

யாழிசையின் சின்னஞ் சிறு அதிர்வுகளில் மராம்பு மலர்கள் மெள்ள அசைந்து கொடுத்தன. பெரும்பொழுதுகளின் சுழல் காற்றுப் புழுதியில் இருப்பை மர நிழலில் நின்றிருந்தாள் ஒருத்தி. தூர தேசம் சென்ற தலைவனை எண்ணி எண்ணி வள்ளுவனின் பசப்புறுபருவரலால் ஆட்கொண்ட எத்தனையோ தலைவிகளில் இவளும் ஒருத்தி. பிரிவுத்துயர் காரணமாக தலைவிக்கு ஏற்படும் இந்த உளவியல் சார்ந்த நோய்க்கு இன்ன மருந்து என்று இன்று வரை யாரும் கண்டறியவில்லை. இப்போது இந்த பசலை நோயால் வாடும் தலைவியை எங்கனம் கொண்டு சரி செய்வது. ஹைபோக்ரோமிக் அனிமியா என்று இன்றைய மேதாவிகள் சொல்லி திரிவது உண்டு. ஆனால் முகப் பொலிவும் மேனி அழகும் மட்டும் பறித்துக் கொள்ளும் இந்த நோய் எப்படி ஒருத்தியை தொற்றிக் கொண்டது என்று கேட்டால் மவுனத்தை தவிர வேறொன்றையும் தரமுடியாது. பசுவின் மடியில் இருந்து பாலை உறிஞ்சும் நிலத்தை போல இந்தப் பொல்லாத பசலை நோய் அவளை தின்று மிச்சத்தை இருப்பை மரத்தின்