அனிதா - 1

  • 29.1k
  • 4.8k

அனிதா - பகுதி 1 வாழ்க்கையில் எல்லாம் மாறிவிட்டது, ஆனால் மாறாத ஒன்று நினைவுகள் மட்டுமே. பயணங்கள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது, இருந்தாலும் கூட ஏதோ ஒரு தருணத்தில் பழைய சுவடுகள சந்தோசம் அடைய செய்கிறது மற்றும் சோகத்தில் ஆழ்த்துகிறது. அனிதாவின் வாழ்க்கை பயணத்தில் அவள் சந்தோசமாக இருந்ததை விட சோகமே அதிகம். அவளை பொறுத்தவரை அவள் குடும்பத்திற்கு வெறும் பணம் தரும் இயந்திரமாகவே பார்க்கபட்டாள். குழந்தை பருவம் தொடங்கி தந்தையை வெறுக்கும் ஒரு குழந்தையாகவே அவளின் வாழ்க்கை பயணம் தொடங்கியது.ஒன்றுக்கும் உதவாத தந்தை. கணவனே கண் கண்ட தெய்வம் என்று வாழும் அம்மா. அங்கே தொடங்கியது அனிதாவின் தனிமை. 'அம்மா என்ன சொன்னாலும் புரிஞ்சிக்கவே மாட்டாங்க ' என்பதே அனிதாவின் மனதில் அநேக நேரங்களில் எழ கூடிய ஒரு ஆதங்கம்.