உறக்கம் தெளிந்து கண்கள் வெளிச்சத்தைக் கண்டது. காலை கடன்களை முடித்து விட்டு வானொலிக்கு உயிர் கொடுத்தேன். "Corona virus தொற்று பெருமளவில் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த சுகாதார துறை அமைச்சு தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வரு --- " வெறுப்போடு வானொலியை முடுக்கினேன். என் சிந்தனை துளிகள் தூவத் தொடங்கியது. "ச்சே.. எங்க பார்த்தாலும் corona... இந்த நாசம் புடிச்ச கிருமி எப்பதா போகுமோ... பெரும் தலைவலி..." வெறுப்பும் சினமும் என்னை முழுமையாகக் கவ்வியது. மக்கள் கொத்துக் கொத்தாய் மடிகின்றார்களாம். அதனைக் கொண்டு என்ன செய்வது? அழுது புரண்டாலும் மான்றோர் வருவதில்லை என்று சொல்லும் அளவிற்கு அறிவு சார்ந்த நம் முன்னோர்கள் இருந்தனர். இருந்தும் என்ன பயன்? இறந்த சவங்களுக்கு ஆதரவு பேசும் வகையில் ஊரடங்கு பேரடங்கு எனப் பல சோதனைகள். என்னைக் கேட்டால் நான் சொல்வது ஒன்றுதான். மடிந்தோர்