சியம்காவ் மலை முகடுகளும் அம்மர்கோ மலை முகடுகளும் போர் தொடுத்து கொண்டிருந்த நேரம் அது. அந்த முகடுகளினிடையே சால்சாச் நதி வெள்ள பெருகெடுத்து வழிந்தோடியது. அவன் உதடுகள் இரண்டும் அவள் இதழ்களின் மேல் கிடத்தப்பட்டிருந்தது. அவள் கண்களும் அவன் கண்களும் சல்லாப்பித்து கொண்டிருந்தன. முகத்தில் வியர்வை துளிகள் வழிய இதழில் காதல் கசிந்து கொண்டிருந்தது. அவன் வலது கை அவள் கன்னங்களை வருடி கொண்டிருந்தது அவன் இடக்கையோ அவள் இடுப்பின் அளவினை அளந்து கொண்டிருந்தது. அவள் இரு கைகளும் அவன் பின்னந்தலையில் பின்னப்பட்டிருந்தது. சுற்றி தன் தளபதிகள் வீரர்கள் நண்பர்கள் நலம்விரும்பிகள் பாதுகாவலர்கள் என யாரையும் அந்த காதல் ஜோடி கண்டுகொள்ளவில்லை. இரண்டு நிமிடங்கள் வரை நீடித்தது அந்த காதல் போர் முத்தம்.சுமார் இருபத்தியெட்டு மணி நேரம் நான்கு நிமிடம் நாற்பத்தைந்து விநாடிக்கு முன்.அந்த சாலைகளில் அவ்வளவாக கூட்டம் இல்லை. நாலப்பக்கமும் குண்டுகள் முழங்கி கொண்டிருந்தது.தெருவெல்லாம் குருதி ஆறு ஓடி கொண்டிருந்தது.