வேலைக்காரி

  • 31k
  • 5.9k

வேலைக்காரி திவ்யாவும் வித்யாவும் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் பக்கத்து வீடுகளில் தான் குடியிருந்தார்கள். அவர்கள் கணவர்களுக்கு நல்ல வேலை இருந்ததால் இருவரும் வீட்டை நிர்வாகம் பண்ணி வந்தார்கள். தினமும் சமையல் வேலைகள் முடிந்தால், இருவரும் கொஞ்சம் அரட்டை அடிப்பது அவர்களது பழக்க வழக்கங்களில் ஒன்று. அக்கம் பக்கம் உலகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியவும் அந்த அரட்டை அரங்கங்கள் உதவியது. ஊரில் நடக்கிற நல்லது கெட்டதை பற்றி தெரிய வந்தது. இருவருக்கும் வீட்டை சுற்றம் பண்ணவும், பாத்திரங்கள் தேய்க்கவும் ஒரே வேலைக்காரி தான். வேலைக்காரிக்கு மாத சம்பளம் மூவாயிரம் ரூபா தர வேண்டியிருந்தது. மாதத்தில் குறைந்த பக்ஷம், ஐந்து நாளாவது ஏதாவது ஒரு சாக்குபோக்கு சொல்லி வேலைக்கு அவள் வரமாட்டாள். ஏதோ மாதத்தில ஒன்றோ இரண்டோ லீவ் எடுத்தால் பரவாயில்லை. கிட்டத்தட்ட ஒரு வாரம் அல்லவா இவள் லீவ் எடுத்துக்கொள்கிறாள். ஏதோ கொஞ்சம் லீவு எடுத்தாலும்