திருப்பம்

  • 32.1k
  • 1
  • 7.3k

திருப்பம் பரிமளா அப்போது தான் பத்தாவது முடித்திருந்தாள். அந்த காலத்தில் பள்ளிக்கூட படிப்பு முடித்தாலே மிக பெரிய விஷையம். அவள் மிக்க மகிழ்ச்சியில் இருந்தாள் பால்வடியும் முகம், மயிலழகு, அன்ன நடை. இளமை ஊஞ்சல் ஆடும் பர்வம் அவள் உதட்டில் எப்போதும் ஓர் சிறு புன்னகை இருக்கும். அவள் எப்போதும் கலகலப்பாக இருப்பாள். அந்த காலத்தில் பிளஸ் 2 படிக்க, காலேஜ்க்கு தான் போகணும். அவள் விஞ்ஞானம் படிக்க தேர்ந்தெடுத்திருந்தாள் . அந்த நேரத்தில் தான் முகேஷும் அறிமுகமானான். அவன் வட்ட சதுர முக அமைப்பில், வாட்டசாட்டமாக அழகாக தோத்தமளித்தான் . அவர்களுக்குள் ஓர் இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டது. இது வரலும் அப்படியொன்றும் தோன்றவில்லையே என்று நினைத்தாள். இவனை பார்த்ததில் இருந்து ஏதோ ஒரு சலனம் மனசுக்குள் ஏற்பட்டது. தான் ஏன் இவனை பற்றியே நினைக்கிறோம் என்று அவளுக்கு புரியவில்லை. அடிக்கடி அவனிடம் தனியாக சந்தித்து பேச மனம் ஏங்கியது.